ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 செப்டம்பர், 2012

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பேரணி

 திருநெல்வேலி, செப். 8:÷இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வீரவணக்க பேரணி நடத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.  ÷இதுகுறித்து சனிக்கிழமை திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இம்மாதம் 11-ம் தேதி பரமக்குடியில் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வீரவணக்கப் பேரணி நடத்தப்படும். பார்த்தீபனூர் விலக்கில் இருந்து பரமக்குடி வரை இப்பேரணி நடத்தப்படுகிறது.÷நினைவு நாள் நிகழ்ச்சியில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ்பஸ்வான் எம்.பி. பங்கேற்கிறார். இதில் தேவேந்திர குல மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். ÷இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.  ÷சிவகாசி வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக