தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின குருபூஜை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
கோவையில் இருந்து வந்த 100 பேர் கொண்ட மத்திய அதிவிரைவு படையினர் இம்முறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 23 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நினைவு இடத்திற்கு வரும் வகையில் 25 மாற்று வழித்தட மையங்கள் அமைக்கப்படுகிறது. முக்கிய இடங்களில் நவீன சுழல் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படுகிறது. அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அவசர மருத்துவ வசதிக்காக 20 ஆம்புலன்சுகள், 5 மருத்துவக்குழுக்கள் மற்றும் 14 தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்படும். மேலும் 15 விபத்து மீட்பு வாகனங்களும் பரமக்குடி நகர் பகுதியை சுற்றிலும் நிறுத்தப்படும். நாளை பள்ளி, கல்லூரிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.
இமானுவேல்சேகரன் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
செல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் செல்லூர் கிராம மக்கள் காலை 7 மணிக்கும், அ.தி.மு.க. சார்பில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் சுந்தரராஜன் காலை 7.30 மணிக்கும், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி எம்.பி. ரித்தீஷ், தி.மு.க. அம்பேத்கார் வக்ககீல் பிரிவு கந்தசாமி ஆகியோருக்கு காலை 8 மணிக்கும்,
தேவேந்திர இளைஞர் பேரவை அழகர்சாமி பாண்டியன் காலை 8.30-க்கும், தியாகி இமானுவேல் பேரவை நிறுவனர் சந்திரபோஸ் 8.45-க்கும் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ. (தி.மு.க.) காலை 9 மணிக்கும், திராவிடர் விடுதலைக்கழகம் குளத்தூர் மணி காலை. 9.30 மணிக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சம்பத் காலை 9.45-க்கும், ஆதித்தமிழர் பேரவை அதியமான் காலை 10.15-க்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் காலை 10.30-க்கும், நாம் தமிழர் கட்சி சீமான் காலை 11 மணிக்கும், மக்கள் விடுதலை கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் காலை 11.15-க்கும், தேவேந்திரரர் அறக்கட்டளை வக்கீல் சந்திரன் காலை 11.30-க்கும், புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி பகல் 12 மணிக்கும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜி.கே.மணி பகல் 12.30-க்கும், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம்பிரபு பகல் 12.45-க்கும், பி.ஜே.பி. சார்பில் மாநில பொதுச்செயலாளர் சுப.நாகராஜன் பகல் 1 மணிக்கும், மள்ளர் இலக்கிய கழகம் அண்ணாமலை பகல் 1.30-க்கும், தமிழ்ப்புலிகள் நாகை திருவள்ளுவன் பகல் 1.45-க்கும், தியாகி இமானுவேல் பேரவை எம்.ஊர்க்காவலன் தேசிங்குராஜா பகல் 2 மணிக்கும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜான்பாண்டியன் பகல் 2.30-க்கும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சவுந்திரராஜன் மாலை 3 மணிக்கும், ம.தி.மு.க. சார்பில் கணேசமூர்த்தி மாலை 3.15-க்கும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொருளாளர் ஜீவன்குமார் மாலை 3.30-க்கும், தமிழர் தேசிய கூட்டமைப்பு பழ.நெடுமாறன் மாலை 3.45-க்கும், வீரதேவேந்திரர் பேரவை சார்பில் பி.எம்.பாண்டியன் மாலை 4 மணிக்கும், மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் சார்பில் துரை அரசன் மாலை 4.15-க்கும், மருதம் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்ராமு மாலை 4.30-க்கும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக