ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 16 செப்டம்பர், 2010

இம்மானுவேல் சிலை உடைப்பு: நெல்லையில் “திடீர்”மறியல் 50 பேர் கைது தென்மாவட்டங்களில் பதட்டம் !!

மதுரையில் தியாகி இம்மானுவேல் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் முருகன் தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. இதே போல் கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தில் முத்துக்குமார் தலைமையில் மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர் தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக தேவேந்திரர் மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேவேந்திரர் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் நாஞ்சை ரவி தேவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியாகி இமானுவேல் சேகரனின் 55-வது நினைவு நாளை கடைப்பிடிக்கிற இந்த நேரத்தில் எங்களது சமூக உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் விதமாக மதுரையில் அவரது சிலையை உடைத்துள்ளனர். அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடனே கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் தென்மாவட்டங்களில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினமான செப்டம்பர் 11-ம் தேதி ஒட்டுமொத்த தேவேந்திர குல மக்கள் சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார். இதுபோல் நெல்லை மாவட்ட மள்ளர் இலக்கிய கழகம் சார்பாக விடுத்துள்ள அறிக்கையில், இம்மானுவேல் சிலை இருந்த அதே இடத்தில் மீண்டும் வெண்கல சிலை அமைத்திடவும், சிலையை உடைத்த விஷமிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்திடவும் தவறினால் கண்டன போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக