ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

ஆதிதிராவிடர் பெயர் வேண்டாம்

ஆதிதிராவிடர் பெயர் வேண்டாம்!க.பழனிசாமி, வணிகவரித் துறை துணை ஆணையர் (ஓய்வு), ராமநாதபுரம், கோவையிலிருந்து எழுதுகிறார்: மழைக் கடவுளாம் இந்திரனை குல தெய்வமாகக் கொண்டு, சங்க காலத்தில் மள்ளர்கள் என்று அழைக்கப்பட்ட, மூவேந்தர் பரம்பரையில் வந்த உழவர் பெருமக்களான தேவேந்திர குல வேளாளர்களை மட்டும், முதல்வர் இன்னும் ஆதிதிராவிடர் என்று அழைப்பதேன்? தெரிந்தே அவ்வாறு அழைக்கிறாரா?வடக்குத் தமிழகத்தில் உள்ள ஆதி திராவிடர்களின் ஓட்டு வங்கியில் மயங்கித்தான், திருமாவளவனை பக்கத்தில் வைத்துக் கொள்கிறார். தெலுங்கு பேசும் அருந்ததிய மக்களை, தெலுங்கு பேசும் விஜயகாந்த் தன் வசம் இழுத்து விடுவாரோ என்ற அச்சத்தால் தான், புதிய கண்டுபிடிப்பாக, அருந்ததிய மக்களை அரவணைத்துக் கொள்கிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.அருந்ததியர்களை அவர் ஆதிதிராவிடர் என்று அழைப்பதில்லை; ஆனால், தேவேந்திரகுல வேளாளர்களை ஏன் ஆதிதிராவிடர் என்று அழைக்கிறார்?தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பான்மை மக்கள்தொகை கொண்டவை, மூன்று இனம் மட்டுமே. தேவேந்திர குல வேளாளர்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் அருந்ததியர்கள். இவர்களை கொச்சைப்படுத்தி மகிழ்கிற இனப்பெயர்கள், முறையே பள்ளர், பறையர் மற்றும் சக்கிலியர்.இவர்களுக்கு மட்டுமல்ல... பெரும்பாலும் எல்லா இனமக்களுக்கும் அது போன்று ஒரு பெயர் உண்டு. பிராமணர்கள், அய்யர் இனத்தவர்களை பார்ப்பான் என்றும், முக்குலத்தோரை கள்ளர்கள், நாடார்களை சாணர்கள், வன்னியர்களை பள்ளியர்கள், முதலியார்களை கைக்கோளர்கள், நாயுடுகளை வடுகர், தெலுங்கு நாயக்கன் என்றும், செட்டியார்களை கோமுட்டி என்றும் சொல்லி மகிழ்கிற மக்கள் வாழ்கிற மாநிலம் இது!இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, தமிழக முதல்வர், அந்தந்த இனமக்களின் பெருமைக்குரிய பெயர்களைக் குறிப்பிட்டு ஒரு புதிய கவுரவத்தையும், தன்னம்பிக்கையையும் வழங்குவதே."உழுத சால் மிக ஊறித் தெளிந்த சேறு இழுது, இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்' என்று கம்பர் பாடியுள்ளார்.அருந்திறல் வீரர்!; பெருந்திறல் உழவர்! இவர்களே மள்ளர்கள் என்கிறது, கி.பி., ஒன்பதாம் நூற்றாண்டு திவாகர நிகண்டு.அன்று முதல், இன்று வரை, உழவுத் தொழில் செய்பவர்கள்; மாட்டு இறைச்சி உண்ணும் மக்களிடையே, இன்றும் மாடுகளை போற்றி வணங்கும் மக்கள்; ஒருவனைக் கொல்வது என்றாலும், நெஞ்சிலே குத்திக் கொல்பவர்கள் மட்டுமல்ல, கொல்லப்படுவது என்றாலும், நெஞ்சிலே காயம் பட்டு மரித்துப் போக விரும்பும் மக்கள்; இன்னமும் நூற்றுக்கு மூன்று பேர் கூட பட்டதாரிகள் இல்லாத பரிதாபத்திற்கு உரிய மக்கள்!; இதுதான் இந்த மக்களைப் பற்றிய கணிப்பு.இத்தகைய மக்களை, தேவேந்திரகுல வேளாளர் என்று தமிழக முதல்வர் அழைத்தால், ஒரு கோடி மக்களும், உள்ளம் மகிழ்ந்து, அவரை வாழ்த்துவர். நற்பண்புகளை உருவாக்குகிற கல்வியை இவர்களுக்கு வழங்க, முதல்வர் முன்வர வேண்டும்.இவர்களின் பெற்றோர் அருந்துகிற மதுபானத்தில் கிடைக்கும் வரித் தொகையில், இலவச தொலைக்காட்சி பெட்டிகளும், அரிசியும் கொடுப்பதற்கு பதிலாக, பள்ளி இடைநிற்றல் என்று அபாயகரமான நச்சு சுழலில் சிக்கி காணாமலே போய்விடுகிற லட்சக்கணக்கான ஏழை பள்ளி மாணவர்களை, கல்லூரிப் படிப்பு படிக்க வைத்து, ஒழுக்கமானவர்களாக உயர வழி செய்ய வேண்டும்.பள்ளர், குடும்பர், பண்ணாடி, தேவேந்திரகுலத்தான், மூப்பர் என்று பல வகையான பெயர்களிட்டு ஜாதிச் சான்றிதழ் பெற்றுக் கொண்டிருக்கிற நிலையை மாற்றி, இந்த அனைத்து வகை உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து, தேவேந்திரகுல வேளாளர்கள் என்று பெயரிட வேண்டும்.இந்த ஒரு ஆணையின் மூலமாக, இந்த இனத்து மக்களின் தன்னம்பிக்கை உயரும். தன்னம்பிக்கை உயர்ந்தால், கல்வியில் மேன்மை மிக்கவர்களாக உயர்வர். வன்முறையற்ற நற்பண்புகள் உருவாகி, நல்ல பண்புமிக்க மனிதர்களாக இந்த இனத்து மக்கள் மாறுவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக