ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 8 செப்டம்பர், 2010

கலைஞர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அருகில் பசுபதி பாண்டியன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு: திருச்சி பரபரப்பு

கலைஞர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அருகில் பசுபதி பாண்டியன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு: திருச்சி பரபரப்பு கலைஞர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அருகில் பசுபதி பாண்டியன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு: திருச்சி பரபரப்பு திருச்சியில் நாளை முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் திமுக பொதுக்கூட்டத்திற்கு அருகில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். திருச்சியில் மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார். திருச்சி மாவட்ட புதிய ஆட்சியரக கட்டடம் திறப்பு விழா, வட்டாட்சியர் அலுவலகத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் திறப்பு விழா, அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நாளை ஆட்சியரக வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் முதல்வர் கருணாநிதி, மாலை 6 மணிக்கு கரூர் புறவழிச் சாலையில் கலைஞர் அறிவாலயம் அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் சிலையைத் திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து இங்கு திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்துவது என மாவட்ட திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த இடத்தில் அதிகம் பேர் அமரமுடியாது என்பதால் மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணியை மாவட்ட திமுக மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து, மன்னார்புரம் பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த ராணுவ மைதானத்திற்கு அருகில் பசுபதி பாண்டியன் 41/2 ஏக்கரில் இடம் வாங்கியுள்ளார். திருச்சி திமுக துணைமேயர் அன்பழகன், அந்த இடத்தில் நுழையவிடாமல் ஆட்களை வைத்து தன்னை மிரட்டிவருவதாக பசுபதி பாண்டியன் கூறியுள்ளார். அவர் மேலும், ''நான் இது சம்பந்தமாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்கள் புகாரை வாங்க மறுக்கிறார்கள். எனவே நாளை என் தலைமையில் 2 ஆயிரம் பேர் நில மீட்பு போராட்டம் நடத்தவிருக்கிறோம். முதல்வர் பொதுக்கூட்ட மைதானத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவது உறுதி''என்று தெரிவித்துள்ளார். நன்ற நக்கீரன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக