ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 1 மே, 2015

புதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 1993..

ஜுன் 10, தேவேந்திரகுல வேளாளர் சமூக கல்வியாளர்கள், மருத்துவர்கள்,
பொறியாளர்கள், தொழில் துறையினருக்கு தலைவர் கடிதம் - 12/06/1993 மதுரை அழகர் கோயில் சாலை தமிழ்நாடு உணவு விடுதியில் கூட்டம் - அழைப்பு விடுப்பு - தமிழகம் முழுவதும் உள்ள தேவேந்திர குல வேளாளர்களுக்கு தலைவர் கடிதம்.
ஜுன் 12, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்புத் தலைவராகத் தலைவர் தேர்வு - தேவேந்திரர்களுக்கு தனிவாரியம் - தேவேந்தர்களை தனி இனமாக அங்கீகரிக்க கோரிக்கை - அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமை - தனிக்குடியிருப்பு கோரிக்கை - இராமநாதபுரத்திற்கு இம்மானுவேலர் மாவட்டம் என அறிவிக்க கோரிக்கை - அரசு நிலம் வேண்டும் - உயர் அரசு பதவிகளில் தாழ்த்தப்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் வாய்ப்பு - 20மூ இடஒதுக்கீடு - தேனி, மதுரை, செம்பட்டி நிலக்கோட்டையில் நிறுவி அப்புறப்படுத்தப்பட்ட அம்பேத்கர், இம்மானுவேலர் சிலைகளை அரசு உடனே நிறுவ கோரிக்கை.
தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் (Fedaration of Tamil Nadu Devedra Kula Velalars Associations) கூட்டமைப்பு உதயம்.
ஜுலை 24, பொரியார், சேலம், தர்மபுரி மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு செயல் வீரர்கள் கூட்டம் - மேட்டூர் ஆனந்தா உணவகம் - 18 சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை என குற்றச்சாட்டு - வீடுகள் முற்றுகையிடப்படும் எச்சரிக்கை - 20 க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உயர்ந்த பதவிகளில் - இடம் இல்லை - டி.ஜி.ஜி அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு பொறுப்பு - தாழ்த்தப்பட்டோரை சட்டம் ஒழுங்குப் பிரிவில் நியமிக்க கோரிக்கை - இம்மானுவேலர் மாவட்டம் - அம்பேத்கர் சிலைகளை நிறுவ மாவட்ட நிர்வாகங்கள் எதிர்ப்பு - காவல்துறைக்கு கண்டனம்.
ஆகஸ்ட் 24, தேவேந்திரகுல வேளாளர் சமூகம் புறக்கணிப்பு - கோவைப் பகுதியில் பின்னலாடை சிப்காட் உருவாக்க முயன்ற முருகராஜ் ஐ.ஏ.எஸ் இடமாற்றம் - தமிழகத்தின் முதல் பெண் போலீஸ் அதிகாரி பிரேமாவதி (தேவேந்திரர்) இடம் மாற்றம் - தலைவர் கண்டனம்.
செப்டம்பர் 05, மதுரை முதல் தூத்துக்குடி வரை தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு நிகழ்ச்சிகளுக்குத் தடை - கோவையில் தலைவர் கைது - தொற்றுநோய் வியாதி சிறைக்கைதிகளுடன் பாளை சிறையில் அடைப்பு - விடுதலை.
அக்டோபர் 19, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இம்மானுவேல் தேவேந்திரர் பெயர் சூட்டக்கோரிதேவேந்திரகுல வேளாளர் சமுதாய சட்டமன்ற உறுப்பினர்களை (25.10.1993 அன்று) முற்றுகையிடும் போராட்டம் அறிவிப்பு.
அக்டோபர் 22, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் - சட்டமன்ற உறுப்பினர்களை முற்றுகையிடும் போராட்டம் - சட்டமன்ற உறுப்பினர் அலுவலம் நோக்கி ஊர்வலம் நடத்த திட்டம் - டி.ஜி.பி. அனுமதி மறுப்பு - முதல்வர் தலையிட தலைவர் கோரிக்கை.
அக்டோபர் 25, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு - தேவேந்திரகுல வேளாளர் சட்டமன்ற உறுப்பினர்கள் நிலக்கோட்டை பொன்னம்மாள், மானாமதுரை, சங்கரன்கோயில் சட்டமன்ற உறுப்பினர்கள் முற்றுகை - தலைவர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
நவம்பர் 30, தமிழ்நாட்டில் இனக்கலவரம் தடுக்க சமாதானக்குழு அமைக்க வேண்டும் - உள்துறை செயலாளரிடம் மனு - 1993 செம்பட்டியில் சுந்தரலிங்கன் சிலை கலவரம் - வழக்குகளை திரும்பப் பெறக் கோரிக்கை - இம்மானுவேல் தேவேந்திரர் பெயரை இராமநாதபுரத்திற்குச் சூட்ட கோரிக்கை.
டிசம்பர் 08, 1998 ஆம் ஆண்டு பல்வேறு வழக்குகளில் கைதானவர்கள் - கூட்டமைப்பின் உறுப்பினர் பசுபதிபாண்டியன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய கோரிக்கை.
டிசம்பர் 19, தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு - தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரை துணைவேந்தராக நியமிக்கக் கோரிக்கை - தமிழக ஆளுநரிடம் தலைவர் மனு.
டிசம்பர் 25, இனியும் இடஒதுக்கீடுகள் மட்டும் சமூகநீதியை நிலைநாட்ட உதவுமா சிந்திக்கும் வேளையில் என்ற தலைப்பில் கட்டுரை - வெளியீடு.
டிசம்பர் 29, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் மக்களுக்கு முழுப்பலனைத் தர தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் - தலைவர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக