ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 29 மே, 2015

ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து மற்ற கட்சிகளுடன் ஆலோசனை...

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, மற்ற கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். 

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் உள்ள தவறுகளை பல தரப்பினரும் எடுத்துக் கூறியும், கர்நாடக அரசு மேல் முறையீடு செய்ய தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில், கர்நாடக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என முக்கிய அரசியல் கட்சிகள் புறக்கணித்து வருவதாகவும் அவர் கூறினார். ஆர்.கே. நகர் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும், அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் மற்ற கட்சிகளுடன் பேச இருப்பதாகவும் டாக்டர்  கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக