ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 31 மே, 2015

புதிய தமிழகம் கட்சி ..தூத்துக்குடி வக்கீல் கனகராஜ் திருமண விழா ...டாக்டர் அய்யா நேரில் வாழ்த்து ..தூத்தக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த பழனி- கனகம்மாள் தம்பதியாரின் மகனும், புதிய தமிழகம் கட்சி வக்கீல் கனகராஜிக்கும், ஸ்ரீவைகுண்டம் கீழ புதுக்குடியை சேர்ந்த வெங்கடாசலம்- சந்தனசெல்வி தம்பதியாரின் மகள் சீதாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் தூத்துக்குடி அபிராமி மகாலில் வைத்து நடந்தது. திருமணத்தை புதிய தமிழகம் கட்சி தலைவரும் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் க.கிருஷ்ணசாமி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

விழாவில் புதிய தமிழகம் மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மதுரம், தூத்துக்குடி வக்கீல் சங்க தலைவர் பிரபு, கோவில்பட்டி தொழில் அதிபர் வாசுதேவன், ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் கிருஷ்ணராஜ், தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் அலெக்சாண்டர், வக்கீல்கள் சேவியர், அதிசயக்குமார், சந்தணகுமார், பாஸ்கர், ரகுராமன், பெரியதுரை, ராமகிருஷ்ணன், மாரிமுத்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தொண்டரணி செயலாளர் செந்தில்குமார், புதிய தமிழகம் மாவட்ட தொண்டரணி செயலாளர் ராஜசேகர், மாவட்ட தொழிற்சங்க அமைப்பு செயலாளர் ராமசந்திரன் மற்றும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக