-
1922ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 9ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செங்கோட்டைபட்டியில் பூவைசிய இந்திர குல சங்கம் பள்ளர் குல பெருமக்களால் தொடங்கப்பட்டது. பேரையூர் பெருமாள் பீட்டர், இச்சங்கத்தினை பரமக்குடி வீ.பீட்டர், எல்.வேதநாயகம், மா.சாமுவேல், ப.மு.சின்னக் கருப்பன், ம.கா.பெரிய நாயகம் ஆகியோரை துணையாக கொண்டு தொடங்கினர்.சங்கத்தின் முதல் கூட்டத்திலேயே இராமநாதபுரம் மாவட்டத்தில் 150 ஊர்களிலிருந்து பள்ளர்குல முன்னோடிகள் பங்கெடுத்துக் கொண்டனர்.பங்கேற்ற 150 ஊர்களையும் 9வட்டங்களாக பிரித்தனர்.ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு ஊர் தலைமையாக மக்கள் எண்ணிக்கையில் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு வட்டத்திலும் 16 முதல் 17 ஊர்கள் அடங்கியிருந்தது.சங்கத்தின் தலைமையகமாக பேரையூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. உ.ஆ.பெருமாள் பீட்டர் சங்கத்தின் தலைவராகவும், வீ.பீட்டர் சங்கத்தின் பொதுசெயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இச்சங்கத்தின் அடித்தள கட்டமைப்பு மிகவும் வலுவாக அமைக்கப்பட்டிருந்தது. முறைப்படுத்தப்பட்ட சங்கமாக
பூவைசிய இந்திர குல சங்கம் இயங்கி வந்தது.சாதியச் சிக்கல்களையும், குடும்பச் சிக்கல்களையும் களையும் பணிகளில் இச்சங்கத்தினர் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர்.பள்ளர் குல மக்களிடம் மட்டுமின்றி ஏனைய மக்களிடமும் பூவைசிய இந்திர குல சங்கம் நன்மதிப்பைப் பெற்றது.
பூவைசிய இந்திர குல சங்கம் இயங்கி வந்தது.சாதியச் சிக்கல்களையும், குடும்பச் சிக்கல்களையும் களையும் பணிகளில் இச்சங்கத்தினர் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர்.பள்ளர் குல மக்களிடம் மட்டுமின்றி ஏனைய மக்களிடமும் பூவைசிய இந்திர குல சங்கம் நன்மதிப்பைப் பெற்றது.
சங்கப்பதிவு;-
அந்நாட்களிலேயே பூவைசிய இந்திர குல சங்கத்தை இநதிய சங்கங்களின் பதிவுச் சட்டம் 1860 இன்படி 1924ஆம் ஆண்டு மதுரை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார்.பதிவு எண். 1/1924-1925.
பள்ளர் குல மக்களின் உரிமை, முன்னேற்றத்திற்காகப் பாடாற்றிய பூவைசிய இந்திர குல சங்கம் தனித்தனியான பதிவேடுகளை பராமரித்து வந்தது.மிகச் சிறந்த முறையில் இயங்கி வந்த இச்சங்கத்திற்கென 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் நாள் திங்கள்கிழமை சங்கக் கட்டிட தொடங்க வேலைகள் தொடங்கின சங்க கட்டிட திறப்பு விழா, 1961ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் நாள் நடந்தது.
இச்சங்கத்தில் தன்னை இணைத்து கொண்ட இம்மானுவேல் சேகரன் மாவட்டப் பொறுப்பேற்று, இயங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடார்களை தாங்கிக் கொள்ளையிட்டு வந்த மறவர்களிடமிருந்து நாடார்களை பாதுகாக்க எண்ணிய காமராசர் இமானுவேல் சேகரனாரை கையிலெடுத்து காங்கிரசுக் கட்சியில் இணைத்து, பள்ளர்களை கொண்டு மறவர்களை தாக்கினார்.இராணுவ வீரராக இருந்த இம்மானுவேல் சேகரனின் சீரிய, நேரிய குமுகாய பணிகண்டு அஞ்சிய பசும்பொன் உ.முத்துராமலிங்கம் மறவர்களை கொண்டு பள்ளர்களுக்கு எதிராகக் கலவரம் செய்தார்.இதன் விளைவாக முதுகுளத்தூரில் நடைபெற்ற சமாதான பொது கூட்டத்தில் இம்மானுவேல் சேகரனுக்கும், முத்துராமலிங்கத்திற்கும் நேரடியாக கருத்து மோதல் ஏற்பட்டது.இதனை பொறுத்து கொள்ள முடியாத முத்துராமலிங்கம் மறவர்களைத் தூண்டி விட்டு 11.09.1957அன்று இரவு 10.00 மணியளவில் பரமக்குடியில் வைத்து வெட்டி கொன்றார்.அதனை தொடர்ந்து நடை பெற்ற சாதிய மோதல்களில் மறவர்களின் அடாவடித்தனத்தினை பள்ளர்கள் தங்களது போர்க்குணத்தினால் அடக்கி, ஒடுக்கினர்.
{ஏற்கனவே 45க்கும் மேற்பட்ட கொலைகளில் அதிலும் அகம்படியார்களை அதிகமாக கொன்ற முத்துராம லிங்கம் கடைசியில் ஒரே ஒரு பள்ளரை கொலை செய்து தான் கொட்டம் ஒடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிபட்ட கொலை குற்றவாளியை தியாகி அளவுக்கு சித்திகரிப்பது ஏற்புடயது அன்று}
இம்மானுவேல் சேகரனின் ஈகம் பள்ளர் குல மக்களை எழுச்சி கொள்ள செய்ததோடு, சமுக ஓர்மைக்கும், அடுத்த தலைமுறைக்கான அரசியல் பகிர்வினை பெறுவதற்கான முன்னகர்வினை நோக்கியும் நகர்த்தியது.....
{ஏற்கனவே 45க்கும் மேற்பட்ட கொலைகளில் அதிலும் அகம்படியார்களை அதிகமாக கொன்ற முத்துராம லிங்கம் கடைசியில் ஒரே ஒரு பள்ளரை கொலை செய்து தான் கொட்டம் ஒடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிபட்ட கொலை குற்றவாளியை தியாகி அளவுக்கு சித்திகரிப்பது ஏற்புடயது அன்று}
இம்மானுவேல் சேகரனின் ஈகம் பள்ளர் குல மக்களை எழுச்சி கொள்ள செய்ததோடு, சமுக ஓர்மைக்கும், அடுத்த தலைமுறைக்கான அரசியல் பகிர்வினை பெறுவதற்கான முன்னகர்வினை நோக்கியும் நகர்த்தியது.....
பள்ளர்களின் நில ஆவணங்களில்
இந்திர குலம் விவசாயம் ;-
இந்திர குலம் விவசாயம் ;-
ஆவணம் எண்;1
அன்றைய நெல்லை மாவட்டம், (இன்றைய தூத்துக்குடி மாவட்டம்) எட்டையபுரம் சமீனுகுட்பட்ட கழுகுமலை துணைப்பதிவாளர் அலுவலகத்தில் 1940 ஆம் ஆண்டு,அக்தோபர் 8 ஆம் நாள் பதிவு செய்யப்பட்ட (1 புத்தகம், 422வால்யூம் 292-293 பக்கம், 08.10.1940 ஆம் ஆண்டு 1724 எண்ணில் பதிவு செய்யப்பட்டது) பள்ளர்களின் நில ஆவணத்தில் 'இந்திர குலம் விவசாயம்' என்று உள்ளது.இந்நில ஆவணம் கழுகுமலை அருகிலுள்ள கெச்சிலாபுரத்தில் வாழ்ந்த சுப்புக்குடும்பன் மகன் குமராண்டிக் குடும்பன் என்பாருக்கு உரிமையுடையதாகும்.
ஆவணம் எண்;2
அன்றைய நெல்லை மாவட்டம், (இன்றைய தூத்துக்குடி மாவட்டம்) கோயில்பட்டி வட்டம், கழுகுமலை துணைப்பதிவாளர் அலுவலகத்தில் 1969ஆம் ஆண்டு, ஏப்ரல் 9ஆம் நாள் பதிவு செய்யப்பட்ட (4 புத்தகம், 27 வால்யூம் 111-112பக்கம், 09.04.1964ஆம் ஆண்டு 12 எண்ணில் பதிவு செய்யப்பட்டது) பள்ளர்களின் நில ஆவணத்தில் 'இந்திர குலம் விவசாயம்' என்று உள்ளது.இந்நில ஆவணம் கழுகுமலை அருகிலுள்ள கெச்சிலாபுரம் பெ.குமாரசாமி மனைவி கு.பாதாளையம்மாளுக்கு உரிமையுடையதாகும்.
வரவேற்க வேண்டிய நிகழ்வு இப்போது இச்சங்கமானது இயங்குகிறதா...?
பதிலளிநீக்கு