ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 1 மே, 2015

புதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2008

ஜனவரி 19, தாழ்த்தப்பட்ட மக்களை தலித் என்று கூறக்கூடாது - தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் அறிவிப்பு - சுற்றறிக்கையின் நகல் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.
பிப்ரவரி 24, புதிய தமிழகம் கட்சி மாநில மாநாடு தலைவர் அறிவிப்பு - மத்திய பல்கலைக்கழகம் நாமக்கல்லில் அமைக்க வேண்டும் - தலைவர் எச்சரிக்கை.
பிப்ரவரி 25, கட்சியின் 10-ஆம் ஆண்டு துவக்க விழா - சமநீதி சமுதாய மாநாடு - மதுரை மாட்டுத்தாவணி மைதானத்தில் நடைபெற்றது - மாநாட்டில் ஜனதாதள தலைவர் ஜே.ஆர்.ஜெட்லி பங்கேற்பு.
மார்ச் 19, அருந்ததியருக்கான அனைத்துக்கட்சி கூட்டம் - தலைவர் பங்கேற்பு - உள்ஒதுக்கீடு - தாழ்த்தப்பட்டோரை பிரித்தாளும் சூழ்ச்சி - ஒரு லட்சம் பின்னடைவு / குறைவிடப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் - தமிழக சமூகநீதி வரலாற்றில் கருப்பு தினம் - தலைவர் வெளி நடப்பு.
மார்ச் 23, வேண்டாம் உள்ஒதுக்கீடு வேண்டும் நிதிஒதுக்கீடு - தலைவர் இந்தியக் குடியரசுக்கட்சித் தலைவர் முனைவர்.சே.கு.தமிழரசன் நேர்காணல் - ஜுனியர் விகடன் (23.03.2008) - உள்ஒதுக்கீடு காரசார விவாதம் - தலைவர் தொல்திருமாவளவன், அதியமான் நேர்காணல் - நக்கீரன் (22.03.2008).
மார்ச் 29, பி.தொட்டியப்பட்டி தேவேந்திரர் பெண்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் - நீதி விசாரணை கோரிக்கை - பொது இடத்தைப் பயன்படுத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தடை - திருமங்கலம் நீதிமன்ற வழக்குக்கு புறம்பாக அரசு அதிகாரிகள் செயல்படுவதாக புகார்.
ஜுலை 23, தாமிரபரணி தியாகிகள் நினைவஞ்சலி.
ஆகஸ்டு 03 டாடா ஆலைக்கு எதிரான போராட்டம் - தமிழக அரசு டாடா ஆலை நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைவிடக்கோரி குட்டம் முதல் திசையன்விளை வரை மௌன ஊர்வலம். திசையன்விளை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு அமைதி அறப்போர் திட்டம் - குட்டம் நோக்கி தலைவர் தொண்டர்களுடன் பயணம். ஆரோக்கியநாதபுரம் அருகே கைது - குட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் - இளைஞர்கள் கைது - பொதுமக்கள் கருத்தை அறிந்த பிறகு திட்டம் நிறைவேறும் என அரசு திடீர் பின்வாங்கல் - தலைவர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சிறைபிடிப்பு.
ஆகஸ்டு 12 தமிழகத்தின் தொழில் வளங்கள், தொழிற்சாலைகள் வடமாவட்டங்களில் அமைகின்றன. புதிய தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு செய்யப்பட்ட 30 புரிந்துணா;வு ஒப்பந்தங்கள் வடமாவட்டங்களிலேயே அமைந்தன - தெற்கே மூன்று மட்டும் இதற்கு கண்டனம்; தெரிவிக்க செப்டம்பரில் இராமநாதபுரத்தில் மாநாடு. 06 அக்டோபர் - 06 நவம்பர் போராட்டங்கள். 06 நவம்பர் முதல் 06 டிசம்பர் வரை பேரணிகள் தலைவர் அறிவிப்பு.
ஆகஸ்டு 18, அரசு கலைக்கல்லூரிகளில் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி 1022 உதவிப் பேராசிரியர்கள் பின்னடைவு பணியிடங்களை செப்டம்பர் 15 க்குள் நிரப்பாவிட்டால் உயர்கல்வி துறை அமைச்சர் வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் - தலைவர் அறிவிப்பு.
செப்டம்பர் 11, தியாகதீபம் இம்மானுவேல் சேகரன் நினைவஞ்சலி.
அக்டோபர் 01, 984 பின்னடைவுப் பணியிடங்கள் நீதிமன்றத் தீர்ப்பின்படி நிரப்பப்பட்டன - புதிய தமிழகத்தின் 10 ஆண்டுகால போராட்டம் முழு வெற்றி - வழக்காடித்தான் இடஒதுக்கீடு பெற வேண்டிய அவலம்.
அக்டோபர் 8 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 103 ரூபாய் 76 பைசா ஒருநாள் கூலியாக வழங்க வேண்டும் என ஆணையிட்டது. தோட்ட அதிபர்கள் எதிர்ப்பு. புதிய ஒப்பந்தம் மூலம் 90 ரூபாய் அடிப்படைச் சம்பளம் 13 ரூபாய் 76 பைசா இதரபடிகள் என அதை குறைக்க முயற்சி தலைவர் எதிர்ப்பு.
அக்டோபர் 11 உத்தபுரத்தில் அமைதி ஏற்படுத்த அனைத்துக் கட்சி நல்லெண்ணக் குழு அமைக்க சென்னை செய்தியாளர் சந்திப்பில் தலைவர் கோரிக்கை, இக்குழுவில் கே.வி.தங்கபாலு, இல.கணேசன், தா.பாண்டியன், ஏ.சி.சண்முகம், பொன்னம்பல அடிகள் ஆகியோர் இடம்பெற கோரிக்கை. உத்தபுரம் ஊராட்சித் தலைவர் புஷ்பம் உள்ளிட்ட சுமார் 20 பெண்கள் உத்தபுரத்தில் உள்ள கள நிலவரத்தை சென்னை செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டனர்.
அக்டோபர்14 உத்தபுரத்தின் இளம் பெண் சித்ரா மறைவு - ஊருக்குள் நுழைய தடை - பெண்களே ஈமச்சடங்குகளை செய்த வரலாற்று சோகம் - பேச்சு வார்த்தைக்கு நல்லிணக்கத்துக்கு புதிய தமிழகம் தயார் - தமிழக முதல்வருக்கு தலைவர் கடிதம்.
அக்டோபர் 16, இலங்கைத் தமிழர்களுக்கான தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் - அஇஅதிமுக, மதிமுக ஆகிய கட்சிகள் தமிழர்களுக்காக இக்கூட்டத்தில் கலந்து கொள்ள கோரிக்கை - இலங்கைத் தமிழர் பிரச்சனையை டெல்லியில் உள்ள சில சக்திகள் குழப்ப முயல்வதாக குற்றச்சாட்டு.
அக்டோபர் 23 இலங்கைத் தமிழர் பிரச்சனை - தில்லியில் போரட்டகளம்
அமைக்க அனைத்துக் கட்சியினருக்கு அழைப்பு. இலங்கைத் தமிழர்களுக்காக எம்.பி.பதவியை துறப்போம் என உறுதி எடுத்துக் கொண்ட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எம்.பிக்களின் மாறுபட்ட கருத்து - தலைவர் கண்டனம்.
நவம்பர் 2 தலைவர் உத்தபுரம் பயணம் - தலைவர் மீது சாதி
வெறியர்கள் கொலை வெறிதாக்குதல் - காவல் துறையின் மெத்தனப்போக்கு - தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் தொண்டர்கள் கிளாச்சி - பேருந்துகள் நிறுத்தம் - தென்தமிழகம் ஸ்தம்பித்தது - உத்தபுரம் செல்வது குறித்து முதலமைச்சர்ரிடம் கடிதம் கொடுத்தும் அரசு காவல்துறை மெத்தனம் - அமர்வு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை - தலைவர் மீது தாக்குதல் நடைபெற்றதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - ஈ.கோட்டைப்பட்டி முருகதேவி அம்மையாரை போலீஸ் தாக்குதல் - தட்டிக் கேட்க வந்த அவருடைய மகன் சுரேஷ் மீது எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி துப்பாக்கி சூடு - முருகதேவி மகன் சுரேஷ் சம்பவ இடத்தில் பலி - பலியானவர் உடலை 500 மீட்டருக்கு இரத்தம் சொட்ட சொட்ட காவல்துறை இழுத்துச் சென்றது. (The Hindhu Coimbatore 05.11.2008 P.1)
நவம்பர் 05 தமிழக முதல்வருக்கு உத்தபுரம் சம்பவம் பற்றிய உண்மைநிலை கடிதம் - மாவட்ட ஆட்சித் தலைவர் மாற்றம் - வீரமரணம் அடைந்த சுரேஷ் குடும்பத்துக்கு ரூ.1 1/2 லட்சம் இழப்பீடுக்கு நன்றி தெரிவிப்பு - உத்தபுரம் கள நிலவரம் குறித்த விரிவான கடிதம் - உத்தபுரம், பந்தபுளி (சங்கரன்கோயில்), கண்டதேவி (சிவகங்கை), திரௌபதி அம்மன் (சேலம்) கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிபாட்டு உரிமைக்களை பெற்றுக் கொடுக்க கோரிக்கை.
நவம்பர் 21, கல்லூரி வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகள் தடை - சட்டக் கல்லூரி மாணவர்களின் மோதலைத் தொடர்ந்து தலைவர் அறிக்கை - சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களின் மீதான நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டக்கூடாது.
நவம்பர் 24 இ.கோட்டைப்பட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம் - விசாரணைக் குழுவிடம் ஆதாரங்களை வழங்கும் குழுவினரிடம் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
நவம்பர் 30 முன்னாள் பிரதமர் வி.பி.சிங் படத்திறப்பு - கோவையில் தலைவர் அஞ்சலி.
டிசம்பர் 10 பிரதமரை சந்திக்கும் தமிழக தலைவர் குழுவில் தமிழக
முதல்வருடன் தலைவர் பயணம் - இரண்டு மொழிகள் கொண்ட நாட்டில் ஒரு மொழி / ஒரு இனத்துக்குதான் அந்தஸ்து என்றால் நாடு இரண்டாகி விடும். ‘ஒரு மொழியிருந்தால் இருநாடுகள் உருவாகும். இரு மொழியிருந்தால் ஒரு நாடு இருக்கும்’ என்றார் தலைவர் சுயமரியாதையுடன் தமிழர்கள் வாழ்கிற சூழலை உருவாக்க இந்திய அரசு முயல வேண்டும் என பிரதமர் முன்னிலையில் பேச்சு.
டிசம்பர் 20, சென்னையில் புதிய தமிழகம் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் தீர்மானங்கள் - மும்பை பயங்கரவாத தாக்குதல் - புதிய சட்டம் போல சாதிய வன்முறைக்கு எதிரான கொடும் சாதிய பயங்கரவாத சட்டம் கொண்டுவர வேண்டும் - மத்திய அரசின் பின்னடைவுப். பணியிடங்களை நிரப்ப கோரிக்கை - பணநாயக இடைத்தேர்தல் திருமங்கலத்தில் புதிய தமிழகம் போட்டியில்லை - கல்வி வேலை வாய்ப்புக்கு எதிராக அடித்தள மக்களை நிரந்தர அடிமையாக்கும் டாஸ்மார்க்கை எதிர்த்து ஜனவரி06 மதுக்கடை மறியல் - ஈகோட்டைப்பட்டி துப்பாக்கிச் சூடு மதுரை சரக டி.ஐ.ஜி மாற்றப்பட வேண்டும் - நெல்லை மாவட்டம் -புதுக்குட்டி, ராஜசிங், வனராஜ் ஆகிய எளிய மக்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் - கண்டனம்.
டிசம்பர் 25, விடுதலை சிறுத்தைகள் பிறக் கட்சிகள் புதிய தமிழகத்துடன் இணைய விடுதலை சிறுத்தைகள் சட்ட மன்ற உறுப்பினர் இரவிக்குமார் அழைப்பு (தி இந்து, 25.12.2008, கோயமுத்தூர், பக்: 04)
டிசம்பர் 29, பூரண மதுவிலக்குக் கோரி மதுக்கடைகள் முன்பு ஜனவரி 06 2009 அன்று மாநிலம் முழுவதும் மறியல் - கருவூரில் நடந்த புதிய தமிழகம் பொதுக்குழுவில் முடிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக