சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் நடந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, தமிழர் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து,கருணாநிதியுடன் ஆலோசித்ததாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக உள்ள தனி அமைப்பு போல், மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கும் இணைந்து செயல்படக்கூடிய விதத்தில் புதிய கூட்டமைப்பு ஒன்றை தொடங்குவது குறித்து பேசியதாக அவர் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருவதாகவும், இதனை தடுக்கத் தவறிய ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கருணாநிதியை திடீரென கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசியிருப்பது, கூட்டணிக்கான அச்சாரம் என்றே கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக