ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 1 மே, 2015

புதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2003

ஏப்ரல் 14, கேரள மாநிலம் முத்தங்கா பழங்குடி மக்களுக்காக நீதிக் கேட்டு பாலக்காடு நோக்கி நெடியப் பயணம் - முத்தங்கா முடியரசி ஜானுவிற்கு ஆதரவு முழக்கம் - கேரள அரசு அனுமதி மறுப்பு - பாலக்காடு வரை செல்ல அனுமதி - முடிவில் கேரள மாநில முதல்வருக்கு பாலக்காடு மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் மனு அளிப்பு - கேரள காவல்துறைக்கு கடும் கண்டனம் - நீதிவிசாரணை நடத்த கோரிக்கை - இழப்பீடு வழங்க கோரிக்கை - சி.கே.ஜானுவை கேரள முதல்வர் சந்தித்து உடன்படிக்கை மேற்கொள்ள கோரிக்கை.
ஏப்ரல் இலவச மருத்துவ முகாம்.
ஏப்ரல் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஷாகிர் உசேன் படுகொலை - தலைவர் இரங்கல் செய்தி.
மே, இலவச மருத்துவ முகாம். 25.05.2003
ஜுன் 07, தமிழக அரசின் 15 லட்சம் அரசு ஊழியர்களின் தொடர் போராட்டம் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நீக்கத்திற்கு தலைவர் கண்டனம் - பொதுமக்களின் ஆதரவை பெறத் தவறியது ஏன் தொழிற்சங்கங்களுக்கு தலைவர் கேள்வி - தங்கள் உரிமைக்காகப் போராடும் தொழிற்சங்கங்கள் அரசு பணிகளின் 110 துறைகளில் 50 ஆண்டுகளாக உள்ள பின்னடைவுப் பணியிடங்களுக்காகவும் குரல் கொடுக்காதது ஏன் - பெரும்பான்மையான பிற்பட்ட அரசு ஊழியர்கள் எதிர் புரட்சியாளர்களாக மாறியது ஏன் - தலைவர் கேள்வி.
ஜுன் இலவச மருத்துவ முகாம்.
ஜுலை இலவச மருத்துவ முகாம்.
ஜுலை 02, மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு முன்பாக உள்ள மூன்று சென்ட் அளவுள்ள இடத்தில் வீட்டுத் தோட்டங்கள் பயிரிட நிர்வாகம் எதிர்ப்பு.
ஜுலை 02 மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வீடுகள் முன்பு போடப்பட்டிருந்த வீட்டுத் தோட்டங்கள் அழிப்பு - அபகரிப்பு - அந் இடங்களைக்கூட தொழிலாளர்கள் பயன்படுத்தத் தடை - தலைவர் பி.பி.டி.சி. நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்.
ஜுலை, 7 கண்டதேவி கோயில் தேரோட்டத்திற்கு புதிய தமிழகம் நீதிமன்றம் மூலம் உரிமையை பெற்றுத் தந்தது. 1988 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வழிபாட்டு உரிமை போருக்கு நீதி மன்றம் வழங்கிய வழிகாட்டுதலை ஜுலை, 11 அன்று சாதி வெறியர்கள் பின்பற்றப்போவதில்லை என அறிவித்ததால் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ்பாபு தேரோட்டம் நடைபெறாது என அறிவித்தார். (12.07.2003 The Hindhu Coimbatore P.4)
ஜுலை, 12 கண்டதேவி கோயிலின் நீதிமன்ற வழிகாட்டுதலை நிறைவேற்றத் தவறிய மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஐஜி ஆகியோருக்கு கண்டனம். மேலும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலை தடைசெய்தவர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தை பிரயோகிக்காதற்கு கடும் கண்டனம். (14.07.2003. The Hindhu Coimbatore P.4)
ஆகஸ்ட் 15 சொட்டத்தட்டி பஞ்சாயத்து தலைவர் தேசியக் கொடி ஏற்றியபோது செருப்பால் அடிக்கப்பட்டார்
ஆகஸ்ட், 27 08.08.2003 ஆளுநர் மாளிகை நோக்கி சொட்டத்தட்டி சம்பவத்துக்காக ஊர்வலம் - அறிவிப்பு. சம சமுதாய நீதி மாவட்ட மாநாடுகள் - தமிழ்த் திரைப்படங்கள் பண்பாட்டுச் சீரழிவை எதிர்த்து மக்கள் இயக்கம் - இந்து பொது சிவில் சட்டம். விநாயகர் ஊர்வல எதிர்ப்பு. திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் திரு.பூமிநாதன் காவல் நிலையத்தில் அடித்து கொல்லப்பட்டதற்கு முதல் அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்க கோரிக்கை.
செப்டம்பர், 1 விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடைவிதிக்க ஆளுநரிடம் மனு.
செப்டம்பர், 11 பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சி.
செப்டம்பர் 21 இந்தியத் தேசிய கொடி ஏற்றிய சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பஞ்சாயத்துத் தலைவர் அந்த ஊரில் உள்ள பள்ளியில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கிராமசபை கூட்டத்தை நடத்தினார். கூட்டம் நடைபெறும் சுப்பையா என்ற சாதிவெறியனால் தாக்கப்பட்டார். அவர் கோவைக்கு வந்த போது புதிய தமிழகம் தலைவருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அக்டோபர் 02 சிவகங்கை சொட்டத்தட்டி ஊராட்சித் தலைவர் தேசியக்கொடி ஏற்றியதற்காக செருப்பால் அடித்து அவமானப்படுத்தப்பட்டதற்கு கண்டித்து ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலம்.
அக்டோபர் 02 தேனீ மாவட்டத்தில் இரட்டை குவளை ஒழிப்பு - அரசு தனிச்சட்டம் கொண்டு வர வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்.
அக்டோபர், 2 இரட்டை குவளை முறை எதிர்ப்பு சட்டம் கொண்டு வர வற்புறுத்துதல்.

கடலூர் பண்ருட்டி சிறுதொண்டமாதேவி தாழ்த்தப்பட்ட கிறித்துவப் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு கண்டனம் - சிவகங்கை சொட்டத்தட்டி கிராமத்தின் அரசாங்கத்தின் சமுதாயக் கிணற்றைப் பட்டியல் சாதி மக்கள் பயன்படுத்துவதற்கு உள்ள தடையை நீக்க கோரிக்கை - சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட பத்தமடை ஏகாம்பரம். அவரது மகள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை - திருநெல்வேலி கடையநல்லூர் வௌ;ளக்கவுண்டன்பட்டி கரடிகுளம் தாழ்த்தப்பட்ட மக்கள் திருமணத்திற்கு வேனில் சென்றதற்காக 07.09.2003 எதிர்ப்பு தெரிவித்து சாதிவெறியர்கள் ‘வேன்’ ஒன்றால் தடுத்தனர் - தட்டிக் கேட்ட வேன் எளிய மக்களின் வேன் ஓட்டுநர் வில்லியம்ஸ் வெட்டிக் கொல்லப்பட்டதற்கு நீதி விசாரணை நடத்த கோரிக்கை.
சேரன் மகாதேவி திரு.மாரியப்பன் மீது வன்கொடுமை - மதுரை திருமங்கலம் கீழஉரப்பனூர் பிச்சை மனைவி முத்துமாரியை மானபங்கம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சாதிவெறியன் ராசா கைது செய்ய கோரிக்கை - அதே நபர் முத்துமாரியின் மீது மலத்தை கரைத்து ஊற்றி அவமானப்படுத்தியதற்கு எதிர்ப்பு.
அக்டோபர், 12 புதிய தமிழகம் அரசியல் உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் பட்டியல் வகுப்பு மக்களுக்கு பாதுகாப்புக்கு ஆயுதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இரட்டைக்குவளை முறை முழுவதும் ஒழிக்கப்பட வேண்டும் - தாட்கோ கடன்களை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - பொடா சட்டத்தின் கீழ் திரு.வைகோ, திரு.நெடுமாறன், நக்கீரன் கோபால் ஆகியோர் சிறைவைப்புக்கு எதிர்ப்பு - சாதி ‘நாடுகளு’க்கு எதிர்ப்பு தூத்துக்குடி வெங்கடேசன் நீதிவிசாரணை கோரிக்கை - காவிரி நீர் விவசாயிகள் இலவச மின்சார போராட்டத்திற்கு ஆதரவு.
அக்டோபர், 13 விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு.
அக்டோபர், 20 சென்னை மின்வாரிய அலுவலகம் முன்பு உண்ணாநிலை அறப்போர்.
அக்டோபர், 12 பொதுக்குழுக் கூட்டம் - பொதுக்குழுவில் வடபுலத்து பட்டியல் சாதித் தலைவர்களான செல்வி மாயாவதி, சட்டிஸ்கர் மாநில முன்னால் முதல்வர் அஜித் ஜோகி ஆகியோர் மீது டெல்லி உயர்நீதி மன்றம், சி.பி.ஜ, மற்றும் ஜ.பி. ஆகிய நிறுவனங்கள் வழக்குப் பதிவு செய்தவருக்கு எதிராக முக்கிய தீர்மானம் நிறைவேற்றம். தீர்மான நகலின் ஆங்கில வடிவம் உரியவர்களுக்கு அனுப்பப்பட்டது. இது போன்ற எதிர்கால சவால்களைச் சந்திக்க ஆயத்தமாக வேண்டும் என தலைவர் கடிதம். இத்தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
அக்டோபர், 28 மதுரைக்கு வருகை தர திட்டமிட்டிருந்த விசுவ இந்து பரிஷத் அனைத்து நாடுகளின் செயலர் பிரவின் தொகாடியா மதுரைக்கு வந்து திரிசூலம் வழங்க திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு - இந்து சாதிய தர்மத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தென்தமிழகத்திற்குத் தொகாடியாவின் வருகை வெந்தப்புண்ணில் வேல்பாய்ச்சும் முயற்சி என புதிய தமிழகம் எதிர்ப்பு - தமிழக அரசு அவருடைய வருகையைத் தடை செய்ய வற்புறுத்தல்.
நவம்பர், 22 திரையுலகமே திரும்பிப்பார் கருத்தரங்கம் - வித்யோதயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கம் சென்னை வேலுபிரபாகரன், தங்கர்பச்சான், பெரியார்தாசன், பாமரன், ஜே.பி.கிருஷ்ணா வழக்கறிஞர் அஜிதா, இயக்குநர் வீ.சேகர், திரைப்பட இயக்குநர் சேரன், தலைவர் பங்கேற்பு - முனைவர். பேராசிரியர் அருணா வரவேற்புரை.
நவம்பர் 26 தமிழகத்தில் உள்ள 16 தலித் அமைப்புக்கள் ஒன்றிணைந்து சமநீதிப் பேரவை தொடக்கம்
டிசம்பர் 15, 18 இரண்டாவது மூன்றாவது சமநீதிப் பேரவைக் கூட்டங்கள்.
டிசம்பர் 21, சென்னை செய்தியாளர் சந்திப்பு - சாத்தன்குளம் இடைத்தேர்தல் - மக்கள் விரோத அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர புதிய தமிழகம் கோரிக்கை - கருப்பாநதி தடுப்புச் சுவர் அகற்ற கோரிக்கை - சென்னை புளியந்தோப்பு இளைஞர் கோவிந்தாராஜ், பாளையங்கோட்டை பூமிநாதன் காவல் நிலைய மரணம் - விசாரணை கோரிக்கை - கட்சித் தாவல் சட்டம் உள்ளாட்சிகள் வரை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக