ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 1 மே, 2015

புதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 1994..

ஜனவரி 22, தேவேந்திர செய்தி மடல் என்ற காலமுறை இதழ் தொடக்கம்.
பிப்ரவரி 07 சிந்திக்கும் வேளையில் தமிழகத்தின் முலாயம்சிங் யார் என்ற கட்டுரை தினமணி நாளிதழுக்கு அனுப்பப்பட்டது - வெளிவந்தது.
மார்ச் 01 கவர்னரை சந்திக்க தலைவர் முயற்சி - காவல்துறை தடை -
துணை ஆணையர் கரன்சிங், இன்ஸ்பெக்டர் ரத்னசபாபதி ஆகியோர் மீது கவர்னரிடம் புகார்.
மார்ச் 07 தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலத்தை கேபினட் மந்திரியாக நியமனம் செய்ய தலைவர் கோரிக்கை - பிரதமர் - அன்றைய சமூகநலத்துறை அமைச்சர் சீத்தாராம் கேசரிக்கு தலைவர் கடிதம்.
மார்ச் 21, பாபநாசம் (கல்லிடைக்குறிச்சி) டானாவில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மண்டபம் அடிக்கல் நாட்டுவிழா - சமுதாய பெரியவர்கள் திரளாக பங்கேற்பு - பாளை வாலிபர் பொட்டல் பெருமாள் இறப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
மே 02, மதுரை அனுப்பானடி பகுதியில் கந்துவட்டி வணிகர் படுகொலை - அப்பாவி தேவேந்திரகுல வேளாளர் பிரிவு மக்கள் மீது காவல்துறை வன்முறை - பொய் வழக்கு - தமிழக முதல்வர் தலையிட தலைவர் கோரிக்கை.
ஜுலை 14, பரமக்குடி பொன்னையாபுரத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா - தலைவர் பங்கேற்பு.
அக்டோபர் 16, நாமக்கல்லில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மண்டல மாநாடு - தலைவர் - கூட்டமைப்பினர் பங்கேற்பு - 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
டிசம்பர் 20 திண்டுக்கல் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு கூட்டம் - பெர்னா திருமண மண்டபம் - இம்மானுவேல் தேவேந்திரர் மாவட்டம் - கோரிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக