ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 18 மே, 2015

டாக்டர் .கிருஷ்ணசாமியுடன் சந்திப்பு: உலகம் சுற்றியதுதான் மோடியின் சாதனை- வைகோ பேட்டி.


.புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று காலை 10.30 மணிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் சந்தித்தார்.
பின்னர் வைகோவும் டாக்டர் கிருஷண்சாமியும் நிருபர்களை சந்தித்தார்கள். அப்போது கிருஷ்ணசாமி கூறியதாவது:–
தமிழர்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளில் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறேன். சமீபத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரை சந்தித்தேன்.
இன்று ம.தி.மு.க. தலைவர் வைகோவை சந்தித்து இருக்கிறேன். ஈழத் தமிழர் நலம் உள்பட தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக வைகோ கூறியுள்ளார்.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
பின்னர் வைகோவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உங்களை சந்தித்த பிறகு, சட்டசபை தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் சேர வாய்ப்பு உள்ளது என்று கூறி இருக்கிறாரே?
பதில்:– எங்கள் சந்திப்பின் போது அரசியல் குறித்து பேசவில்லை. தேர்தல் குறித்தும் பேசவில்லை. நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மு.க.ஸ்டாலின் தனது கருத்தை கூறி இருக்கிறார். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.
கே:– ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறதா?
ப:– கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக வக்கீல் ஆச்சார்யா கூறியுள்ளார்.
கே:– சட்டசபை தேர்தலுக்கு ம.தி.மு.க. தயாராக உள்ளதா?
ப: மக்களுக்காக ம.தி.மு.க. உள்ளது. கடந்த தேர்தலை புறக்கணித்தோம். தேர்தலுக்கு தனியாக ஏற்பாடு எதுவும் செய்யவில்லை.
கே: ஆர்.கே. நகரில் ம.தி.மு.க. போட்டியிடுமா?
ப: அது குறித்து எந்த முடிவும் செய்யவில்லை.
கே: பிரதமர் மோடியின் ஓராண்டு சாதனை பற்றி?
ப: உலகம் சுற்றும் நரேந்திரமோடி.
இவ்வாறு வைகோ கூறினார்.

வியாழன், 7 மே, 2015

அரசியல் நோக்கத்திற்கான சந்திப்பு அல்ல: வாசன் - டாக்டர்.கிருஷ்ணசாமி கூட்டாக பேட்டி....

அரசியல் நோக்கத்திற்கான சந்திப்பு அல்ல: வாசன் - டாக்டர்.கிருஷ்ணசாமி கூட்டாக பேட்டி....சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை, புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி புதன்கிழமை காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ½ மணி நேரம் நடந்தது.
இந்த சந்திப்பு குறித்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தின் ஒட்டு மொத்த நலன் காக்க தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து டாக்டர் கிருஷ்ணசாமி பேசி வருகிறார். இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் இல்லை. தமிழக மக்களின் பிரச்சனையில் அனைத்து தலைவர்களும் ஒருமித்த கருத்தோடு தமிழகத்துக்கு நியாயமான தீர்வு பெற ஒன்று சேர உள்ளோம். டாக்டர் கிருஷ்ணசாமியின் இந்த நல்ல முயற்சி வரவேற்கத்தக்கது.
சமீப காலமாக தமிழக மக்களுக்கு அண்டை மாநிலம் மற்றும் அருகில் உள்ள நாடால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு தலைவர் கூறினார்.
பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறும்போது, தி.மு.க. தலைவரை நேற்று சந்தித்தேன். அதே போல் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை இன்று சந்தித்து உள்ளேன். இந்த சந்திப்பு அரசியல் நோக்கத்திற்கான சந்திப்பு அல்ல.
தேசிய அக்கறை மற்றும் தமிழகத்தின் நலனுக்காக நடந்த சந்திப்பு. தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். தமிழகத்தின் குரல் ஒருங்கிணைந்து ஒலிக்க வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக