தமிழகத்தின் நலன்களுக்காக எல்லா கட்சிகளையும் ஒருங் கிணைக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி யின் முயற்சிக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் கிருஷ்ணசாமி கூறும் போது, ‘‘ஈழத் தமிழர்களுக் காக ‘டெசோ’ என்ற தனி அமைப்பு இருப்பதுபோல தமிழகத்தின் பிரச்சினை களுக்காக அரசியலை மறந்து போராட தனி அமைப்பு தொடங்கு வது குறித்து இருவரும் விவாதித் தோம்’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் அரை மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பு குறித்து நிருபர்களிடம் வாசன் கூறும் போது, ‘‘இதில் அரசியல் எதுவும் இல்லை. தமிழகத்தின் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை களுக்காக அனைவரும் ஒரு சேர குரல் கொடுத்து தீர்வு காண வேண் டும் என்பதே தமாகாவின் நிலைப் பாடு. சமீபகாலமாக அண்டை மாநிலங்களுடன் தமிழகம் பல பிரச்சினைகளை சந்தித்து வரு கிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு அச்சுறுத் தல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ் நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமியின் முயற்சி பாராட்டத்தக்கது’’ என்றார்.
டாக்டர் கிருஷ்ணசாமி கூறும்போது, ‘‘தமிழகத்தின் நலனுக்காக கருணா நிதி, வாசனை சந்தித்துப் பேசியுள் ளேன். இது அரசியலுக்கான சந்திப்பு அல்ல. தமிழக அரசியல் தலைவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறேன். மற்ற மாநிலங்களைப்போல முக்கியப் பிரச்சினைகளில் தமிழகத்தின் குரல் ஒருங்கிணைந்து ஒலிக்க வேண்டும். எனது முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக