ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 1 மே, 2015

புதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2007

பிப் 10, 11 எளிய மக்கள், ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மை உழைக்கும் மக்கள் சட்டமன்ற நாடாளுமன்றத்தில் உரிய பங்கை பெற விகிதாச்சார தேர்தல் முறையை வற்புறுத்தியும் மத்திய மாநில அரசு நிதிநிலை அறிக்கையில் உரிய பங்கு பெறவும் நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் - ஏ.கே.நாயக் பவன், தா.பாண்டியன், ஜே.எஸ்.ஆருண் (நாடாளுமன்ற உறுப்பினர்) ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலர் செஞ்சி ராமசந்திரன், பேராசிரியர் தெய்வசுந்தரம், இந்திய தேசிய லீக் பசீர் அகமது, முனைவர் அருணா, கவிதாசரண், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலவாரியத் தலைவர் சேவியர் அருள்ராஜ் பங்கேற்பு.
நிதிநிலை அறிக்கையில் உரிய பங்கு கருத்தரங்கம் திரு.ராஜசேகர் இ.ஆ.ப.(டெல்லி) பேராசிரியர் விவேக் (டெல்லி) பேராசிரியர் இராமைய்யா (மும்பை) திரு.செல்வராஜ் இ.ஆ.ப. (ஓய்வு) திரு.பூ.எஸ்.எஸ். மணி - தலைவர் சிறப்புரை.
பிப்ரவரி 21, தமிழக பல்கலைக்கழக சட்ட மசோதா - திருத்தங்கள் மேற்கொள்ள தலைவர் கோரிக்கை - மாநில உயர்கல்வி மன்றத் தலைவரிடம் தலைவர் மனு.
மார்ச் 04, செட்யூல்டு காஸ்ட் என்பதற்கு ஆதிதிராவிடர் என்ற பொருள் அல்ல - எல்லா மாநிலங்களும் உரிய கலைச்சொற்கள் அரசால் பயன்படுத்தப்படுகின்றன - தமிழில் செட்யூல்டு காஸ்ட் என்பதற்கு பட்டியல் சாதி, அட்டவணைச் சாதி என்ற சொல்லையே அரசு பயன்படுத்த வேண்டும் - ஆதிதிராவிடர் என்ற சொல்லால் வரும் குழப்பத்தைத் தவிர்க்க வேண்டும் - தலைவர் கோரிக்கை.
மார்ச் 16, தமிழக முதல்வருக்கு புதிய தமிழகம் கோரிக்கை - 525 பின்னடைவு பணியிடங்கள் நிரப்ப வேண்டும் - செட்யு+ல்டு காஸ்ட் என்பதற்கு சரியான கலைச்சொல் பயன்படுத்த வேண்டும் - தோட்டத் தொழிலாளர் கூலி உயர்வு 150 ரூபாய் ஆக்கப்பட வேண்டும் - பட்டியல் சாதி மக்களுக்கு துணைவேந்தர் பதவி - இலவச நிலம் வழங்கும் திட்டம் - அரசுக்குப் பாராட்டு.
மார்;ச 26, தலைவரின் தாயார் க.தாமரை அம்மாள் 90 வயதில் மறைவு - குடிமங்கலத்தில் இறுதி அஞ்சலி - தமிழகத்தின் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இறுதி அஞ்சலி.
ஏப்ரல் 15 மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மத்திய அரசின் இடைக்காலத் தடை தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத் தீர்;ப்பில் தவறில்லை என இடஒதுக்கீட்டின் அறியப்படாத தகவல்களை புதிய கோணத்தில் விளக்கம் (குமுதம் ரிப்போர்ட்டர் 15.04.2007).
ஏப்ரல் 24, ஸ்ரீவில்லிபுத்தூர் - வத்ராயிருப்பு - கூமாப்பட்டியில் தேவேந்திர பெண்கள் மீது தாக்குதல் - க.லெட்சுமி (கஃபெ. பொன்னையா) மரணம் - 5,00,000 - இழப்பீடு வழங்க கோரிக்கை - மாவட்ட காவல் துறை அதிகாரிகளின் ஒருதலைபட்ச செயலைக் கண்டனம்.
மே 10, மதுரை சன் டி.வி, தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் - தலைவர் கண்டனம் - இறந்தவர்களுக்கு அனுதாபம்.
மே 17 - 20 தொகுதி மறுவரையறை ஆணையத்தின் கருத்துக்கேட்புக் கூட்டங்களில் கோவை - திருச்சி - மதுரை ஆகிய இடங்களில் புதிய தமிழகம் தலைவர் - பேராசிரியர் அருணா, கட்சியினர் சார்பில் பங்கேற்பு. புதிய தமிழகத்தின் போராட்ட முயற்சியால் தென்காசி (தனி) தொகுதி மீண்டும் தென் தமிழக தேர்தல் வரைபடத்தில் இடம் பெற்றது - நீலகிரியும் தனித்தொகுதியாக்கப்பட்டது.
ஜுன் 04, கோவை ரத்னா ரீஜன்சி; உணவகத்தில் புதிய தமிழகத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - விலை உயர்வுக்கு கண்டனம் - 525 கல்லூரி ஆசிரியர் பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பு - 77 சாதிகளுக்கு ஆதிதிராவிடர் பெயர் அரசு ஆணையை திரும்பப் பெற கோரிக்கை - மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட முடிவு.
ஜுன் 27 தமிழக அரசு கல்லூரரிகளில் பின்னடைவுப் பணியிடங்களை 495 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பாமல் 1000 பொதுப்போட்டி விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப எதிர்ப்பு - நீதி மன்றத்தில் புதிய தமிழகம் வழக்கு - பின்னடைவுப் பணியிடங்களைப் பொதுப் பணியிடங்களுடன் இணைப்பது குறித்து மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டுதல் பின்னடைவுப் பணியிடங்களை முதலில் நிரப்பக் கோருதல்.
ஜுலை 07, கோவை நகர மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடும் அதில் வீடற்ற மக்களின் பங்கு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 07.07.2007 கோவை அண்ணாமலைப் ஹோட்டல்.
ஜுலை 23, தாமிரபரணி தியாகிகளுக்கு நினைவஞ்சலி.
ஜுலை 26, டாட்டா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைக் கண்டித்து ஆகஸ்டு 3 போராட்டம் - பழவூர் கிராமத்திற்கு தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆகஸ்டு 04, டாட்டா தொழிற்சாலைக்கான அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி மௌன ஊர்வலம் - ஆர்பாட்டம் செய்ய புறப்பட்ட தலைவர் கைது.
செப்டம்பர் 10, தியாகதீபம் இம்மானுவேலர் நினைவேந்தல்.
அக்டோபர் 06, இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள தலைவர் தலைமையில் சென்னையில் பேரணி.
அக்டோபர் 30, சேது கால்வாய்த் திட்டத்தின் குறைபாடுகள் குறித்து சேது கால்வாய்த் திட்ட வல்லுநர் குழுவிடம் மனு.
நவம்பர் 02, டெல்லியில் வாழும் தமிழகத் தாழ்த்தப்பட்டோர் உரிமைப் போராட்டம் - கல்வி நிலையங்களில் இடம் வேண்டும் - வேலைவாய்ப்பு சாதி சான்றிதழ் ‘தாழ்த்தப்பட்டோர்’ என வழங்கக் கோருதல் - உள்ளுர் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்புக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக பிரதமர் இல்லம் முன் மறியல் போராட்டம் - பாராளுமன்ற ஜந்தர்மந்தர் பகுதியிலிருந்து பிரதமர் இல்லம் நோக்கி ஊர்வலம் - பல்லாயிரக்கணக்கான தலித்துக்கள் பங்கேற்பு - பிரதமர் அலுவலகத்தில் தலைவர் மனு.
நவம்பர் 15 பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பிய பிறகே மற்ற பணியிடங்களை நிரப்ப வேண்டும் - உயர்நீதி மன்றம் அரசிற்கு ஆலோசனை.
டிசம்பர் 10, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு புதியதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் சுகதேவ் தோரட் அவர்களுக்கு பிறந்தமண் அறக்கட்டளை - பல்வேறு தலித் அமைப்புக்கள் சார்பில் தலைவர் தலைமையில் பாராட்டு விழா - கிருத்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம், மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஹமிம்முஸ்தபா, ஜேப்பியார், அவ்வை நடராஜன், மாநிலத்தின் முக்கிய கல்வியாளர்கள் பங்கேற்பு - புதுக்கல்லூரி சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக