ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 1 மே, 2015

புதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 1995..

ஜனவரி 01, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு என பெயர் மாற்றம்.
ஜனவரி 18, உடுமலைப்பேட்டை, வடபூதனம், தென்பூதனம் கிராமத்தில் பாதை ஆக்கிரமிப்பு - தலைவர் எதிர்ப்பு - மாவட்ட நிர்வாகம் தலையீடு - அரசு நிலம் மீட்பு.
ஜுன் 30, இந்து நாளிதழில் 16.06.1995 பள்ளர் பற்றிய செய்திக்கு The Great Mallars (Pallars) of Tamil Country ழக என்ற தலைப்பில் தலைவர் விரிவான கட்டுரை எழுதியனுப்பினார் - இக்கட்டுரை வெளிவந்தது. (சான்றுகள் இல்லை).
ஜுலை 29, இம்மானுவேலர் பெயரில் மாவட்டம் - ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு முக்கியப்பதவி - செப்டம்பர் 15 ஆர்ப்பாட்டம் அக்டோபர் 16 முதல் தொடர் மறியல் தலைவர் அறிவிப்பு.
ஆகஸ்ட் 30,31, கொடியங்குளம் வன்முறை - பல லட்சக்கணக்கான மதிப்புள்ள தேவேந்திர மக்களின் உடைமைகள் - வீடுகள் சேதம் - வரலாறு காணாத வன்கொடுமை - தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் - ஐ - சம்பவ இடத்துக்கு தலைவர் விரைவு - நீதி விசாரணை கோரிக்கை - முதன்முதலாக பொதுநல வழக்கு - தென் தமிழகத் தமிழக சாதிய வன்முறைக்காக.
செப்டம்பர் 09 கொடியன்குளம் வன்முறை - குடிநீர் கிணறுகளில் விஷம் கலப்பு - கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைவர் மனு - உடனடியாக குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஐகோர்ட் கட்டளை.
செப்டம்பர் 16, பழனி ஆரியவைசியர் திருமண மண்டபத்தில் தேவேந்திரகுல - வேளாளர் - கூட்டமைப்பின் கூட்டம் - பசுபதி பாண்டியனை விடுதலை செய்ய கோரிக்கை.- இம்மானுவேலர் மாவட்டம் கோரிக்கை.
அக்டோபர் 05, கொடியன்குளம் வன்முறை - ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கோமதிநாயகம் ஆணையம் அமைப்பு.
அக்டோபர் 06, கொடியன்குளம் வன்முறை - காவல்துறை அத்துமீறலைக் கண்டித்தும் - சி.பி.ஜ. விசாரணைக் கோரிதேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் பேரணி - பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர். இராமதாஸ், ஆவடி சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்பு - கூட்டத்தினர் மீது வன்முறை - துப்பாக்கிச் சூடு வன்முறை - திரிசூலம் சிவஞானம், சுப்ரமணியம் வீரமரணம் - அனைத்துக்கட்சித் தலைவர்கள் கண்டனம்.
அக்டோபர் 08 சென்னையில் துப்பாக்கிச் சூடு - உயிர்ப் பலிக்கு பயந்தவர்கள் அல்ல நாங்கள் - எங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது - சென்னை செய்தியாளர் சந்திப்பில் தலைவர் ஆவேசம்.
அக்டோபர் 10, சென்னை மெரினா துப்பாக்கிச் சூடு - பிரேத பரிசோதனை அறிக்கை வழங்க மறுப்பு - 24 மணி நேரத்தில் நகல் கொடுக்காவிட்டால் - தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் முற்றுகை - தலைவர் அறிக்கை - உடலை பெற்றுக் கொள்ள மறுப்பு - அக்டோபர் 6 முதல் 10 வரை தொடர் போராட்டம் - 11 ஆம் தேதி பிரேத பரிசோதனையில் உண்மை அறிக்கையும் சான்றிதழும் வழங்கப்பட்டன - போராட்டம் வெற்றி.
அக்டோபர் 16 கொடியன்குளம் வன்முறை - மெரினா பொதுக்கூட்டம் துப்பாக்கிச் சூடு இருவர் பலி கண்டித்து அக்டோபர் 27 சாலை மறியல் அறிவிப்பு - சாலை மறியல் நவம்பர் 06 க்கு ஒத்திவைப்பு.
நவம்பர் 04, மதுரையை தலைமையிடமாகக் கொண்ட பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தை இரண்டாகப் பிரித்து வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் அமைக்க இருப்பதாக அ.இ.அ.தி.மு.க. அரசு அறிவிப்பு.
நவம்பர் 06 கொடியன்குளம் வன்முறைக்கு எதிராக தமிழகம் முழுவதும் சாலைமறியல்.
நவம்பர் 21, கொடியன்குளம் வன்முறை - அரசின் தலையீடு - நடுவன் அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க தலைவர் கோரிக்கை - மாநில அரசின் இழப்பீடுகள் வழங்கும் முறையில் உள்ள சிக்கல்கள் - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமரிடம் தலைவர் கோரிக்கை.
டிசம்பர் 05, சென்னையில் புதிய தலைமையகம், முல்;லைக்குடில்,, 91, கம்பர் தெரு, பச்சையம்மன் நகர், ஜமீன்பல்லாவரம், சென்னை 600043 முகவரியில் செயல்படத் துவங்கியது.
டிசம்பர் 06, கொடியன்குளம் வன்முறை - புதுடெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு - பிரதமர் நரசிம்மாராவிடம் மனு அளிப்பு - தென்தமிழகத்தின் கோரமுகத்தை தில்லிக் தெருக்களில் அம்பலம் - வடஇந்திய ஊடகங்கள் வியப்பு - பெரியார் மண்ணில் நடந்த வன்முறைக்கு - ஒடுக்கப்பட்டவனையும் ஒடுக்கியவனையும் சமரசமாக போக புத்தி சொன்ன திராவிட பசப்புரைகளை வடஇந்திய ஊடகங்களில் தலைவர் அம்பலப்படுத்தினார்.
டிசம்பர் 12, தென் தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள் மீது தொடர் வன்முறைகள் - தமிழக அரசை கண்டித்து டிசம்பர் 25 மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு உண்ணாவிரதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக