ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 1 மே, 2015

புதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 1997..

ஜனவரி 02 தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்ப தலைவர் கோரிக்கை - ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் செல்வராஜ் விரைவில் அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும் - அறிவிப்பு.
ஜனவரி 06, 07 ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கயத்தாறு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தலைவர் செல்லல் -
அலுவலகத்தைப் பூட்டிய அரசு ஊழியர்கள் - தலைவர் போராட்டம் - கைது - தென்தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதித்தது - சட்டம் ஒழுங்கு பிரச்னை - மதுரை சிறையிலிருந்து தலைவர் விடுதலை
பிப்ரவரி 27, தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் தாழ்த்தப்பட்ட பழங்குடியானருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை - பல்வேறு முறைகேடுகள் - ஆளுநருக்கு தலைவர் கோரிக்கை.
ஆகஸ்டு 19,
ஆகஸ்டு 06, பேரணி வெற்றி - சக ஒடுக்கப்பட்ட தலைவர்கள் சந்திப்பு.
மார்ச் 27, அரசு பணிகளில் தாழ்த்தப்பட்டோர் வௌ;ளை அறிக்கை வெளியிட கோரிக்கை - வெளியிடாவிட்டால் ஏப்ரல் 14 இல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் - தலைவர் அறிவிப்பு.
மே 01, பாண்டியன் போக்குவரத்துக் கழகம் இரண்டாகப் பிரிப்பு - விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் அமைப்பு என திராவிட முன்னேற்றக்கழக அரசு அறிவிப்பு - தேவேந்திரர்கள் மகிழ்ச்சி - தலைவரின் நீண்டநாள் கோரிக்கை வெற்றி.
மே 02, மேலகரைப்பட்டி அரண்மனை புதூர் செல்ல முயற்சி - தலைவா; கைது - வேலூர் சிறையில் அடைப்பு - மே 05 விடுதலை - பொய் வழக்கு பதிவு செய்த வீரன் அழகுமுத்துகோன் மாவட்ட ஆட்சித் தலைவர் - மாவட்ட கண்காணிப்பாளரை இடைநீக்கம் செய்ய கோரிக்கை.
மே 02, தேனியில் தலைவர் கைது - போக்குவரத்துக் கழகப்பெயர் மாற்றம் - கலவரம் - ஊட்டி மலர் கண்காட்சியிலிருந்து முதல்வர் கலைஞர் விரைவு - விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் - கலைஞர் அறிவிப்பு.
மே 05 திருநெல்வேலி மாவட்டம் துறையூரில் புதிய தமிழகத்தின் செயல்வீரர் மாவீரன் பிலிப்ஸ் சுட்டு வீழ்த்தப்பட்டார். பூவாணி சண்முகம் படுகொலை - காவல்துறை வன்முறை.
மே 07 திருநெல்வேலி மாவட்டம் துறையூர் துப்பாக்கிச் சூடு - இறந்த பிலிப்ஸ், சண்முகம் சடலங்களை மறுபடியும் பிரேத பாரிசோதனை மேற்கொள்ள தலைவர் கோரிக்கை.
மே 17, போக்குவரத்துக் கழக பெயர்ப் பிரச்சினை - வீரன் சுந்தரலிங்க போக்குவரத்துக் கழக பெயருக்கு எதிர்ப்பு - எதிர்ப்பு அதிகமுள்ள பகுதிகளில் உள்ள டெப்போகளில் மீண்டும் பாண்டியன் போக்குவரத்து கழக பெயரைத் தொடர அரசு யோசனை.
மே 21, வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் - முழுமையாக அமலாக்க வற்புறுத்தியும் தென் மாவட்டங்களில் அமைதியான சூழலை உருவாக்கவும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சிக்கூட்டம் - தலைவர் - ஜி.கே.மூப்பனார் - நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் - கருப்பன் ஐ.ஏ.எஸ் - பேராசிரியர் சரஸ்வதி - பாட்டாளி மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தலித் எழில்மலை - பல்வேறு ஒடுக்கப்பட்ட - சிறுபான்மை அமைப்புக்கள் பங்கேற்பு.
மே 27, வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழக செயல்பாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் - இம்மானுவேலர் பெயரில் புதிய மாவட்டம் - பரமகுடி அல்லது தென்காசி தலைநகராக அறிவிக்க கோரிக்கை - தலைவர் கோரிக்கை - கோரிக்கை நிறைவேறாவிட்டால் தமிழக முதல்வருக்கு கருப்புக் கொடி - முதல்வரின் தென்மாவட்ட வருகையைப் புறக்கணிப்போம் - தலைவர் அறிவிப்பு.
மே 29, மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களுக்கு தலைவர்கள் பெயர் - விவாதிக்க மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் - தமிழக முதல்வர் அறிவிப்பு.
ஜுன் 18, போக்குவரத்து கழகங்கள் மாவட்டங்களின் பெயர்களை மாற்றும் பிரச்சினையில் தி.மு.க. அரசு தெளிவான நிலையை மேற்கொள்ளவில்லை - தலைவர் குற்றச்சாட்டு.
ஜுன் 30, மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன், மூக்கன், பூபதி ராஜா, செல்லத்துரை, சேவுகமூர்த்தி உள்ளிட்ட ஆறு ஆதிதிராவிடத் தோழர்கள் படுகொலை.
ஜுலை 01, போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாவட்டங்களுக்கும் வைக்கப்பட்ட பெயர் நீக்கம் - அ.இ..தி.மு.க பொதுச்செயலாளர் கடும் கண்டனம்.
ஜுலை 01, பெயர் நீக்கம் திரும்பப் பெற பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் கோரிக்கை.
ஜுலை 02, போக்குவரத்துக் கழகம் மாவட்டங்களுக்கு தலைவர்கள் பெயர் நீக்கம் - நீக்கப்பட்ட பெயர்களில் பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளை.
ஜுலை 05, பொது வேலைநிறுத்தம் - புதிய தமிழகம் கோரிக்கை - தென் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - வேலை நிறுத்தத்திற்கு பா.ம.கா, இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் நல்லக்கண்ணு ஆதரவு.
ஜுலை 21, அரசு பணிகளில் தாழ்த்தப்பட்டோர் விகிதம் வௌ;ளை அறிக்கைக்கோரி நிதிநிலை அறிக்கை - பொது விவாதத்தின் போது தலைவர் அறிக்கை.
ஆகஸ்ட் 06 மேலவளவு படுகொலை - கண்டித்து தமிழக தாழ்த்தபட்ட அமைப்புகள் சார்பில் பேரணி - பேரணிக்கு உயர்நீதிமன்றம் 50 கடுமையான நிபந்தனைகள் - சென்னை பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை - கடைகள் அடைப்பு - வள்ளுவர் கோட்டம் முதல் ஆளுநர் மாளிகை வரை மிக பிரம்மாண்ட பேரணி - அனைத்து தலித் அமைப்பும் பங்கேற்பு - துப்பாக்கிப் போலீசார் - கண்ணை கூச வைக்கும் சோடியம் விளக்குகள் - கண்ணீர் புகை வீச தானியங்கு இயந்திரம் - மைகலந்த நீரை பீச்சியடிக்கும் இயந்திரம் - ஆந்திரம் - கர்நாடக போலீசார் குவிப்பு - நீதிமன்றம் பல் நிபந்தனைகளை விதித்தது.
செப்டம்பர் 13, தாழ்த்தப்பட்டோர் பணியிடங்களை முறையாக நிரப்ப அமைச்சர் தலைமையில் கண்காணிப்புக்குழு - தலைவர் உறுப்பினராகத் தேர்வு.
செப்டம்பர் 27, தலித் மாணவர் எழுச்சி மாநாடு - தலைவர் பங்கேற்பு - தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி - எதிர்காலம் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றம்.
அக்டோபர் 02,
அக்டோபர் 09, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பணியிடங்களைக் கண்டறிய அமைச்சர் தலைமையில் குழு.
அக்டோபர் 15, தேனி மாவட்டத்துக்குள் நுழையத் தடை - பேரவையில் தலைவர் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முயற்சி - பேரவைத்தலைவர் அனுமதி மறுப்பு - தலைவர் வெளிநடப்பு.
அக்டோபர் 17, ஜனவரி 07 கயத்தாறு அலுவலகம் பூட்டப்பட்டமை - ஜனவரி 08 தலைவர் கைது - ஜனவரி09 - பொதுசொத்துக்கள் சேதம் - துப்பாக்கிச் சூடு - நீதிபதி மாணிக்கம் ஆணையம் விசாரணை - கடையநல்லூர் துப்பாக்கிச் சூடு நியாயமானதே - அறிக்கை தாக்கல்.
அக்டோபர் 18, தமிழக சட்டப் பேரவையில் தலைவர் மீது தாமரைக்கனி அவதூறு - தலைவர் கடும் கண்டனம்.
அக்டோபர் 18, சாதிகளின் பெயரால் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் - திருநெல்வேலி துறையூரில் மே 05 இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு - நீதிபதி காமாட்சி விசாரணை ஆணையம் அறிக்கை.
அக்டோபர் 19, கோவை வேலாயுதம்பாளையம் மலைக்கோயில் நுழைவு அறப்போர் - கொடிக்கம்பத்தை அகற்றும் வரை வேலை தரமாட்டோம் - தாழ்த்தப்பட்டோருக்கு சாதிவெறியர்கள் எச்சரிக்கை.
அக்டோபர் 20, மதமாற்றத் தடைச்சட்டத்தை வாபஸ் பெறக் கோரி சென்னையில் டிசம்பர் 06 ல் பேரணி - தலைவர் அறிவிப்பு.
அக்டோபர் 22, பல்லடம் தாலுக்கா வேலாயுதம்பாளையம் மலைக்கோயில் நவம்பர் 03 ஆம் தேதி நுழைவோம் - தலைவர் அறிவிப்பு - மாவட்ட நிர்வாகம் உள்ளுர் ஆதிக்கசாதிகள் கூட்டு (போலியான) கோயில் நுழைவு - தலைவரின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் தந்திரம் - அம்பலம்
அக்டோபர் 31, நிலக்கோட்டை வன்முறை.
நவம்பர் 07, தேனி மாவட்டத்தில் நுழைவதற்குத் தடை - கோவில் ஆர்ப்பாட்டம்.
நவம்பர் 08, துறையூர், கடையநல்லூர் துப்பாக்கிச் சூடு - நீதிபதிகள் காமாட்சி, மாணிக்கம் விசாரணைக்கமிஷன் அறிக்கைகளை அரசு நிராகரிக்க வேண்டும் - தலைவர் கோரிக்கை.
நவம்பர் 03, 09, 10, பம்பாயில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தொடக்க விழா.
நவம்பர் 18, 20மூ போனஸ் தராவிட்டால் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்.
நவம்பர் 24, ஜெயின் கமிஷனின் உள்நோக்கம் - தலைவர் அறிக்கை.
நவம்பர் 25, தமிழ்ப்பல்கலைக் கழகம் - பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பக் கோரிக்கை.
நவம்பர் 26, வீரப்பன் சரண் : அமைதி வழியைப் பின்பற்ற தலைவர் கோரிக்கை - மலைவாழ்மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிரடிப்படையைத் திரும்பப் பெற வேண்டும்.
டிசம்பர் 13, தேனி மாவட்டம் சீலையம்பட்டி குருவம்மாள் மீது காவல்துறை பாலியல் வன்முறை - தேசிய மனித உரிமை ஆணையரிடம் புதிய தமிழகம் மனு.
டிசம்பர் 15, புதிய தமிழகம் அரசியல் கட்சி தொடக்கம்.
டிசம்பர் 20, தேவேந்திரகுல வேளாளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி வழங்க வேண்டும் - தலைவர் கோரிக்கை.
பணியாளர் தேர்வுக் குழுக்கள் தாழ்த்தப்பட்டோருக்கு இடம் தர தலைவர் கோரிக்கை - தமிழக முதல்வர் கலைஞர் ஆணை வெளியிட்டார்.
சாதி பெயர் நீக்கம் - தலைவர் - தேவர் பேரவை, நகைமுகன், ம.தி.மு.க, பொன்முத்துராமலிங்கம், சக்திதாசன், தமிழரசன் உட்பட பத்து பேர் போக்குவரத்துக்கழகம், மாவட்டங்கள் நீக்கத்துக்கு எதிர்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக