ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 5 மே, 2015

ஆளுநர் ரோசய்யாவை மாற்ற வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செயலற்று கிடக்கும் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்காததால் தமிழக ஆளுநர் ரோசய்யாவை மாற்ற வேண்டும். தமிழகத்தை செம்மையாக்க, செழுமையாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. அண்டை மாநிலங்களால் தமிழகம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதற்கு நிரந்தர குழு ஒன்றை அமைத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளை இணைத்து போராட புதிய தமிழகம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக திமுக தலைவர் கலைஞரை சந்திக்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக