ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 30 ஆகஸ்ட், 2014

முத்துராமலிங்க தேவர் கைதை வரவேற்றார் பெரியார்..


முதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து, முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டபோது பெரியார் விடுத்த அறிக்கை:
‘உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றிஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பார்ப்பனஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்றுகசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன. கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமில்லாதபல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்துவிஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.

‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக்கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில்சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.

‘திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியு மில்லை; கொள்கையுமில்லை. ‘சுபாஷ் போஸ்உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா? தேவர் தம்சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவராயிருந்துகொண்டு, அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவதுஎன்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப்பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமாஎன்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவராதலால் அந்தவாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு(அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார். தன்னந் தனியாய்ப்பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான்கேட்க வேண்டும்.

‘ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜாமாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை.ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜன நாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத்தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.

‘தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில்அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச் சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர்வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண் டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின்கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர். (இராஜகோபாலாச்சாரி), கும்பலைச்சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம். இதே சி.ஆர். அவர்கள்முதலமைச்சராயிருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார்கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப்பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனைஉயிர்கள் பலியாகியிருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா? இத்தகையஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?

‘போலீஸ் நடவடிக்கை சிறிது தாமத மானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது. இன்னும்பல மாதங்களுக்குப் போலீஸ் படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும்.போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத் தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர்வடிக்கின்றவர்கள், மாதா கோயிலுக் குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள்பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றும், அடித்தும், பெண்களை அவமானப்படுத்தியும்மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்?

‘சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோஎன்று அஞ்ச வேண்டியதிருக்கிறது. இவர்கள் பேச்சும் நடத்தையும்அத்தகையதாயிருக்கிறது. ஆதலால் அவர்களைக் கலவரப் பகுதியில் நுழையவிடக்கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம். குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறார்கள் இக் குழுவினர். இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர்தூபம் போடுகிறார்.”

- பெரியார் - ‘விடுதலை’

முதுகுளத்தூர் கலவரம் குறித்து பெரியார் நடத்திய ‘விடுதலை’ வெளியிட்ட செய்திகள்

இன்று மட்டுமல்ல, முதுகுளத்தூர் கலவர காலம் முதல் ஒடுக்கப்பட்ட மக்களினது போராட்டங்களுக்கு வெளிப்படையான, உறுதியான ஆதரவை எந்தவொரு அரசியல்கட்சியும் தந்ததில்லை. தங்களது வாக்கு வங்கியாக, ஒடுக்கப்பட்ட மக்களைப் பயன்படுத்தும்நோக்கில் மட்டுமே அரசியல் கட்சிகளும், வலதுசாரி - இடதுசாரி தலைவர்களும் பாசாங்குசெய்து வருகின்றனர். விதிவிலக்காக திராவிடர் கழகமும், விடுதலை நாளேடும் மட்டுமேஅன்றைய சூழலில் ஆதரவு தளத்தில் செயல்பட்டன. ‘விசாரணையின் தீர்ப்பு’ என்றதலைப்பில் 12.10.57 அன்றைய ‘விடுதலை’ நாளேடு, ‘திரு. முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்கைது செய்யப்பட்டதை முன்னிட்டு சென்ற வாரத்தில் மதுரையில் கடையடைப்பு நடந்ததாம்(மதுரையில் கடையடைப்புச் செய்ய வேண்டுமென்று யாராவது ஒருவர் 4 முக்கியஇடங்களில் தட்டியில் எழுதி வைத்துவிட்டால் போதும்! காலித்தனத்துக்கு அஞ்சி எல்லாக்கடைகளையும் மூடிவிடுவார்கள்!) இந்தக் கடையடைப்பை மேற்பார்வையிடுவதற்காககம்யூனிஸ்ட் எம்.பி.யும், கண்ணீர்த் துளித் (தி.மு.க.) தலைவர் ஒருவரும், காங்கிரஸ்கண்ணீர்த் துளி தலைவரும் ஒரே மோட்டார் காரில் ஊர்வலமாகச் சென்றார்கள் என்றுபடித்தோம். எவ்வளவு ஒற்றுமைப் பார்த்தீர்களா? எலியும், பூனையும், நாயும் ஒரே தட்டில்உணவு சாப்பிடுவதைப் போன்ற சர்க்கஸ்! சாதி வெறியர்களுக்கு ஆதரவாக சமாதானக்குழுவாம்! ஊர்வலமாம்! கடையடைப்பாம்! நிதி திரட்டலாம்! நீதிமன்ற வழக்காம்! கீழத்தூவல் கலவரத்தின்போது போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்காவிட்டால்இருபுறமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் சேதப்பட்டிருக்கும்; இன்னும் ஏராளமானஆதிதிராவிடக் குடிசைகள் தீக்கிரையாகியிருக்கும். சாதிவெறி எங்கிருந்தாலும் அதைஅடக்கி, ஒடுக்கியே தீர வேண்டும்’ என தலையங்கம் எழுதியது. தினகரனும் பெரியார்ஒருவரை மட்டுமே ஆதரவு சக்தியாகக் குறிப்பிடுகிறார்.

இராமநாதபுரம் கலவரப் பகுதிகளை மூன்று நாட்கள் பார்வையிட்டு, மதுரையில்பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த அன்றைய மத்திய அரசின் உள்துறை அமைச்சர்திரு.பி.என். தத்தார், ‘கடந்த பத்து ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களிடையேவிழிப்பும் எழுச்சியும் ஏற்பட்டு வளர்ந்து வந்திருக்கிறது. சமத்துவ எண்ணமும் தோன்றஆரம்பித்திருக்கிறது. தங்களை தாழ்த்தப்பட்ட மக்களைவிட உயர்ந்தவர்கள் என்று கருதிவந்த மறவர்களுக்கு இது பிடிக்கவில்லை. இவர்கள் நிலப்பிரபுத்துவ கொள்கையைக்கொண்டிருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக, மறவர்கள் முன்னிலையில்தாழ்த்தப்பட்ட மக்கள் மேல்துண்டு போடக் கூடாது; காலில் செருப்புப் போட்டுக் கொள்ளக்கூடாது. இப்போக்கை வளரும் தாழ்த்தப்பட்ட இளைஞர் சமுதாயம் எதிர்த்து வந்தது. இம்மனப்பான்மைகளுக்குள் மோதல் ஏற்பட்டதே இக்கலவரத்திற்கு மூலகாரணம். மேற்படிகலவரத்திற்கு உடனடிக் காரணம், இதர சமூகத்தினருடன் சம அந்தஸ்து கோரியதாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான திரு. இம்மானுவேல் சேகரன் என்பவர் கொலைசெய்யப்பட்டதுதான்’ என்றார். 

(விடுதலை) 8.10.57)
‘தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் நூலிலிருந்து

முதுகுளத்தூர் கலவரம்: வரலாற்றுப் பின்னணி...


தமிழக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி முதுகுளத்தூர் கலவரம். அதன்சுருக்கமான வரலாற்றுப் பின்னணி இதுதான்.

• 1945 இல் எஸ்.எஸ்.எல்.சி.யை முடித்த ‘தேவேந்திரர்’ சமூகத்தைச் சார்ந்தஇமானுவேல் ராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் தனதுசமூக மக்கள் இந்துக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கிடப்பதையும் சாதி இழிவுக்குஉள்ளாக்கப்படுவதையும் கண்டு வேதனை அடைந்தார். 1952 இல் தனது அவில்தார் பதவியைராஜினாமா செய்து விட்டு சமூகக் களத்தில் இறங்குகிறார்.

• தேவேந்திரர்கள் செருப்பு அணியக் கூடாது; குடை பிடிக்கக் கூடாது; முழங்காலுக்குக்கீழே வேட்டி கட்டக் கூடாது; பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது போன்ற எட்டு தடைகளைமறவர்கள் தேவேந்திரர்கள் மீது சுமத்தி இருந்தனர்.

• 1957 இல் நடந்த பொதுத் தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்கும்முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் பார்வர்டு பிளாக் சார்பில் முத்துராமலிங்கத் தேவர்போட்டியிட்டார். இவைகள் இரட்டை உறுப்பினர் தொகுதி. தனித்தொகுதிக்கு ஒருவேட்பாளரையும் பொதுத் தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் தேர்வு செய்ய வேண்டும்.எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை இமானுவேல் தீவிரமாக ஆதரித்தார்.

• போட்டியிட்ட இரண்டு பொதுத் தொகுதிகளிலும் முத்துராமலிங்கத் தேவர் வெற்றிப்பெற்றுவிட்டார். ஆனால், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத்துக்கான தனித் தொகுதியில் -பார்வர்டு பிளாக் சார்பாக முத்து ராமலிங்க தேவர் நிறுத்திய வேட்பாளர் தோல்விஅடைந்துவிட்டார். முத்துராமலிங்க தேவருக்கு அப்பகுதியில் கிடைத்த முதல் தோல்விஇதுதான். அதோடு இத் தொகுதியில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட‘தேவேந்திர’ வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்கு, தேவர் பெற்ற வாக்குகளைவிட 1.5லட்சம் கூடுதலாக இருந்தது. தேவரின் சாதி ஆதிக்கத்துக்கு சவால் வந்துவிட்டது என்பதைஉணர ஆரம்பித்தனர். தேவர் - தேவேந்திரர் பகைமை முற்றியது.

• தொடர்ந்து காடமங்கலம், சாக்குளம், கொண்டுலாவி, பூக்குளம், கமுதி ஆகியஊர்களில் தேவேந்திரர்களை வம்புச் சண்டைக்கு இழுத்து, தேவர்கள் தாக்க,தேவேந்திரர்களும் திருப்பித் தாக்க கலவரங்கள் நடந்தன.

• இரண்டு தொகுதிகளில் வெற்றிப் பெற்ற முத்துராமலிங்க தேவர் - முதுகுளத்தூர்சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவே அங்கு இடைத் தேர்தல் வருகிறது.தேர்தல் பிரச்சாரத்தில் - மோதல் வலுக்கிறது.

• இரு பிரிவினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்,மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகி யோர் 1957 செப்டம்பர் 10 ஆம் தேதி அமைதிக் கூட்டத்தைக்கூட்டினர். தேவேந்திரர்கள் சார்பில் இமானுவேலும் கலந்து கொண்டார். 9 மணிக்கு நடக்கஇருந்த கூட்டத்துக்கு தேவர் 10 மணிக்கு வந்தார். அனைத்து அதிகாரிகளும், பிரமுகர்களும்ஒரு மணி நேரம் தேவருக்காக காத்திருந்தனர்.

• தேவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்று ‘எஜமான் வணக்கம்’ என்று எல்லோரும்சொல்ல வேண்டும் என்ற வழக்கம் - அப்போது கட்டாயத்திலிருந்தது. அமைதிக்கூட்டத்துக்கு வந்தவர்கள் அப்படியே கூறினர். ஆனால் இமானுவேல் அப்படிக் கூறாமல்இருந்தார்.

• பல பிரச்சினைகளில் இமானுவேலுக்கும் தேவருக்கும் கூட்டத்தில் காரசாரமானவாக்குவாதம் நடந்தது. இறுதியாக சமசர ஒப்பந்தம் தயாரானது. ஒப்பந்தத்தில்,தேவேந்திரர்களின் பிரதிநிதியாக தனக்கு சமமாக இமானுவேலை ஏற்க முடியாது என்றுகூறி, தேவர் கையெழுத்திட மறுத்தார். நீண்ட விவாதத்துக்குப் பிறகு - அதிகாரிகள்வற்புறுத்தலுக்குப் பிறகே தேவர் கையெழுத்திட்டார்.• அடுத்த நாள் - செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடி அருகே எமனேசுவரர் எனும் ஊரில்பாரதி நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிவிட்டு பரமக்குடியிலுள்ள தமது இல்லம்திரும்பி, உணவு அருந்திவிட்டு, 50 அடி தூரத்தில் உள்ள பெட்டிக் கடைக்குப் பொருள் வாங்கப்போனார் இமானுவேல். அப்போது இரவு 8.30 மணி. பேருந்திலிருந்து இறங்கிய கும்பல் ஒன்றுகடை வாசலில் இமானுவேலை வெட்டிச் சாய்த்தது. தனது 33வது வயதில் தான் ஏற்றுக்கொண்ட சாதி ஒழிப்பு லட்சியத்திற்காக இமானுவேல் மரணத்தைத் தழுவினார்.

முதுகுளத்தூர் கலவரம் வரலாற்றின் குருதி எழுதிய வரைபடம்....

முதுகுளத்தூர் கலவரம்
ஆசிரியர்: தினகரன்
தொகுப்பும் மதிப்பும்: கா. இளம்பரிதி
வெளியீடு: யாழ்மை
134, மூன்றாம் தளம், தம்புசெட்டித் தெரு
பாரிமுனை, சென்னை 600 001
இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2006
பக் 120, விலை ரூ. 70.
1957 பொதுத் தேர்தல் - அதற்கடுத்த இடைத் தேர்தல் - அவற்றை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கொந்தளிப்பு எழுந்தது. அதை அடக்க 1957 செப்டம்பர் 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அமைப்பின் சார்பில் கலந்துகொண்டவர் இம்மானுவேல் சேகரன். மறவர்கள் சார்பில் உ. முத்துராமலிங்கத் தேவர். கூட்டத்தில் இம்மானுவேல் அவர்களின் தலைமை குறித்து விவாதம் எழுந்ததாகத் தெரிகிறது. கூட்டறிக்கைக்குத் தேவர் ஒப்புக்கொள்ளாத நிலையில் ஒரே வாசகம் உள்ள தனித்தனி அறிக்கைகளை வெளியிடும் சமாதானத் திட்டத்தோடு கூட்டம் ஒருவகையாக முடிந்தது. மறுநாள் இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். அக்கொலையின் தொடர்ச்சியாக இரு சமூகத்தினரிடையே மோதல் மூண்டு அது ஏறக்குறைய ஒரு மாத காலம் நீண்டது. பல மனித உயிர்கள் பறிபோயின. நாசமான சொத்துகள் இரு தரப்பிலும் இருந்தன. வரலாற்றின் குருதி எழுதிய வரைபடமாக முதுகுளத்தூர் தமிழக வரலாற்றில் பதிவானது.
தமிழகத்தை உலுக்கிய மிக முக்கியமான சாதியக் கிளர்ச்சிகளுள் ஒன்றான இந்தக் கலவரத்தின் மூலகாரணம் என்ன? முடிவு எது? இவை குறித்துப் பத்திரிகையாசிரியர், எழுத்தாளர், காங்கிரஸ்காரர் தினகரன் சம்பவக் காலத்திலேயே எழுதி வெளிவந்த நூலின் புதிய அண்மைப் பதிப்பு 'முதுகுளத்தூர் கலவரம்' என்ற இந்நூல்.
'உதடசைந்தால் உயிர் போய்விடுமே என்று உலகமே பயந்தபோது உண்மையைச் சொன்னால் ஒன்றுமே வராது' என்று தவறாக நினைத்து, உண்மையைச் சொல்லி உயிரை மாய்த்துக்கொண்ட தினகரனின் இந்நூல் பின்வரும் விஷயங்களை விரிவாகப் பேசுகிறது. 12ஆம் நூற்றாண்டிலிருந்து மறவர்களின் சரித்திரம், 1932-1939; 1947-1957 ஆகிய காலகட்டங்களில் இராமநாதபுரம் பகுதியின் அரசியலில் சாதியத்தின் பங்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தை, இம்மானுவேலின் படுகொலை, அதனால் ஏற்பட்ட கலவரம், அரசியல் தலைவர்களின் கருத்துகள், விளைவுகள் என்ற நிரலில் நூல் ஆக்கப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக அமைந்துள்ளவை நூலைக் காட்டிலும் முக்கியமானவை. மனித உரிமைகள் சர்வதேச மன்னிப்பு ஸ்தாபன காங்கிரஸ் ஒன்றின் அறிக்கை (1984), தேவர் தொடர்பான வழக்கின் நீதிமன்றத் தீர்ப்புகள் சிலவற்றின் தமிழ் வடிவம் (1940கள்), முது குளத்தூர் சேம நலச் சங்கத்தாரின் மனு (1957), இக்கலவரம் பற்றிய தமிழ்நாடு அரசின் உள்துறை அமைச்சரின் சட்டசபை அறிக்கை (1957) முதலியவை அந்தப் பின்னிணைப்புகள்.
அப்போதைய தமிழக முதல்வரும் இராமநாதபுரம் மாவட்டம் விருதுநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான காமராஜ், முதுகுளத்தூர் கலவரம் இருபது வருடங்களாக இருந்துவரும் நாள்பட்ட சமூகப் பிரச்சினையின் விளைவு என்றார். "இந்தச் சதித்திட்டம் மதுரையிலும் விருது நகரிலும் உள்ள சிலரால் ரகசியமாய் வகுக்கப்பட்டது. ஹரிஜனங்களில் ஒரு பகுதியினருக்குப் பணம் கொடுத்து இந்தக் கலகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இது ஆளும் காங்கிரசின் சதி" என்றார் முத்துராமலிங்கத் தேவர் (பக். 40).
(இந்நிலப்பகுதியில் மிகப்பல ஊர்களில் விரிந்து கிடந்த விவசாய நிலத்திற்குச் சொந்தக்காரராய் இருந்த தேவர் அந்நிலங்களின் பயிர் ஏற்றத்திற்குப் பல்வேறு நிலைகளில் தொடர்பு உள்ளவர்களைப் பகைத்துக்கொள்ள வாய்ப்பு மிகக் குறைவு. அந்த விவசாயக் கூலிகளைத் தம் கீழ் வைத்துக்கொள்ள வேண்டி அவர் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். எனவே தேவர், எந்த இனத்தைக் கலவரத்திற்குக் காரணமாகச் சுட்டுகிறார் என்பதை மேற்கண்ட குறிப்பிலிருந்து நாம் உணர முடியும்.)
காமராஜ் அமைச்சரவையில் உள்துறையைக் கவனித்துவந்த எம். பக்தவத்சலம், அரசியல், வகுப்புவாதம், நிர்ப்பந்தம் ஆகிய மூன்றையும் சேர்த்துப் பிடித்த ராட்சஸப்பிண்டம் இக்கலவரம் என்றார். நிலப்பிரபுத்துவ முறை இன்னும் நீடிப்பதாய் நினைத்துக்கொண்ட ஒரு சமூகத்தின் மேலாண்மையின் விளைவு என்று பொருள்பட நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் கருத்துரைத்தார்.
சாதிகள் இருக்கும்வரை இந்தச் சண்டைகள் தீராது எனக் கலவரத்தின் ஆணிவேரைப் பிடித்தார் பெரியார். இப்படிச் சமூகத்தின் பலரும் இக்கலவரம் பற்றி பல்வேறு விதமாகக் கருத்து வெளியிட்ட நேரத்தில், 'கலகத்திற்கு வித்திட்ட வகுப்பிலும் நிலத்திலும் உதித்தவன் நான் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயந்தான்' என்று இக்கலவரக் காரணம் பற்றிய (முன் எண்ணத்தோடு) ஒப்புதல் வாக்குமூலத்தோடு, இந்நூலாசிரியர் எழுத முனைந்திருக்கிறார். "காங்கிரஸ் கட்சியின் கீர்த்தியைக் கெடுக்க, சென்னை சர்க்காரின் திறமையைப் பழிக்க, தமிழ் மக்களின் மானத்தைப் பறிக்க வந்த இந்தச் சம்பவங்கள்" (பக். 23) என்று காங்கிரஸ் கட்சி, ஆட்சி ஆகியவற்றுக்கு நேர்ந்துவிட்ட இழுக்கை, தமிழ் மக்களின் மானத்தின் பேரால் துடைப்பதாகச் சொல்லித் தன் நூலைத் தொடங்குகிறார். தொடர்ந்து பல இடங்களிலும் கட்சியின் செயல்களை நியாயப்படுத்தும் தொனியிலேயே நூல் நகர்கிறது. நூலின் பக்கங்கள் 36, 38, 45, 51, 70 எனப் பல இடங்களில் இதற்கான சான்றுகளைப் பார்க்க முடியும். கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் அவருக்கு நெருக்கமான கட்சிசார்ந்த உறவு இருந்திருக்கிறது. 'இந்தக் கொலைக்கொள்ளி மனிதனைக் காங்கிரஸ் கட்சியில் கொண்டுவந்து சேர்த்தது யார்? என்று ஒரு சமயம் இராஜாஜி என்னிடம் கேட்டார்' என்று தேவரைக் குறிப்பிட்டு தினகரன் எழுதியுள்ளார் (பக். 39). ஒரு கட்சியில் ஒரு குறிப்பிட்ட குழுவின் உள் இடைவெளிகளைப் பெரிதுபடுத்தி, சம்பந்தப்பட்டவரின் செல்வாக்கைக் குறைக்கும் நுண் அரசியலின் விளைவு இந்தக் கேள்வி என்பது தினகரனுக்குத் தெரியாமலா இருக்கும்? இருந்தும் இதை எழுதுகிறார்.
கலவரப் பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டபோது, களத்தில் பேசிய பேச்சுகளை நூலாசிரியர் வியந்து போற்றும் வரிகள், அவரது காங்கிரஸ் பார்வையை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கம்யுனிஸ்ட் கட்சி கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கிண்டல் செய்வதும் கட்சிச் சார்பை நன்கு வெளிப்படுத்துகிறது. எனவே, தினகரனின் இந்தப் பிரதியைக் காங்கிரஸ் கட்சியை, ஆட்சியைக் காப்பாற்ற எழுதப்பட்டதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. தினகரனின் முன்வரலாறும் அதை உறுதி செய்கிறது. குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக ஒரு கட்சியில் இயங்கிய, 'பெரிதும் கட்சி சார்ந்த' எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று தினகரனைக் கருதலாம்.
கட்சிக்கு எதிராக அரசியல் செய்வதால் தேவர்மீது கோபம் கொண்டிருந்த காங்கிரஸ் தினகரன் மூலம் இந்தப் பிரதியை எழுதியிருக்கலாம். முது குளத்தூர் பயங்கரம் என்ற நூலை எழுதிய டி. எஸ். சொக்கலிங்கம் பிள்ளையின் பொருத்தப்பாட்டையும்விட மறவரான தினகரன் இது பற்றி எழுதுவது உயர்ந்தது என்று காங்கிரஸ் தலைவர் காமராஜ் நாடார் நினைத்திருக்கலாம்.
இந்நூலின் பின்னிணைப்பாகியுள்ள சிறு பிரசுரம் ஒன்று, இந்திராகாந்தியின் படத்தை அட்டையில் பிரசுரித்துக்கொள்ளும் அளவுக்குக் கட்சி சார்ந்த பிரசுரமாக உள்ளது. இச்சம்பவம் குறித்த உள்துறை அமைச்சரின் அரசு அறிக்கையும் கட்சியின் பார்வையிலேயே உருவாகியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இத்தகைய தன்மை கொண்ட இரண்டு எழுத்துருக்களை நூலில் இணைத்ததன் மூலம் கட்சி சார்ந்த தொனி நூலில் மிகுதியாகிவிட்டது. மற்ற பின்னிணைப்புகளான நீதிமன்றத் தீர்ப்புகள் இந்தப் பேராயப் பேரொளியின் முன் மங்கிவிட்டன.
சாதிய ஒடுக்குமுறையின் எதிர்ப்புப் போராட்டமாக இந்தக் கலவரத்தைப் பார்க்கும் இந்நூலின் பதிப்பாளர்கள், ஆவணப்படுத்தப்படாத வரலாற்று மீட்பாகவே இதைக் கருதுகிறார்கள். ஆசிரியர் தினகரன் எப்படிச் சுயசாதி மறுத்துச் செயல்பட்டாரோ அப்படிப் பிற்படுத்தப்பட்டவர்கள் உயிர்த் தியாகம் செய்யுமளவிற்குச் சுயசாதி வெறியை எதிர்த்து வினையாற்றுவதுதான் தலித்தியத்திற்குச் செய்யும் முக்கியப் பங்களிப்பு எனும் கருத்தை முன்வைத்து நூலைப் பதிப்பித்திருக்கிறார்கள். பதிப்பாளர்களின் பார்வையில் தினகரனின் இந்த நூல் தலித்தியத்திற்கு ஆதரவான நூலாக மாறி உள்ளது. எந்தச் சமூகத்திலும் எழுதப்படாத வரலாறுகளே எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறாக உள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை இப்படிப்பட்ட மூலங்களிலிருந்தே நாம் உறிஞ்சி எடுக்க வேண்டியுள்ளது. ஆவணப்படுத்தாமல் அழிந்துகொண்டிருக்கும் இந்த வகை வரலாறுகள் உருப்பெற்று மேலெழும்போது, அதுவரையில் நிலவிய மைய நீரோட்ட வரலாறு முற்றிலும் தன்னை இழந்து காலக் கண்ணாடி முன் அம்மணமாய் நிற்கும்.
தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட மக்களின் வரலாறு வைக்கம், சேரன்மாதேவிப் போராட்டங்களாக வரலாற்றில் மறைந்துகிடக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சியின் விதைகள் சித்தனூர், கண்டதேவி, வடுகனி, இரவுசேரி, முதுகுளத்தூர், கொடியங்குளம், தாமிரபரணிக் கரை எனப் பல இடங்களில் புதைந்து கிடக்கின்றன. அவை வெளிக் கிளம்பி, பெரிய மரமாகி, காற்றை நிரப்பும்போது வரலாறு முற்றிலும் மாறி நிற்கும்.
அரை நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட நூலை இன்றைய காலத்தோடு இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த முன்னுரைகள் இரண்டும் பிற்படுத்தப்பட்டவர்களைத் தலித்தியத்திற்கு எதிராக நிறுத்துகின்றன. இதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், விதிவிலக்காக, முதுகுளத்தூர் கலவரம் உள்பட இன்றுவரை அநேகப் பிரச்சினைகளில் தலித்தியத்திற்கு ஆதரவு சக்தியாகப் பெரியாரும், இந்தத் தினகரன் போன்ற சுயசாதி அபிமானமற்ற பிற்படுத்தப்பட்டவர்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் இவர்கள் மிகச் சிலர்.
பிற்படுத்தப்பட்டவர்களில் தலித்திய ஆதரவு சக்தியாகச் செயல்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது இந்த நூலின் நோக்கங்களில் ஒன்று என்றால் இந்நூல்வழி கிடைக்கும் அதன் வெற்றி உடனடியானதல்ல.
ஏற்கனவே, கடந்த 50 வருடங்களாகச் சமூகத்தில் செல்வாக்கு செலுத்திவந்த, நாட்டின் தபால்தலை வரை சென்றுவிட்ட சிலரது பண்புருக்களை இந்நூல் கடுமையாக அசைத்திருக்கிறது. ஒரு சாராரின் உயர்வுக்குக் காரணமானாலும் அது யார் பலியில் நிகழ்ந்திருக்கிறது என்பதை இந்நூல் சொல்லாமல் புரியவைத்துவிட்டது. தென் மாவட்டங்களில் பேச்சு வழக்கில் புழங்கிவரும் சொல்லாடல்களுக்கு அச்சு வடிவம் தந்துள்ள பிரதி இது. களப் போராட்டத்துக்கான அறிவுப் பின்புலத்தை வலுவடையச் செய்யும் திசையில் இந்நூல் பெரும்பணி ஆற்றும்.
ஒரு குறிப்பிட்ட கலவரம் பற்றிய இந்த ஆவணம் மறவர் - பள்ளர் மோதலில் மறவர்களுக்குத் தலைமை தாங்கியவரின் செயற்பாடுகளை விளக்குகிறதே தவிர, அவரது முந்தைய குற்றப் பரம்பரைச் சட்ட நீக்கம் உள்ளிட்ட செயற்பாடுகளை ஒதுக்கிப் புறந்தள்ளவில்லை. ஆனால் அவற்றில் கலந்துள்ள சாதிய உணர்வுகளை உணர்த்திச் செல்கிறது. நீதிமன்றத் தீர்ப்புகள் வாசக மனத்துக்குள் கட்டமைக்கும் பிம்பம் மிகக் கடுமையாக இருக்கும். பதிப்பாளர்கள் திறமையானவர்கள்.
ஆசிரியர் தினகரனின் தேவர் எதிர்ப்பு நிலை குறித்துத் தெளிவாக்கப்பட வேண்டிய சில புள்ளிகள் உள்ளன. அவர் தன் இதழை, தேவருடன் நெருங்கிய நட்பு கொண்ட ஒருவரின் (அ) இருவரின் துணையோடுதான் நடத்தியிருக்கிறார். எனவே அவ்விதழில் வெளியான தேவர் பற்றிய விமர்சனங்களைப் பகை முரணாகக் கொள்ளுவது பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. தனது வளர்ப்பு மகனையும் மீறித் முத்துராமலிங்கத் தேவருக்கு ஆவணம் தேடிய குழந்தைசாமி, தனது வளர்ப்புப் பத்திரிகையையும் மீறி தேவருக்கு ஆதரவு காட்டிய (குழந்தைசாமி மகன்) ஆறுமுகம் ஆகியோரின் செயல்கள் சுலபமாகப் புறக்கணிக்கக்கூடியவை அல்ல. வழிவழியாய் வரும் ஆறுமுகங்களின் நியாயம் என்ன என்பதை அறியாமல் அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. கூடவே இருந்த பொன்னம்பலம் என்பவரின் வரலாறும் இதுவரை நமக்குத் தெரியவில்லை. இவை தினகரனின் சாதி கடந்த மனசாட்சியை மதிப்பிட உதவலாம்.
முதுகுளத்தூர் கலவரத்தைப் பள்ளர்களுக்கு எதிரான தேவரின் செயற்பாடாகப் பார்ப்பதும் நாடார்களின் சூழ்ச்சியாகக் கணித்துப் பயனடைந்தது நாடார்கள் எனச் சொல்வதும் காமராஜ் அவர்களின் அதிகார அரசியலின் ஒரு நிலையாக விவரிப்பதும் முதுகுளத்தூர் கலவரம் பற்றிய பல்வேறு கருத்து நிலைகள் ஆகும். அரசியல், சமூக ஈடுபாடு மிக்க ஒரு வேளாண் பேராசிரியர் (என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது) சொன்னது போலப் பள்ளர்கள் இன்று தேவேந்திரர் என்றும் மள்ளர் என்றும் ஆதிக்க சாதியினர் என்றும் கருதிக்கொள்ளும் அளவிற்குப் போர்க் குணம் மிக்க சக்தியாக வளர்ந்திருப்பதற்கு இந்தக் கலவரம் உதவியது என்பதுதான் கண்கூடான உண்மை.

''சாதி வெறி மிக மோசமானது!''

ரமக்குடியில் கடந்த 11-ம் தேதி நடந்த தியாகி இம்மானுவேல் குருபூஜை அமைதியாக நடக்குமா என்று, பொதுமக்களும் அரசு தரப்பும் மிக உன்னிப்பாகக் கவனித்துவந்தனர். காரணம், கடந்த ஆண்டு நடந்த மோசமான கலவரமும் அதைத் தொடர்ந்து 6 தலித்துகள் போலிஸாரால் கொல்லப்பட்டதும்தான்.
 இந்த நிகழ்வை சரியாக ஒருங்கமைத்தது பரமக்குடியில் செயல்படும் தேவேந்திர பண்பாட்டுக் கழகம். எந்தவொரு தலித் அமைப்புகளும், அரசியல் கட்சிகளின் மேடையாக இம்மானுவேல் நினைவிடத்தை ஆக்காமல் இவர்கள் பார்த்துக்கொண்டனர். இவர்களே தலித் இளைஞர்களைத் தன்னார்வத் தொண்டர்களாக நியமித்து இருந்ததால், போலிஸுக்கு வேலை இல்லாமல் போனது. ஆனாலும், காவல்துறை மீதும் ஜெயலலிதா அரசு மீதும் கோபம் குறையவில்லை என்பதை வருகைதந்த தலித் மக்களின் உணர்வுகளின் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது.
வழக்கமான தமிழகத் தலைவர்களின் வருகைக்குள், வட இந்தியாவிலிருந்து வந்த ராம் விலாஸ் பஸ்வான்,  பஞ்சாப்பிலிருந்துவந்த பி.எஸ்.பி. கட்சித் தலைவர்கள் தேவேந்திர மக்களை ஆச்சரியப்பட வைத்தார்கள். இருந்தும், இவ்வளவு மாஸ் தலைவர்களின் வருகையையும்  பீஸ் பீஸாக்கியது ஒரு கல்லூரிப் பெண்ணின் வருகை. அவர் ஒரு அமெரிக்கப் பெண்!
தமிழகத்துப் பெண்போல சுரிதார் அணிந்துகொண்டு,  பின்னல் ஜடை போட்டு, பூ, பொட்டு வைத்துக்கொண்டு மலர் மாலையோடு அஞ்சலி செலுத்தவந்தார். '' அமெரிக்க பல்கலைக்கழக மாணவி விக்டோரியா, சாதி ஒழிப்பு போராளிக்கு வீர வணக்கம் செலுத்தவந்துள்ளார். அவருக்கு தேவேந்திர பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று, மைக்கில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு கேட்டவுடன் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்ற தேவேந்திர மக்கள் எல்லோரும் திரும்ப வந்து  விக்டோரியாவை சூழ்ந்துகொண்டு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். மக்களின் அன்பு மழையில் நனைய ஆரம்பித்துவிட்டார் விக்டோரியா. அஞ்சலி செலுத்திவிட்டு பந்தலில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கவனிக்க ஆரம்பித்தவரிடம் பேசினேன்.
'’அமெரிக்காவில் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?''
'’என் சொந்த ஊர் நியூயார்க். கொலம்பியா யுனிவர்சிட்டியில் படித்துக்கொண்டு இருக்கிறேன். சின்ன வயசில் இருந்தே இந்தியாவைப்பற்றி நிறையப் படித்திருக்கிறேன். அதிலும் தமிழகத்தைப்பற்றி அதிகம்தெரிந்து கொண்டேன். என்னுடைய ஆய்வு படிப்புக்காகத் தென்னிந்தியாவில் இருக்கும் சாதிப் பிரச்னைகள்பற்றி ஆய்வு செய்ய கடந்த வருடம் சென்னைவந்தேன்.''
''தமிழ்நாட்டில் நிலவிவரும் சாதிக் கட்டமைப்புபற்றி எந்த அளவுக்குத் தெரிந்துகொண்டீர்கள்?''
''சாதி ஏற்றத்தாழ்வுகள் தமிழ்நாட்டில் தொடர்கிறது. இன்னும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. அவர்களின் நிலை மிக மோசமானது. அதைத்தான் என்னுடைய ஆய்வில் சேகரித்துக்   கொண்டு இருக்கிறேன்''
''கடந்த வருஷம் நடந்த கலவரம்பற்றித் தெரியுமா?''
''அப்போது நான் சென்னையில் இருந்தேன். தகவல் கேள்விப்பட்டு வருத்தப்பட்டேன்''
''இம்மானுவேல் சேகரன்பற்றித் தெரியுமா?''
''தெரியும்.  தாழ்த்தபட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடியதற்காகக் கொல்லப்பட்டார். அதற்காகத்தான் மக்கள் அவரை தெய்வமாக வழிபடுகிறார்கள். இவ்வளவு மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டுவருவதைப் பார்க்கும்போது அவர் எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறார் என்பது தெரிகிறது. சாதி வெறி மிக மோசமானதுதான்!''

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

தேவேந்திரர் இல்லதிருமண விழா.

இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கு: டெல்லி நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி ஆஜர்..

புதுடெல்லி: இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தி்ல் இன்று ஆஜரானார்.

அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து கடந்த 2009ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி சார்பில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இலங்கை தூதரகம் தாக்கப்பட்டது. இது தொடர்பாக கிருஷ்ணசாமி உள்பட 11 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கிருஷ்ணசாமி உள்பட 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, வழக்கில் ஆஜராகாததால் கிருஷ்ணசாமிக்கு டெல்லி நீதிமன்றம் பிடிவராண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி இன்று ஆஜரானார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சனி, 23 ஆகஸ்ட், 2014

தேவேந்திர குல வேளாளர் வரலாற்று பெருமைகளை விலக்கும் பழனி செப்பேட்டின் நகல்.

மதுரை அருங்காட்சியகத்தில் தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளை நிறுவுனர் திரு .ம.தங்கராஜ் அவர்கள் முலம் ஒப்படைப்பு.
அரசு அருங்காட்சியகம் மதுரையில் படியெடுக்கப்பட்ட பழனி செப்பேட்டின் பிரதியை பாதுகாத்து வைக்கவில்லை என்ற செய்தி தமிழ். இந்து நாளிதழ் மூலம் தெரியவந்தது.பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியில் வசிக்கும் திரு.சுந்தர் என்பவரின் இல்லத்தில் பழனி செப்பேட்டின் நகல் பார்த்த நினைவிற்கு வந்தது இது பற்றி அவரிடம் தொலைபேசியில் பேசி செப்புப்பட்டய நகல் இருப்பதை உறுதி செய்த பிறகு திருத்துறைப்பூண்டி சென்று நகலை பெற்று அரசு அருங்காட்சியக காப்பாட்சியரிடம் 18.8.2014 அன்று தமிழ் இந்து நாளிதழ் திரு.மகேஷ் நிருபர் அவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.மேற்கண்ட நகலை அருங்காட்சியக நூலகத்தில் முறைப்படி காப்பாட்சியரால் பதிவு செய்யப்பட்டு நூலகத்தில் பொது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.செப்புப்பட்டய நகலை பார்க்க,படிக்க விரும்புவர்கள்.
நூலகம்
அரசு அருங்காட்சியகம்
காந்தி மியூசியம்
மதுரை -20
என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பார்வையிடலாம்.

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

தியாகி. இமானுவேல்சேகரன் 57வது வீரவணக்க நாள்.

தியாகி. இமானுவேல்சேகரன் 57வது வீரவணக்க நாள்...

தியாகி. இமானுவேல்சேகரன் 57வது வீரவணக்க நாள்...

தியாகி. இமானுவேல்சேகரன் 57வது வீரவணக்க நாள்...

தியாகி. இமானுவேல்சேகரன் 57வது வீரவணக்க நாள்...

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள்..உறுப்பினர் படிவம்..

இமானுவேல் நினவுநாள் சூழுறை..

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு வருகை புரிந்த ஆனைத்து உறவுகலுக்கும் நன்றி !

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் குழு கூட்டம்..

திருச்சி, : திருச்சியில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. கார்த்திக் மல்லர் தலைமை வகித்தார். சிவக்குமார், புதிய தமிழகம் வினித் முன்னிலை வகித்தனர். தமிழ்வேந்தன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் வே.க.அய்யர், மாநில துணை அமைப்பு செயலாளர்கள் பலராமன், துறைமுகம் கண்ணன், தொண்டரணி செயலாளர் லட்சுமண பாண்டியன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் குழு துவங்க அனுமதி அளித்த நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு நன்றி தெரிவிப்பது. தமிழகத்தில் மாற்று அரசியலை முன்வைத்து புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் தொடர் பிரசாரம் செய்வது. இணையதள குழு நண்பர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது. புதிய தமிழகம் கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள், சாதனைகள், டாக்டர் கிருஷ்ணசாமியின் சட்டமன்ற உரைகள், அறிக்கைகள், பேட்டிகளை மக்களிடம் எடுத்து செல்வது. கிராமங்கள் தோறும் மக்கள் பிரச்னைகளை கண்டறிந்து போராடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வினோத் மிஸ்ரா, கப்பிகுளம் பிராபகர், பாபு, ஜான் கிறிஸ்டோபர், நெல்லை ராமகிருஷ்ணன், பிரகாஷ், பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இசக்கிபாண்டி துவாரகா நன்றி கூறினார்.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை கண்டித்து புதிய தமிழகம் ஆா்ப்பாட்டம் ..

தமிழக சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சனைகளை பேச விடாமல் தடுத்தும் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களை அவமதிக்கும் தமிழக அரசையும் சபாநாயகர் தனபாலை கண்டித்து இன்று 18-08-14 கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் மாநில தொண்டரணி செயலாளர் பூவாணி லட்சுமணப்பாண்டியன் தலைமை வகித்தார்.ஒன்றி செயலாளர் அன்புராஜ்,கயத்தார் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு.

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு.

திருச்சி 17:-புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்டம் செவனா ஹோட்டலில் 17-08-14 அன்று நடந்தது.கார்த்திக் மள்ளர் தலைமை தாங்கினார்.திருச்சி வினித் முன்னிலை வகித்தார்.நெல்லை ராமகிருஷ்ணன் வரவேற்றார்.கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் வி.கே.அய்யர்,மாநில துணை அமைப்புச் செயலாளர் பலராமன்,மாநில தொண்டரணி செயலாளர் பூவாணி லெட்சுமணப்பாண்டியன்,திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன்,திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மற்றும் புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்படன

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு.

தமிழர்களின் விடுதலை அரசியலை விரைவுப்படுத்தும்!!!

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு.

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு.

புதிய தமிழகம் திருச்சி மாவட்ட செயலாளா் மீது வழக்கு...?

இலங்கையில் நடைபெற உள்ள இலங்கை ராணுவம் நடத்தக்கூடிய கருத்தரங்கில் இந்திய பிரதிநிதிகள் கலந்துகொள்ளகூடாது என்பது உட்பட தமிழ்நாட்டில் நிலவும் குடிநீா் பஞ்சம் வறட்சி மற்றும் சட்டம் ஒழுங்கு சீா்குலைவு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறை, இடஒதுக்கீடு பிரச்சணைகள் ஆகிய சமூக பிரச்சனைகள் குறித்து எதிா் கட்சி உறுப்பினா்களுக்கு குறிப்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் சட்டமன்ற உறுப்பினா் டாக்டா் ஐயா அவா்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேச அனுமதி தராமல் மேற்க்கண்ட சமூக பிரச்சணைகளை மூடி மறைக்க அதிமுக அரசுக்கு ஆதரவான போக்கை கடைபிடிக்ககூடிய சபாநாயகா் தனபாலன் அவா்களை கண்டித்து அவரது உருவபடத்தை எறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட புதிய தமிழகம் கட்சியினா் மாவட்ட செயலாளா் திரு அய்யப்பன் அவா்கள் தலைமையில் கைது செய்யப்பட்டனா். 

முதல்வரே 1996 தேர்தலை யோசித்துப்பாருங்க...?

2013 ஆம் ஆண்டு வீரன் சுந்தரலிங்கம் தேவேந்திரனாரின் பிறந்த நாள் விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எந்த செய்தி தாள்களிலும் விளம்பரம் செய்யாமல் தியாகியின் தியாகத்தை இருட்டடிப்பு செய்தது.
2014 ஆம் ஆண்டு தேர்தலை காரணம் காட்டி எவ்வித விளம்பரமோ அரசு விழாவோ எடுக்கப்படவில்லை.
2014 ஆம் ஆண்டு சென்னை கோட்டையில் கொடியேற்றி 68 வது சுதந்திரதின விழாவில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா மனித உரிமைப் போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலையின் குற்றவாளியை கூட தியாகி என வரிசைப்படுத்தி பேசுகிறார்.
ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை விரட்ட தன்னுடைய மாமன் மகள் வடிவு-உடன் சேர்ந்து மனித வெடிகுண்டகாமாறி பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் வெடிகுண்டு கிடங்கை தீயிட்டு கொழுத்தி அத்தீயுடன் தன் உயிரை தியாகம் செய்த வீரன் சுந்தரலிங்கம் பெயரை குறிப்பிடாதது ஏன்?
ஓட்டுக்காக முத்துராமலிங்கத் தேவருக்கு அரசு சார்பில் விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள்,13 கிலோ தங்க கவசம் அணிவித்தார்கள்.ஆனால் ஏப்ரல் 16 அன்று வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட மறுத்தார்கள்.
 ஆதிக்கவர்கத்தினர் சுதந்திரத்திற்காகப் போராடினால் தியாகிகள்.
ஆனால் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர் சுதந்திரத்திற்காகப் போராடினால் அவர்கள் கௌரவிக்கப்படாமல் அதற்கு மாறாக இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள். 

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்...

 ...இன்று( 14-08-2014) தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென் தலைமையகத்தில் கட்சியின்பொதுச் செயலாளர் தலைமையில் நடந்த மாவட்ட அளவில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நிகழ்வில் மாலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்ட பொருப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் ராஜேஷ்வரன் ..தலைமையில் கலந்துகொண்டணர்

புதன், 13 ஆகஸ்ட், 2014

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு நீதிபதி கட்ஜுவை விசாரிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி


‘சக நீதிபதி பற்றி கருத்து கூறிய, நீதிபதி கட்ஜுவிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்’’ என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் புதன் கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திடீரென எழுந்து பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர், ‘காலையில்தானே கடிதம் கொடுத்தீர்கள். பிறகு பேசலாம்’ என்றார். அதைத் தொடர்ந்து, வெளிநடப்பு செய்த கிருஷ்ண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரை பற்றி, இதே நீதிமன்றத்தில் பணியாற்றி பின்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த கட்ஜு, பதவி வகித்த 7 ஆண்டு பிறகு, அந்த நீதிபதியை பற்றி கூறியுள்ள கருத்து பற்றி அவையிலேயே எழுப்ப விரும்பினேன். அதற்கு அனுமதி மறுத்த காரணத்தால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தேன்.
பதவியில் இருந்தபோது எதுவும் கருத்து தெரிவிக்காமல், ஓய்வு பெற்ற பிறகு சக நீதிபதி ஒருவர் பற்றி இதுபோன்ற கருத்து களை தெரிவிக்க ஆரம்பித்தால், நீதி துறையின் மாண்பே கெட்டு விடும். நீதிபதி கூறியுள்ள கருத்து நிச்சயமாக அவராக கூறியதாக இருக்காது. இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு...


சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுந்து, தான் கொடுத்திருந்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் குறித்து கேட்டார்.
அதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ப.தனபால், ‘‘கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து சம்பந்தப்பட்ட துறையில் இருந்து பதில் வந்ததும், ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
ஆனால், கிருஷ்ணசாமி உட்காராமல் தொடர்ந்து ஏதோ பேசிக் கொண்டே இருந்தார். அப்போது மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசுமாறு தேமுதிக உறுப்பினர் தினகரனை பேரவைத் தலைவர் அழைத்தார். இதையடுத்து கிருஷ்ணசாமி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அவைக்கு வெளியே நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘இந்தக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து 50-க்கும் அதிகமான முக்கிய பிரச்சினைகள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்களை கொடுத்திருந்தேன்.
அதில் ஒன்றைக்கூட விவாதத் துக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இலங்கை ராணுவம் நடத்தும் கருத்தரங்கில் பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
திருநெல்வேலி கோபால சமுத்திரத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் நடந்து வருகிறது. இதுபற்றி எல்லாம் பேச வேண்டும் என்றால் அதற்கு அனுமதி கிடைப்பதில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.

மீனவர் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுப்பு..

சென்னை: பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, அஸ்லாம்பாஷா ஆகியோர் எழுந்து, தமிழக மீனவர்கள் பிரச்னை பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்து கொள்ள அனுமதி கேட்டனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதனால் அந்த கட்சி உறுப்பினர்கள் 2 பேரும் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்தார்.
பின்னர் பேரவைக்கு வெளியே ஜவாஹிருல்லா அளித்த பேட்டி  தமிழகத்தை சேர்ந்த 93 மீனவர்களும் அவர்களின் 63 விசை படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. இவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச அனுமதிக்கவில்லை.

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதுவது பற்றி தரக்குறைவாக விமர்சித்து கட்டுரை வந்துள்ளது. இந்த பிரச்னை பற்றி பேசுவதற்கும் சபாநாயகர் அனுமதி தராததால் வெளிநடப்பு செய்தோம். கிருஷ்ணசாமி (பு.த.): தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி அவையில் பேசுவதற்கு அனுமதி தர சபாநாயகர் மறுத்துவிட்டார் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பிரச்னைகள் 
பற்றி பேசுவதற்கு அனுமதி கொடுக்காததால் வெளிநடப்பு செய்தேன்.

சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு



சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி வெளிநடப்பு


இலங்கையில் நடைபெறும் கருத்தரங்கில் இந்தியா கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச முயன்றார். இலங்கையில் நடைபெறும் ராணுவ கருத்தரங்கில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர், தொடர்ந்து பேசுவதற்கு அவருக்கு அனுமதி மறுத்தார். இதனை கண்டித்து டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார். 

மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா, போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க இந்தியாவுக்கு வரக்கூடிய சர்வதேச விசாரணைக்குழுவுக்கு விசா மறுக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று, கண்டனம் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவற்றை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி வெளிநடப்பு செய்திருக்கிறது என்றார். 


பழனி செப்பேடு உணர்த்தும் தேவேந்திர மக்களின் வரலாறு ....


வரலாறு கூறுவது என்ன?


    மாறவர்மன் குலசேகரப் பாண்டியனுக்குப் (கி.பி.1272 - 1311 ) பின்னர் ஏற்ப்பட்ட பதவிப் போட்டியால் பாண்டியப் பேரரசு சிதைவுக்கு உட்பட்டது. அலாவுதீன் கில்சியின் போர்த்தளபதியான மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றினான். அதே காலத்தில் சேரப் பேரரசை ரவி வர்ம குலசேகர பாண்டியன் (கி.பி.1299 - 1311 ) சேர நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு பின் சேர பேரரசு சிதைந்து சிற்றரசுகளாக தோற்றம் பெற்றன.
    இந்நிலையில் தில்லி சுல்தானாகிய கியாசுதீன் துக்ளக்கின் மகனான (பின்னால் முகமது பின் துக்ளக்) உலூப்கான் பாண்டிய நாட்டை 1323 ஆம் ஆண்டு கைப்பற்றினான். இதுவே தமிழகத்தில் அமைந்த வட இந்தியர் ஆட்சியாகும். இவ்வந்தேறி ஆட்சி 1351 வர நீடித்தது.
    விசய நகர பேரரசை கிருட்டின தேவராயர் (கி.பி.1509 - 1529 ) ஆண்டு வந்தபோது பாண்டிய நாட்டை சந்திர சேகரப் பாண்டியன் ஆண்டு வந்தான். இச்சந்திர சேகரப் பாண்டியனை சோழ அரசன் படையெடுத்து விரட்டி விட்டான். விரட்டப் பட்ட சந்திர சேகர பாண்டியன் கிரிட்டின தேவராயரிடம் போய் முறையிட்டான். அவன் நாகம நாயக்கன் என்பவனை மதுரைக்கு ஏவி மதுரை அரசை மீட்டுப் பாண்டியனிடம் ஒப்படைக்கச் சொன்னான். மதுரையைக் கைப்பற்றிய நாகம நாயக்கன் பாண்டியனிடம் ஒப்படைக்காததால் சந்திர சேகர பாண்டியன் மீண்டும் கிருட்டின தேவராயனிடம் ஓடினான். கிருட்டின தேவராய நாகம நாயக்கனை அடக்க, அதே நாகம நாயக்கனின் மகனான விசுவநாத நாயக்கனை ஏவினான். இவ்விசுவநாத நாயக்கன் அவனுடைய அமைச்சனான தளவாய் அரியநாத முதலியார் என்னும் கயவனின் துணையுடன் 1529 ஆம் ஆண்டில் தமிழ் வளர்த்த 
மதுரையில் நாயக்கர்களின் வந்தேறி ஆட்சியை நிறுவினான்.
    அக்கால கட்டத்தில் சேரப் பேரரசின் சிற்றரசுகளில்  ஒன்று கரூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தது. இக்கால கட்டத்தில் மைசூர் நாட்டு கன்னடர்களின் படையெடுப்புகள் கிழக்கே சேலம் வரையில், தெற்க்கே பழனி வரையிலும் பரவியது. பழனி முருகன் கோயில் பறிக்கப் பட்டது. இக்கால கட்டமாகும். மதுரையில் நாயக்கர் ஆட்சி தோன்றிய காலம் கி.பி.1529 . கன்னடர்களின் படையெடுப்பு விரிந்த பகுதி தெற்கே பழனி முருகன் கோயில் தமிழர்களிடம் (பள்ளர்களிடம்) இருந்தது. இதனை கி.பி.1528 ஆம் ஆண்டைய பழனி முருகன் கோயில் செப்புப் பட்டயம் உறுதி செய்கிறது " என்கிறார். (நம் வேர்கள், அரிமா வளவன் ,பிப்ரவரி 2006 ,ப.12 -13 )

------------------------------------------------------------------------------------------------------------

    பழனி முருகன் கோயில் 'பள்ளர்' குல மக்களுக்கு சொந்தமானது என்பதையும் உணர்த்தும், பள்ளர்களின் பண்பாட்டையும், வரலாற்றையும் பறைசாற்றும் உரிமைப் பட்டையமான பழனிச் செப்பேடு ஒரு பள்ளர் குடும்பத்தாரிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. இது பழனி 'தேவேந்திர குல வேளாளர்' சங்கத் தலைவர்களான பால சமுத்திரம் சிலுவை முத்துத் தேவேந்திரர், பழனி அடிவாரம் ஆசிரியர் தண்டபாணித் தேவேந்திரர் அவர்களால் அருங்காட்சியகக் காப்பாட்சியர் எசு.சுலைமான், தமிழ்நாடு தொல்பொருள் துறை உதவி இயக்குனர் எசு.அரிகரன், எசு.போசு ஆகியோரிடம் கொடுக்கப் பட்டது. இப்பலனிச் செப்பேடு பற்றிய செய்திகள் 30 .04 .1995 அன்று மதுரைப் பதிப்பு தினமணி தமிழ் நாளிதழிலும், மதுரைப் பதிப்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிலும், 16 .06 .1995 அன்று கோயமுத்தூர் இந்து ஆங்கில நாளிதழிலும் வெளி வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.


    பழனி செப்புப் பட்டயத்தின் காலம் கி.பி.1528 ஆகும். இப்பட்டயத்தின் உயரம் 52 .5 செ.மீ., அகலம் 30 .5 செ.மீ, செப்புப் பட்டயத்தில் உள்ள செய்திகள் வருமாறு:

கடவுள் வாழ்த்து
வரி 1 - 3
        "உ ஆறுமுகன் துணை
         கூறுடை யாளும் வேத குணப்பெறும் குன்றும் ஞான
         பேறுடை பழனி யன்னல் பெயறது மறுவி யெங்கள்
         ஆறுமா முகவன் வயிகுள நகரமு மன்று தொட்டு
         வீரதலப் பழனியென்றே விளங்கிய துலகம் மூன்றும்"

முருகன் வாழ்த்து
வரி 3 - 8
                "உ வைக நீடுக மாமழு மன்னுக
        மெய்வி ரும்பிய அன்பர் விளங்குக
        சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
        தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே
        கருணைபொழி திருமுகங்க ளாரும் வாழி
        கரகமலப் பன்னிரண்டு கையும் வாழி
        இருசரண மென்றலைமேல் நாளு மோங்க
        இந்திரா பதவிக் கப்பா லென்றும் வாழி
        மறுபனியும் பைங்கடப்பன் தாருமாறும் வாழி
        மயில்பரி சேவலக்கொடியும்  வாழி
        மடந்தைதன் மயிந்த வாழி
        மாதவன் மருகா வாழி வாழி
        அடைந்தவர் துணைவா வாழி
        அடியவர்க் கெளியாய் வாழி
        திடம்புயன் வேலா வாழி
        தேவரா ருயிரே வாழி
        படந்தபோர் அசுரர் கூற்றன்
        பரமனே வாழி வாழி"

முருகன் மெய்க்கீர்த்தி
வரி 8 - 11
        "உ ஸ்ரீபுற தகன பரமேஷ்வரன் குமாரன்,அரு பரவி
        அமரர் சிறை மீட்ட தேவர்கள் தேவன்,தெய்வலோக நாயகன்
        அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன், கோகநகனை
        சரசமாடி குட்டி குடுமி நெஷ்ட்டை போக்கி கோல பரமபதம்
        கொடுத்த குமார கெம்பீரன்"

முருகன் வீரம்
வரி 11 - 13
        "கொக்கறு வரையாழி கொட்ட ராவுத்தன்
        வக்கிரமிகு அசுரேசர் வடநீரொப்பன்
        உக்கிர மயிலேறிவரும் உத்தண்ட தீரன்,
        பக்கரைப் பகட்டரக்கர் பட்டிட படைக் களத்தில்
        கொக்கறித்துடல் கிழித்த குக்குடக் கோடிக் குமாரன்"

முருகன் / மெய்க்கீர்த்திகள்
வரி 13 - 18
        "கூளி கொட்ட குகைப்பிசாசுகள்
        தொக்கநிற்ற தாளமொற சூரன் மாழுவதற்க்கு
        பாரிய நீலிய கச்சை கட்டி
        பாரவே லெடுத்த பராக்கிரம சேவுக தீரன்
        அசுரர் குலைகாரன், அமராபதி காவலன்,
        தோடு சிரி காதினான்,தோகைமயில் வாகனன்,
        சீதரன் திருமருகன், சிவா சுப்ரமணியன்,
        சண்டப்பிரசண்டன், அன்பர் கொரு மிண்டன்,
        உத்தண்ட தேவாதிகள் கண்டன்,
        ஆறாறு நூறாறு அஷ்ட்ட மங்கலம்
        ஆவினங்குடி பழனிக்கதிபன்,
        பகுத்தப் பிரியன், பகுத்தச் சீலன்,
        பார்வதி புத்திரன்,விக்கின விநாயகன்,
        தெய்வ சகோதரன்,எல்லாத் தேவர்க்கும்
        வல்லபனாகிய ஸ்ரீவீரப் பழனிமலை சுவாமியார்
        திருவுளப்படிக்கு வீரவாகு தேவர் அருளிப்படல்"

தமிழகத்தில் வடுகர் ஆதிக்கம்
வரி 19 - 26
    ஸ்ரீமாகமண்டல ஈஷ்பரனாகிய அரியதழ விபாடன் பாசைக்குத் தப்புவராய கண்டன மூவராய கண்டன் கண்ட நாடு கொண்டநாடு குடாத மண்டலீகர் கண்டன்,துலுக்கர் தளவிய பாடன், துலுக்கர் மோகந்தவிர்ந்தான் , ஒட்டியர் தளவியபாடன், ஒட்டிய மோகன்த தவிர்த்தான், செரமண்டல பிறதாபனாசாரியான், தொண்டமண்டல பிறதாபனாசாரியான் ஈழ யாழ்பாணம் எம்மண்டலமும் திரை கொண்டருளி துலாத கம்பம் போட்டு அசையா மணி கட்டி ஆளும் பிரதாப ருத்திரனான வங்களர் சிங்கிளர் சீனகர் சோனகர் ஆரிய ரொட்டியர் பற்பலர் மதங்கள் மச்சலர் குச்சலர் மாளுவர் மலையாளர் கொங்கர் கலிங்கர் கருனாடர் துலுக்கர் மறவர் மராத்திகரென்னப்பட்ட பதினென் பூமியும் ஏழு தீவும் சூழ்ந்த நாகலோக பெருந்தீவில் நரபதியாகிய பூலோக புரந்தர பூருவா பச்சிமா தெச்சனா ருத்திர சத்த சமுத்திராபதி

வடுக அரசர் மேலாண்மை
வரி 26 - 31
    ஸ்ரீவிசயநகரத்தில் வீர சிம்மாசனத்தில் பிரதாப ருத்திரான புறவுடதேவ மகாராயர்,புக்கராயர்,அறிசங்கு சமளுவ ராயர்,கயிலேஷ்பர ராயர் டில்லி ஈஸ்வர ராயர், ராமபான ராயர், நரசிங்க ராயர், வீரவசந்த ராயர், புருசோத்தம ராயர், மல்லிகாருச்சுண ராயர், மகாதேவா ராயர், சீரங்க தேவராயர், ஆனைகொத்தி வெங்கிட ராயர், ஸ்ரீராம் ராயர், பெறதிம்ம ராயர், சிக்கு ராயர், இவர்கள் பிருத்வி ராச்சியாபாரம் பண்ணி அருளாநின்று ஓதி உணர்ந்து உலகம் முழுவதும் ஒரு குடைக்குள்ளாண்டு இப்படி துஷ்ட்ட நிற்கிற சிஷ்ட்டை பரிபாலனம் செய்து

மதுரை நாயக்கர்கள் ஆட்சி
பட்டயத்தின் காலம் 

வரி 31 - 38
    இருநூற்றி இருவத்தினாலு காணவாய்க்கும், முப்பத்திரெண்டு மணியகாரருக்கும் எழுவத்திரெண்டு பாளையக்காரருக்கும் அதிபதியாகிய ராய ராணுவங்களுக்கு கர்த்தரான நாகப்பா நாயக்கர் குமர கிஷ்ணப்ப நாயக்கர் கஸ்தூரிரங்கப்ப நாயக்கர் ரங்ககிஷ்ணப்ப நாயக்கர் திருமலை நாயக்கர் இவர்கள் நான் மாடக் கூடலில் மதுரை மாநகரில் வீற்றிருந்தருளி திக்கு விசையம் செய்து செகத்தம்பம் நாட்டி அசையா மணி கட்டி ஆறிலொன்று கடமை கொண்டு அருள் பெருக அன்பு கூர்ந்து யாகம சாலையும் அந்தணர் வெளிவியும் தண்ணீர் பந்தலும் தர்ப்ப சாயூச்சமும் இப்படி தருமத்துக்குள்ளாய் நடந்து வருகிற சாலியவாகனம் சகார்த்தம் 1450 கலியுக சகார்த்தம் 4629 செல்லா நின்ற துன்முகி வருஷம் தையி மாசம் 19 தேதி சுக்குர வாரமும்,சதுர்த்தியும் உத்திர நட்செத்திரமும் பெற்ற சுபதினத்தில் கொங்கு வய்காபுரி நாட்டில் சண்முகநதி தீர்த்த வாசமாய் பழனிமலை மேல்

தெய்வேந்திர வம்சத்தார்
பட்டயம் சாட்சிகள்

வரி 38 - 44
    ஆறு காலமும் அனந்த வடிவுமாய் மகாபூசை கொண்டருளிய சர்வ பரிபூரணச் சச்சிதானந்த பறபிரம மூர்த்தியாகிய பாலசுப்பிரமணிய சுவாமியார் சன்னதி முன்பதாய் இஷ்தானியம் சின்னோப நாயக்கர் சரவணை வேல் தபராசபண்டிதர் பழனியப்ப நம்பியார் அறவளர்த்த நம்பியார் பாணிபாத்திர உடையார் பழனிக்கவுண்டன் தலத்து கணக்கு விருமையான பிள்ளை குமாரவேலாசாரியார் மர்ருமுண்டாகிய தானம் பரிகலத்தார் முன்பதாயி தெய்வேந்திர வம்மிஷத்தார்கள் அனைவோருக்கும் கூடி தெய்வேந்திர மடம் ஆலயம் பழனி மலை உடையாருக்கு சத்திய சாட்சியாய் எழுதி கொடுத்த தரும சாதினமாகிய தாம்பூர சாதீன பட்டையம்

தெய்வேந்திரர்  பிறப்பு - வரலாறு

வரி 44 - 50
    தெய்வேந்திர பல்லன் பிறப்பு, அந்திர் பத்திய பாதாள திருலோகத்தில் பிரவாகிய அண்டம் அடுக்கு தட்டு தாபறம் சங்கம துருவம் சந்திறாள் சூரியாள் அஷ்ட்குல பருவதம் சத்தசாகரம் மகாமேரு பருவதம் சத்த கன்னியர் தேவர்கள் முனிவர்கள் முதலாகிய எறும்பு கடை யானை முதல் எண்பத்து நான்கு நூறாயிரம் சீவ செந்துக்கும் பரமசிவனும் பார்வதாதேவியும் படியளந்து வருகிற போது பூலோகத்திலுள்ள சீவ செந்துக்களுக்கும் பரமேஷ்வரி செந்நெல் பூசனம் குடுக்க திருவுளத்தில் நினைந்து பரமேஷ்வரிடத்தில் சொல்ல பரமேஷ்வர் தேவர்களை அழைத்து ஆலோசிக்க விசுவகருமாவானவர் சொல்லுவார் சுவாமி தேவரீர் அனுகிரகத்தினாலே ஒரு குழந்த உற்பத்தி செய்தால் அவனாலே பூலோகத்தில் சகலமான செந்நெல்லும் உற்பத்தியாகும் என்று சொன்னார்.

வள்ளிக் கோடியில் குழந்தை
வள்ளல் மகன்

வரி 50 - 55
    ஈஷ்வரன் மனிக்கான தியானத்தினாலே முகாரவிந்தத்தில் வேர்வை தோன்றி அந்த வேர்வையை வழித்து வில் எரிய செலத்துடன் கலந்து மாடக்குளத்தில் வள்ளிக் கொடியில் தங்கி கெர்ப்ப உற்பத்தியாகி குழந்தையாக அழுதது. அழுகிற சத்தமுமிவள் கேட்டு சவாமி இந்த அத்துவான ஆருன்னிய குளக்கரை பள்ளசாருவில் குழந்தைக் குரலேதென்று கேட்க சுவாமி சொல்லுவார் வாரும் பெண்ணே பூலோகத்தில் சகலமான செந்நெல்லும் கந்தமூல பாலதிகளும் உண்டாக்கும்படியாக நீ ஒன்னபடிக்கு ஒரு குழந்த உற்பத்தி செய்தோமென்று சொல்ல

ஈசுவரி குழந்தை வள்ளல்
மகனுக்கு முப்பால் கொடுத்தது

வரி 55 - 59
    ஈஷ்வரி மனமகிழ்ச்சி கூர்ந்து குழந்தையை எடுத்து முப்பால் கொடுத்து தகையாற்றி தெய்வேந்திரனை அழைத்து தெய்வேந்திரன் கையில் ஒரு காராம் பசுவும் கொடுத்து வள்ளல் மகனைப் பார்த்து வாராய் மகனே உன்னை எங்களை பணிவிடைக்கு பிள்ளையாக உண்டு செய்தோம். நீ தெய்வலோகத்துக்கு போய் இந்த காராம் பசுவின் பாலைச் சாப்பிட்டுக் கொண்டு சகலமான செந்நெலு உண்டு செய்வாயென்று கட்டளை இட்டார்.

தெய்வேந்திரனுக்கும்,இந்திராணிக்கும்
பிள்ளையாய் வளர்ந்து வருதல்

வரி 59 - 61
    கட்டளைப் படியே தெய்வலோகத்துக்குப் போய் காராவின் மூன்று முலைப்பால் கறந்து ஈஷ்வரிக்கும் தெய்வேந்திரனுக்கும் கொடுத்து தானுமொரு முலைப்பால் சாப்பிட்டு கொண்டு தெய்வேந்திரனுக்கும் இந்திராணிக்கும் பிள்ளையாக வளர்ந்து வருகிற நாளில்

வள்ளல் மகன் பயிர் செய்தல்

வரி 61 - 65
    தெய்வேந்திரனுடைய சலக்க பிறவிடையில் நீரோடையும் பல்ல சாற்வும் கண்டு அதில் சிறிது வயல் வரம்புகள் உண்டு செய்து குச்சி கொளுகளை ஊன்றியும், சில சேறுண்டு செய்தும், தண்ணீர் விட்டுக் காப்பாற்றி வருகிற நாளில் குச்சி கோள்களெல்லாம் தளைத்து மாவிடை மரவிடை தென்னை கமுகு பலா எலுமிச்சை மஞ்சளிஞ்சி இப்படி அனந்த மற்ச வர்க்கமாச்சுது.

வாளால் மகனின் முதல் செந்நெல்

வரி 65 - 70
    இந்த சேத்திலென்ன விரையை போடுவோமேன்று ஈஷ்வரனை நோக்கி முறையிட்டான். ஈஷ்வரன் கருணை அன்பினால் அன்னைங்கள் புறாக்கள் முதலான பச்சிகளெல்லாம் இரையெடுத்து வள்ளல் மகன் தோப்பி விளையாடுகிறபோது அன்ன பச்சியின் மூக்கில் நஞ்சு விரையானது ஒட்டியிருந்து வதியில் வீழ்ந்து வெள்ளி குருத்து போல முளைத்தது. முறைத்த நஞ்சு விரையின் பயிர்களைக் கண்டு தண்ணீர் விட்டு காப்பாத்தி வருகிற நாளையில் அமுர்தங்கொண்டு வேரிலே நஞ்சை போட்டு முடியிலே சென்னேல்லாக விளைந்தது.

வள்ளல் மகன் முதல் செந்நெல்
அரிசியை ஈசுவரனுக்குப் படைத்தல்

வரி 70 - 74
    விளைந்த செந்நெல்லை அறுத்து சிறிது அரிசி உண்டு செய்து ஈஷ்வரனுக்கு கொண்டு டோறி பால் கலசத்தில் சிறுது செந்நெல்லரிசியும் போட்டு கந்தமூல பாலாதிகளுடன் பால்க் கலசத்தை வையித்து நமஷ்க்கரித்தான். ஈஷ்வரன் கண்டு வாரும் வள்ளல் மகனே என்றைக்கும் சுத்த சூச்சமாய் வருகிறவன் இன்றைக்கி சேரும் சகதியுமாய் வந்தாயென்று கேள்க்க மவுனமாய் தலை கவிழ்ந்து நின்றான்.ஈஷ்வரன் பால் கலசத்தை பார்க்கும் போது அன்ன மலராய் நிறைந்து இருந்தது.

முப்பது முக்கோடி தேவர்களுக்கும்
செந்நெல் சோறு படைத்தல்

வரி 74 - 77
    நிறைந்த அன்ன மலரை முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் கந்தமூல பாலாதிகளுடன் செந்நெல் போசனம் செய்வித்து வள்ளல் மகனை அழைப்பித்து வாராய் வள்ளல் மகனே மேடு பல்ல மண்ணறாய் நிரவி செந்நெல்லுண்டு செய்வாய் என்று ஈஷ்வரன் சொல்ல வள்ளல் மகன் சொல்வது சுவாமி மேடு பள்ளம் மொன்றாய் நிறைவினால் லோகம் கட்டு கொள்ளாதென்றான்.

சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களை
அழைத்து செந்நெல் சோறு படைத்தல்

வரி 77 - 81
    அதனாலவைன பூலோகத்துக்கு அனுப்ப வேணுமென்று பூலோகத்து ராசாக்களாகிய சேரன்,சோழன் பாண்டியன் மூவராசாக்களையும் வரவழைத்து அவர்களுக்கு கந்தமூல பாலாதிகளுடன் செந்நெல் போசனம் செய்வித்து பாக்கிலை கொடுத்து ஈஷ்வரன் முன்பதாக அழைத்து வந்தார்கள். மூவராசாக்களும் தேவலோகத்தில் கந்தமூல பாலாதிகளுடன் செந்நெல் போசனம் மருந்தினபடியினாலே அனந்தம் தோத்திரங்கள் செய்து சொல்வார்கள்.

வள்ளல் மகனை மூவேந்தர்கள்
பூலோகத்துக்கு அழைத்து வருதல்

வரி 81 - 86
    சுவாமி எங்கள் தேச பூலோகத்திலுள்ள சீவசெந்துக்களுக்கும்,தேவர்களுக்கும் கம்பு,சோளம்,கேவற முன்னை முஷ்ட்டை தவிர, வேறே ரசவர்க்கம் இல்லாதபடியினாலே கந்தமூல பாலாதிகளுடன் செந்நெல்லுண்டு செயும்படியாக வள்ளல் மகனை பூலகத்துக்கு அனுப்பிதருள வேணுமென்று அனந்தம் தோத்திரங்கள் செய்தார்கள். அப்போது ஈஷ்வரன் கருணை மகிழ்ந்து விருமா விஷ்ட்டுன்னு தெய்வேந்திரன் விசுவகர்ம அனுப்ப வேணுமென்று சலமான விருதுகளுடனே சென்னெல் விரையும் கந்தமூல பாலதிகளும் மலைதகத்தான் என்கிற மண்வெட்டியும் குடுத்து பூலோகத்துக்கு அனுப்புகிற போது

வள்ளல் மகன் தெய்வலோகத்திலிருந்து
செந்நெல கொண்டு வருதல்

வரி 86 - 89
    செந்நெல எல்லாம் பூலோகத்துக்கு போறதில்லை என்று சிறகு முளைத்துப் பரவையாச்சுது. பரந்த செந்நெல்லைப் பிடித்து பொன் ஊசி கொண்டு மூக்குப்பூரி பொதி பிடித்து தெய்வேந்திரனுடைய வெள்ளை யானையின் பேறில் போட்டு மூவராசாக்களுடன் கூட்டி பூலோகத்துக்கு அனுப்பினார்.

தெய்வ கண்ணாளர் ஏர்
செய்து கொடுத்தல்

வரி 89 - 94
    பூலகத்தில் நாலு திக்கும் நீரோடையும் பள்ளச்சாற்வும் கண்டு அதில் சிறிது வயல் வரம்புகளுண்டு இதை சேறு செய்ய உழவு முஷ்த்தேதி வேணுமென்று தெய்வ கன்னாளனாகிய மனு ஆசாரி மகாசாரி இருபேர்களிடத்திலும் சொல்ல அவர்கள் இருபேரும் அனந்தம் ஏர்ச் சோடினை செய்து குடுத்தார்கள். வள்ளல் மகன் அதிக உபசாரத்துடன் வாங்கி தோளில் வைத்து கானகத்தில் நுழைந்து கரடி புலி யாழி சிம்ம இவையெல்லாம் ஓட்டி வந்து ஏரில் கட்டி உழுகிற போது மிருகங்களெல்லாம் அவஷ்த்தைப் பட்டு ஈஷ்வரனை நோக்கி முறையிட்டதுகள்

உழுவதற்கு தெய்வலோகத்திளிருந்து
மாடு,எருதுகள் கொண்டு வருதல்

வரி 94 - 100
    பரமேஷ்வரன் நந்தி தேவரை அழைத்து வள்ளல் மகன் பூலோகத்தில் செந்நெல்லுமுண்டு செய்யும்படியா சில நந்தி வாகனம் உண்டு செய்து குடுக்க வேணுமென்று சொல்ல நந்தியேஷ்வரன் மகனக்கான தியானத்தினாலே வெள்ளைப்பசு வில்லைப்பசு காராம்பசு கவுலைப்பசு பில்லைப் பசு சிவலைப் பசு இப்படி அனந்தம் பசுக்களை உண்டு செய்தார். அப்போது தேவர்கள் மகிழ்ந்து அந்த பசுக்களிடமா பிறந்த மயிலனன் சன்னவான் முகிலனன் இந்த இரண்டெருத்துக்கு மின்சல்லி , பின்சல்லி வீரவெண்டயம் களப கஷ்த்தூரிகளணிந்து வாரீர் நந்தி தேவர்களே நீநல் பூலோகத்துக்குப் போய் வள்ளல் மகனிடமாயிருந்து செந்நெல்லுண்டு செய்து சங்கிராந்தி முதலான நோன்புகளும் கொண்டாடி வருவீர்களென்று பூலோகத்துக்கு அனுப்ப

வள்ளல் மகனின்
மாட்டுப் பொங்கல்

வரி 100 - 102
    பசுக்களெல்லாம் பூலோகத்துக்கு வந்ததை வள்ளல் மகன் கண்டு சந்தோஷத்துடன் ஓட்டி வந்து மட்டானதம் பிறான மல்லாண்டய்யனார் வைத்து பச்சை பாளை போட்டு தூபம் குடுத்து இரண்டு எருதையும் ஏரில் கட்டி உழுது சேறு செய்து நாத்துப் பாவி உழவுத் தொண்டி கணகழவு செய்து வருகிற நாளையில் நாத்துகள் முளைத்து நடவு பக்குவமாய்ச்சிது.

இரம்பைகள் நடவு
செய்ய வருதல்

வரி 102 - 107
    இந்த நாத்துகளை பிடுங்கி நடவு போட பெண்கள் வேணுமென்று மூவராசாக்களிடத்தில் சொன்னான். மூவராசக்களும் தெய்வலோகத்து செந்நெல்லானபடியினாலே இவ்விடத்தில் பருவம் தெரியாதென்று ஈஷ்வரனிடத்தில் சொன்னார். ஈஷ்வரன் உபைய ரம்பைகளை அனுப்பினார். ரம்பைகள் மூவராசாக்களிடமே வந்து எங்களை அழைத்ததென்னவென்று கேட்க வாரும் தெய்வ ரம்பைகளே வள்ளல் மகன் தெய்வலோகத்திலிருந்து செந்நெல் விரை கொண்டு வந்து நாத்துப்பாவி இருக்கிறபடியால் அதை பிடுங்கி நடவு போட்டால் உங்களுக்கு முத்து போடுகிறோமென்றார்.

இரம்பைகளுக்கு நடவு கூலியாக
முத்துக்கள் கொடுத்தல்

வரி 107 - 111
    நல்லதென்று வயலில் சென்று நாத்து பிடுங்கி முடி முடிந்து குப்பம் சேர்த்து வயலில் நாத்து பங்கும் போது வள்ளல் மகன் பேருக்கு இரண்டு மூடி போட்டான். சுந்தர ரம்பை தெய்வ ரம்பைக்கு பின்னையும் ஒவ்வொரு முடி நாத்து அதிகமாய் போட்டான். பெண்களெல்லாம் நடவு முடிந்து கால் கை சரீரம் சுத்தி செய்து கொண்டு மூவராசாக்களிடமே வந்து வாங்கிக் கொண்டு தெய்வலோகம் போய் விட்டார்கள்.

சுந்தரரம்பை தெய்வரம்பை
பூலோகத்தில் தங்குதல்

வரி 111 - 113
    சுந்தர ரம்பை தெய்வ ரம்பைக்கு பின்னையும் ஒவ்வொரு முடி நாத்து அதிகமானபடியினாலே பின் தங்கி வந்தார்கள். மூவராசாக்களும் கண்டு ஏதோ வள்ளல் மகன் பேரில் இச்சை கொண்டு நின்றார்களென்று ஆலோசித்து ஈஷ்வரனிடத்தில் அறுக்கை இட்டார்கள்.
தெய்வேந்திரனின் வெள்ளை யானையின்

பேறில் பட்டணம் மெறவனை வருதல்

வரி 113 - 117
    ஈஷ்வரன் இந்த ரெண்டு பெண்களையும் வள்ளல் மகனுக்கு கல்யாணம் செய்யும்படியா உத்தரவையும் கொடுத்தார். உத்தரவுப்படியே பந்தல் போட்டு மேல் கட்டு கட்டி தென்னை,கமுகு,கதழி நிறுத்தி புஷ்ப்பம் கொண்டலங்கரித்து மணவறை சோடித்து ஆணை அரசாணை வைத்து வள்ளல் மகனுக்கு வஷ்த்திர பூஷண களப கஷ்த்தூரிகளணிந்து தெய்வேந்திரன் வெள்ளை யானையின் பேறில் படனம் மெறவனை செய்து உபைய ரம்பைகளிருவருக்கும் மாணவரைக் கோலம் செய்யச் சொன்னார்கள். அப்போது வள்ளல் மகன் சொன்னது.

வள்ளல் மகன் ரம்பைகளை
மணம் செய்ய வரையறை

வரி 117 - 122
    வருமாய்யா மூவராசாக்களே இந்த பெண்கள் தெய்வலோகத்து உபைய ரம்பைகளானபடியினாலே சந்தேகம் தெளியும்படிக்கு ஓமக் குண்ட அக்கினியை அள்ளி மணவறையை மூன்று தரம் வலமாக வந்து பொங்கலடுப்பில் போட்டு செந்நெல் விரையை கையினால் தேய்த்து பச்ச கலசத்தில் பொங்கல் வைத்து மணவறை அரசாணிக்கு நெவேத்தியம் செய்தல் கோரையுடுத்தி மணவறையில் வைத்து மங்கிலியம் தரிப்பேன். இல்லாதிருந்தால் மனவரையடியில் கம்பி புடவையுடுத்தி கைப்பிடிப்பதேயல்லாமல் மணவறை ஏத்தக் கூடாது என்றான். மூவராசக்களும் மெத்தக் கிலேசம் கொண்டு இருந்தார்கள்.

இரம்பைகள் வரையறையை
ஏற்று மணம் முடித்தல்

வரி 123 - 126
    அப்போது ரம்பைகள் பார்த்து வாருமைய்யா மூவராசக்களே நீங்களொன்றுக்கும் யோசனை செய்ய வேண்டாம். அந்தப்படியே செய்து கொடுக்கிறோமென்று ஓமக் குண்ட அக்கினியை அள்ளி மணவறையை மூன்று தரம் வலமாக வந்து பொங்கலடுப்பில் போட்டு செந்நெல் விரையை கையினாலே தேய்த்து பச்ச கலசத்தில் பொங்கல் வைத்து மணவறை அரசாணிக்கு நெவேத்தியம் செய்தார்கள்.

சோழ,பாண்டிய ராசாக்கள்
ரம்பைகளை தத்தெடுத்தல்

வரி 126 - 128
    மூவராசாக்களும் அதிக சந்தோஷம் கொண்டு மூத்த பெண்ணாகிய சுந்தர ரம்பையை சோழ ராசா என் சோழிய பிள்ளை என்றெடுத்துக் கொண்டார். இளைய பெண்ணாகிய தெய்வ ரம்பையை பாண்டிய ராசா என்  பாண்டியப் பிள்ளை என்றெடுத்துக் கொண்டார்.

வள்ளல் மகனுக்கு தெய்வேந்திரன்
என்று பெயர் கொடுத்தல்

வரி 128 - 129
    வள்ளல் மகனுக்கு தெய்வேந்திரனென்று பெரும் குடுத்து 

தெய்வேந்திரன் திருமணம்

வரி 129 - 133
    பொன்முடி பூமுடி தரித்து ரம்பைகளிரு பேருக்கு மணவறைக் கோலம் செய்து கங்கணம் தரித்து பதினாறு சீரும் பாங்குடன் வைத்து தெய்வச் சபையை தரிசனம் செய்து திருமங்கிலியம் தரித்து பதினெட்டாயுதம் பாங்குடனெடுத்து புரவியிலேறி பூலோகம் தன்னில் மூவராசக்களுடன் பட்டணம் வலமாக வந்து வந்த பேர்க்கெல்லாம் பாக்கிலை கொடுத்துக் கொண்டு இருக்கிற நாளையில்

செந்நெல் வகை

வரி 133 - 138
    வள்ளல் மகனிட்ட வேளாண்மையெல்லாம் அமுர்தம் கொண்டு சிறுமணி பெருமணியாய் விளைந்தது. செந்நெல் விவரம், முத்த நாராயணன், மூழரி , கரும்பொன், வின்னவராயன், சேர்ந்தமுத்தான், ஈசம்பதியான், இளந்தலை கிழவன், இன்பமாதாரி, விந்து மாதாரி, ஆள்கொண்டராயன், அருந்துவ குபேரன், அறவாபரணன், வாறிகல்லுண்டை , பாகம்பிரியான், தாகம்தீத்தான், இருப்புலக்கை தவிர்த்தான், ஈசர்கினியான், மச்சுமுறிச்சான், மகிழம்பூ, வாசகன்,குழியிடித்தான், கோதும்பை, புன்னை குறக்கொடி,வாலன்,பாக்கு நிறத்தான், பசுங்குலை வாழை.

உமியில்லா வாசகன்

வரி 138 - 141
    ஊனுக்கினியான், உமியில்லா வாசகன், வில்லக்காய் மேனியன்,மழிமுடக்கி,வள்ளவாய் காத்தான், மூங்கில் நிறத்தான், மயல்க்கன்னி, கயல்கன்னி, மொட்டு சென்னி,புளியிட்ட சாதனன்,புன்னை நிறத்தான்,வட்ட கன்னி,மாதுள கன்னி,குங்கும கன்னி,கோமள கன்னி,மல்லிகை,சுந்தரி.

சம்பா வகை
வெள்ளானை வேந்தன்

வரி 141 - 148
    பரிமள சம்பா, செண்பகமாலை, உள்பக சம்பா, நாட்டுக்கினிய சூரிய சம்பா, வெள்ளானை வேந்தன், வழதடி சம்பா, எலிவால் சம்பா, இலுப்பை பூ  வாசகன், மாபூ வாசகன், ராசா வெள்ளை, காக்கை சம்பா, கதுவாரி வண்ணன், சீராக சம்பா, இக்கி சம்பா, புனுகு சம்பா, பேரில்லா வெள்ளை, மணவாரி புண்ணை, கதம்பை நிறத்தான், ஆள்ளோட்டி மசபுளுநி நீர்ச்சாரை, நெடுஞ்சாரை, காடை கழுத்தன், கற்ப்பூர வாசகன், செம்மஞ்சள்வாறி, பறக்கும் சிறுக்குருவி, செம்மோடன், கருமோடன், ராவணன், சேர வளநாடன், வைகை வளநாடன், சோதி குறும்பை, துய்ய மல்லிகை, கிழிமூக்கு வளைத்தான், திரிகத்தை மணிகத்தை, செவ்வெள நீர் வாசகன், வாழைப்பூ வாசகன், தாளை விழுந்தான், கொடக்கினியாசி
மிளகு சம்பா வகை அமராபதியான்

பன்னிராயிரம் சாதி நெல்

வரி 148 - 151
    சிருமிளகி, பெருமிளகி, கருமிளகி,செம்மிளகி,வெள்ளைமிளகி,பில்லைமிளகி, சந்தனமிளகி, சடைமிளகி, மட்டிமி குறுவை, மணிகுறுவை, செங்குறுவை, கருங்குறுவை, பண்முகரி, கயிலைப் பதியான், வைகுண்டபதியான், அமராபதியான்,அற்புதபறணன், அழகியவாளுடனே பன்னிராயிரம் சாதி நெல் விளைந்தது.

நெல்லறுத்தல்

வரி 151 - 155
    செந்நெல்லை மூவராசாக்களும் கண்டு அதிக மகிழ்ச்சி கொண்டு வள்ளல் மகனை அழைத்து செந்நெல்லை என் விபரமாய் அடித்தடியாக்கும்படியா உத்தரவு கொடுத்தார்.அந்தப்படியே பட்டணத்து சனங்களை அழைத்து வந்து செந்நெல்லை என் விபரமாய் அறுத்தடித்து அளவு கண்டு பொதி பிடித்து வெள்ளை யானையின் பேறில் போட்டு மூவராசாக்களிடமே வந்து இருந்த தேவதாயம் முதலான பல உபசாரங்களும் செய்து கொண்டு வருகிற நாளையில்

இரம்பைகளின் சூழ்ச்சி

வரி 155 - 159
    உபைய ரம்பைகளிருவரும் சில குழந்தைகளை பெத்து அதிக சந்தோஷம் கொண்டு வள்ளல் மகனை தெய்வலோகத்துக்கு அழைத்து போக வேணுமென்று சூதுகளை நினைத்து மது மாங்கிஷங்களை தரிவித்து வீட்டில் தாபிதம் செய்து மூவராசாக்களிடம் வந்து வாருமய்யா மூவராசாக்களே வள்ளல் மகன் மது மாங்கிஷங்களை பெரிக்க நினைத்து வீட்டில் கொண்டு வந்து தாபிதம் செய்திருக்கிறபடியால் இனி நாங்கள் இங்கே இருக்க கூடாது தெய்வலோகம் போக வேணுமென்று சொன்னார்கள்.

தெய்வேந்திரன் சினம் 

வரி 159 - 164
    மூவராசாக்களும் வள்ளல் மகனை அழைத்து கொண்டு வீட்டிலே வந்து சோதினை பார்க்கும் போது வெள்ளரளி, குங்கும அரளி, செவ்வரளி , செவ்வந்தி, செண்பகம், மல்லிகை, முல்லை இப்படி பல விதமான புஷ்ப்பங்களாச்சுது.வள்ளல் மகனுக்கு அதிக கோபம் வந்து தெய்வலோகம் போக நினைந்து மலைதகத்தான் என்ற மண்வெட்டியை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு தெய்வலோகத்தை நாடி போகிற போது உபைய ரம்பைகள் இருபெர்களும் குழந்தைகளை கூட்டிக் கொண்டு கூடத் தொடர்ந்தனர்.அவர்களைப் பார்த்து

தெய்வேந்திரன் ஆதிசிவனிடம்
சென்று சேர்தல்

வரி 164 - 169
    வாரும் உபைய ரம்பைகளே உங்களை நான் நூறு பொன் ஐம்பது பொன் போட்டுக் கொள்ள வில்லை. நீங்கள் இடையிலே வந்தவர்கள். இடையிலேயே போங்களென்று முந்தானியை கிழித்துயெடைக்கி குடுத்து துரும்பை கிள்ளி கையிலே குடுத்து நீங்கள் கொண்டு வந்த விருதுகளெல்லாம் பிள்ளைகள் வசத்தில் ஒப்பிவைத்து தான் தெய்வலோகத்தை நாடி வாரபோது மலைகளான பறந்து எதிறிட்டு எதிறிட்ட மலைகளை மண்வெட்டியினாலே இரு பிளவு செய்து கொண்டு ஆதிசிவனிடமே சேர்ந்தான்.

மூவராசக்கள் தெய்வேந்திரன்
பிள்ளைகளுக்கு காணி செய்து கொடுத்தல்

வரி 169 - 174
    வள்ளல் மகன் பரமசிவனிடம் போய் சேர்ந்தானென்று மூவராசாக்களும் மெத்தமும் கிலேசமுற்று உபைய ரம்பைகளையும், குழந்தைகளையும் கூட்டி வரச் சொல்லி வாரும் உபைய ரம்பைகளே நீங்கலொன்றுக்கும் கிலேசப்பட வேண்டியதில்லை. ஆதியில் உங்களை எங்கள் பிள்ளையாக எடுத்துக் கொண்டபடிக்கு உங்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கெல்லாம் எங்களுடைய தேசத்தில் காணி பூமி கோவில் குளம் கல்வெட்டி காணி கொடுக்கிறோம் என்று கல்வெட்டி காணி செய்து கொடுத்தார்கள்.

தெய்வேந்திர மரபின்
காணியாளர் பட்டியல்

வரி 174 - 180
    பள்ளு விபரம் முதல் தெய்வேந்திர பள்ளன்,சோழியப் பள்ளன், பாண்டியப் பள்ளன், கொங்குப் பள்ளன், குமுணப் பள்ளன், மரங்கொத்தி பள்ளன்,மங்கனாட்டுப் பள்ளற்,மாநாட்டுப் பள்ளற், ஈசர் பள்ளற்,அன்னியப் பள்ளற்,குமணப் பள்ளற்,மோகினிப் பள்ளற்,மேனாட்டு பள்ளற்,வேங்கல நாட்டு பள்ளற்,கடைய பள்ளற்,கவுண பள்ளற்,பட்டணக்கரை பள்ளற்,வேப்பங்குளத்து பள்ளற்,பூலாங்குலத்து பள்ளற்,சின்னிய பள்ளற்,தொட்டிய பள்ளற்,ஆத்தாய பள்ளற்,ஆய பள்ளற்,ஆமண பள்ளற்,சாமண பள்ளற்,சானாட்டு பள்ளற்,குங்கும பள்ளற், வங்கள பள்ளற்,

அரச பள்ளற், வடமப் பள்ளற்

வரி 180 - 187
    இருள பள்ளற்,இளம்பிறை பள்ளற்,முக்குவிசைப் பள்ளற், கப்பரை பள்ளற், துலுக்கப் பள்ளற், மேல்மடைக்கட்டி பள்ளற்,வஞ்சுளி பள்ளற், வடமப் பள்ளற், பூரண பள்ளற்,பூசார பள்ளற், அக்கறை கண்ட பள்ளற், அரச பள்ளற், ஆனைக்குட்டி பள்ளற், யாப்பு பள்ளற், பாப்பு பள்ளற், முகுத பள்ளற், பாங்கி பள்ளற், கூனங்குடி பள்ளற் வானங்கட்டி பள்ளற், கிழிஞ்சி பள்ளற், தவளை பள்ளற், தாதுவ பள்ளற், வெண்டி பள்ளற், வீரிய பள்ளற்,பச்சை பள்ளற், பாணாங்குடி பள்ளற்,திருநாம பள்ளற், ஆயப் பள்ளற், சாயப் பள்ளற், கவிதமான பள்ளற், விதலைசயா பள்ளற் , பாவை கட்டி பள்ளற், வாணங்கட்டி பள்ளற், அளவு கையிட்ட பள்ளற் வடுக பள்ளற், வடுபடுத்தி கொள்ளும் பள்ளற்

காட்டானை வென்ற பள்ளர்

வரி 187 - 191
    துட்டுஷ பள்ளற், துறையேறி பள்ளற், தொண்டமண்டல பள்ளற், அளவு கையிட்ட பள்ளற், இப்புரை பள்ளற், பழிவிக்கும் பள்ளற், பழிதளுவிக் கொள்ளும் பள்ளற், நாகனாட்டு பள்ளற், நாகமழித்த பள்ளற்,காட்டனை வென்ற பள்ளற், சுழிசுழியா பள்ளற், ஆனையூர்ப் பள்ளற், அடுத்த நாட்டுப் பள்ளற், கோனுதையும் பள்ளற், கொலை களவு வென்ற பள்ளற், தொல்லை மாலை விலை கூறும் பள்ளற், ஆதியூர் பள்ளற், அரச பள்ளற், விசைய பள்ளற், வீரண பள்ளற்

தெய்வேந்திர பள்ளர் விருது

வரி 191 - 195
    இப்படி பள்ளனெனப்பட்ட சாதி காசிக்கும் தெற்கு கண்ணியாமுரிக்கும், வடக்கு மாந்தைக்கும் , கிழக்கு மானொளிக்கும், மேற்கு இந்த நான்கு தேஷத்திற்க்குண்டாகிய பள்ளனெனப்பட்ட சாதி அனைனவோர்களுக்கும் தரும்ம விளக்கம் செய்கின்ற பழனி மட சிவாலயம் தெய்வேந்திர பள்ளன் விருது
        "கந்தன் மயேஷ்பரன் கணபதி வாழ்க
        செந் திருமகளுடன் செனகமால் வாழ்க
        அயனுடன் சரஷ்பதி அமரரும் வாழ்க
        நாத்திசை புவனம் நரர்களும் வாழ்க"

மீண்டும் தெய்வேந்திரர் வரலாறு

வரி 195 - 201
        "சிவனுயுமையும் மதிறுக் காஞ்சி தன்னில்
        எகாம்பரரா இருந்தருள் புரிந்து
        மதுரையை நோக்கி வரும் வழியதனில்
        உலகலாமீன்ற உமையவள் மனதில்
        திருவருள் தோன்றி சிவனிடத்துரைக்க
        அரன்மன மகிழ்ந்து முகமது வேர்க்க
        கரமதில் வாங்கி வரமதுக்கியந்து
        வைகையில் விடுக்க
        வருணன் பொழிந்துருளிக் காத்தடித்து
        குளக் கரையதனில் கொடி வள்ளல் தாங்க
        ஓமம் வளர்ந்து உற்ப்பணமாக
        ஈஷ்வரி தேடி இருளில் நடக்க
        கூவிய சத்தம் குமரனை நோக்கி
        வாரியெடுத்து வள்ளலை வலப்புறம் வைத்து
        வலமார் பிய்த்து அமிர்தம்
        பொழிந்து அஷ்த்தம் கொடுக்க
        பாலன் நரிவு பணிவிடைக்காக
        புரந்தரன் மகிழ்ந்து பூரித்தேடுக்க"

தெய்வேந்திரன்
அன்னம் படைத்தல்

வரி 201 -204
        "கன்னல் சென்னல் கதழி பிலாவுடன்
        தென்னை கமுகு செறந்த வெள்ளிலை
        அன்ன மிளகு மாந்துளிற் மஞ்சள்
        மல்லிகை முல்லை மகழி நுவர்ச்சி
        பரிமள சுகந்தம் பாங்குடன் கொண்டு
        தெய்வ சபையை தெரிசிக்க வென்று
        காராவின் பாலை கரகத்திலேந்தி
        சீராக அன்னம் சிறப்பித்த போது"

தெய்வேந்திரன் விருதுகள்

வரி 204 - 211
        "ஈஷ்வரன் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
        அமரர்கள் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
        அமரர்கள் மகிழ்ந்து அதிசயத் திவர்கும்
        விமரிசையாக விருது கொடுக்க
        மாலயன் ருத்திரன் மகேஷ்பரன் மகிழ்ந்து
        பொன்முடி யதனில் பூசன மணிய
        வாடாத மாலை மார்பினி லிலங்க
        வெட்டுப் பாவாடைகள் வீணைகள் முழங்க
        செந்நெல் சேறாடி சிறப்புடன் சூழ
        வெள்ளைக் குடையும் வெங்களிருடனே
        டாலுடம்மான சத்தம் அதறிட
        மத்தாளம் கைத்தாமம் மகேஷ்பரத் துடனே
        எல்லா விருதும் இயல்புடன் கொண்டு
        தெய்வ சபையை தெரிசனம் செது
        பதினெட் டாயுதம் பாங்குட னெடுத்து
        புரவியிலேறி பூலோக மதனில்
        சென்னலா யெங்கும் சிறப்பிக்கம் போது
        விசுவ கண்ணாளர் மேழியும் கொடுக்க
        மூவராசாக்கள் முடிமணம் சூட்ட"

செந்நெல்லைப் படைத்தோர்

வரி 211 - 216
        "குகவேலருளால் குடும்பன் தழைக்க
        சிவனருளாலே திருநீறணிந்து
        யெல்லா வுலகும் யிரவியுள் ளனவும்
        தெள்ளிமை யாத செந்நெலை படைத்தோர்
        சேத்துக்கால்ச் செல்வரான
        செந்நெல் முடி காவலரான
        முத்தளக்கும் கையாதிபரான
        பாண்டியன் பண்டான பாறதகதபரான
        அளவு கையிட்டவரான
        மூன்று கைகுடையாதிபரான
        பஞ்ச கலசம் பாங்குடன் வயித்து
        அஞ்சலித் தேவர்கும் அன்னம் படைத்தவரான
        மண்ணை வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான
        கடல் கலங்கினும் காவேரி வற்றிலும் மலை
        கலங்கினும் மனங் கலங்காத வல்லபரான
        மாடக்குளத்தில் வந்துதித்தவரான பரமசிவனுக்கு
        பாத பணிவிடை செய்கின்றவரான"

தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய காணியாளர்கள்

வரி 216 - 220
    தெய்வலோகத்தில் தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய பழனித் தலத்தில் காணியாளனாகிய கொங்கப் பள்ளறில் பழனி பழனிப் பன்னாடி, கந்தப் பன்னாடி, கடையப் பள்ளறில், தென்பழனி இருள குடும்பன், மங்கனாட்டுப் பள்ளறில் பெரியழக குடும்பன், பாலசமுத்திரம் அறிய நாச்சி குடும்பன், குமாரக் குடும்பன் கலையன்புத்தூர் பெரிய அழக குடும்பன், அக்கிரஹாரம் அழக குடும்பன்,ரெட்டையன்பாடி பாப்ப குடும்பன், பந்த குடும்பன்,கல்லாபுரம் குமார குடும்பன்,கொழுமம் குமாரலிங்கம் சின்னாதா குடும்பன், நயினா குடும்பன்,

கன்னாடிப்புத்தூர் பண்ணாடிமார்கள்

வரி 221 - 226
    கன்னாடிபுத்தூர் வெள்ளானை பன்னாடி,கரிச்சி பன்னாடி,சோழமாதேவி ராக்க பன்னாடி, சோழ பன்னாடி,கணியூர் மூப்பன், காரத்தொழுவு வேல்பன்னாடி, கடத்தூர் குருப்பன்னாடி, அலங்கயம் ராக்க பன்னாடி, தனஞ்சியம் அழக பன்னாடி, தாராபுரம் உடையா பன்னாடி,வீராச்சி மங்கலம் கன்னாடிபுறுத்யூர் .....ல பன்னாடி,கோழிகடவு கூழைமலை பன்னாடி, ஆயிக்குடி சப்பளி குடும்பன், கரும குடும்பன், விருப்பாச்சியில் செவந்தா குடும்பன், நீலகண்ட குடும்பன், எடையைக் கோட்டை எழுவ குடும்பன், பாரைப்பட்டி பனிக்க குடும்பன், திண்டுக்கல் சனுவ குடும்பன்,வலையா குடும்பன், வல்ல கொண்டாம் நாயக்கனூரில் வேலக் குடும்பன்,தாடி கொம்பு குமார குடும்பன்,

வத்தலக் குண்டு
குடும்பனார்கள் பலகனார்கள்

வரி 226 - 231
    கொத்தபள்ளி கண்ணா பலகான்,கன்னிவாடி உக்கினிக் குடும்பன் ஆத்தூரில் திம்மக் குடும்பன், குழப்ப நாயக்கனூரில் சின்னாண்டி காலாடி, அம்ம நாயக்கனூரில் அம்மையாக் குடும்பன், மாவுத்தன் காலாடி, வத்தல குண்டு கெங்குவார்ப்பட்டி குடக்குடும்பன்,காரைக் குடும்பன், மூங்கிலணை வள்ளி குடும்பன், பெரிய குளம் தாமரைக்குளம் ராமக் குடும்பன்,போடிநாயக்கனூரில் பொன்னழக குடும்பன்,திணைகுளம் சங்க குடும்பன்,மஞ்சக் குடும்பன்,பூதணத்தம் நாச்சி குடும்பன்,விரும குடும்பன்,ஆனைமலை குலகார பன்னாடி.,

கோயமுத்தூர் பண்ணாடிமார்கள்

வரி 231 - 234
    மாரிச்சனாயக்கம் பாளையம் குப்பையாண்டி பன்னாடி,ஊத்துக்குழி ஆண்டிக் குடும்பன்,கோதைவாடி வேலுப்பன்னாடி, கோயமுத்தூர் வெள்ளானை பன்னாடி, வீர பன்னாடி, அவனாசி பன்னாடி, சூலூரு தம்பியா பன்னாடி, உக்கிரங்க்கொடி வேலிமங்காப் பன்னாடி,குறுப்பநாடு வில்லாப் பன்னாடி, ஆவிழி சொக்கப் பன்னாடி, அமுக்கயம் கத்தாங்க்கண்ணி ராக்கப்பன்னாடி.,

ஈரோடு கொங்குமுடையப்
பன்னாடி சேலம் பலகனார்

வரி 234 - 236
    ஈரோடு கொங்குமுடையார் பன்னாடி, சேலம் முத்த பலகான்,ராசிபுரம் கன்ன பலகான், நயினா பலகான், பரமத்தி கன்ன பலகான், வெங்கரை பாண்டமங்கலம் மூத்த பலகான்,சின்ன தாராபுரம் முத்துகருப்ப குடும்பன், பள்ளப்பட்டி வேல் குடும்பன், அறவக்குறிச்சி ஆண்டி குடும்பன்.,

கரூர் திருச்சிராப்பள்ளி
நாட்டு மூப்பனார்கள்

வரி 236 - 239
    கருவூர், புலியூர் பெரிய மூப்பன், பசவ மூப்பன், வாங்கல் சின்னாறி யாமூப்பன், புகழியூர் சின்னக்காளி மூப்பன், கட்டளை நடுவறுத்தா மூப்பன், குளித்தலை பழனி மூப்பன், தொட்டியம் உத்த மூப்பன், வெள்ளூர் பரம மூப்பன், சோமையநல்லூரு நயினகாளி மூப்பன், திருச்சினாப்பள்ளி நாட்டு மூப்பன், சொக்க மூப்பன், துறையூர்ச் சீமை எளுவ மூப்பன், ஆண்டி மூப்பன், பெரிய மூப்பன், பழனி மூப்பன்

தஞ்சாவூர்ப்பணிக்கனார்
தொண்டைமானார் சீமை குடும்பனார்

வரி 239 - 242
    தஞ்சாவூர் சீர்மை துளசி பணிக்கன், ஆண்டி பணிக்கன், சனுவ குடும்பன், மெய்ய குடும்பன், தொண்டமனார் சீர்மை பழனிக் குடும்பன், மெய்ய குடும்பன், சரச குடும்பன், குப்பா குடும்பன், காரை குடும்பன், சோடான் பிச்சை குடும்பன், சின்னாண்டி காலாடி, பழனி காலாடி, லின்கமநாயக்கர் சீர்மை, ராமக் குடும்பன், இலிங்கா குடும்பன்

மதுரை சொக்கக் குடும்பன்
இராமநாதபுரம் ரகுநாதக் குடும்பன்

வரி 242 - 246
    மதுரையில் சொக்க குடும்பன், வீர குடும்பன் மாடக்குளம் வேதி காபல் குடும்பன், தண்டு காபல்க் குடும்பன், கவுண்டன் கோட்டை புலையா குடும்பன், உடையாத் தேவர் சீர்மை சேதுபதி குடும்பன், ராம குடும்பன், அழக குடும்பன், கீழை பருத்தியூர், மேலை பருத்தியூர், உடையா குடும்பன், வீர குடும்பன், ராமனாதபுரம் ரெகுனாத குடும்பன், ராம குடும்பன், கலங்காதகண்டம நாயக்கனூரில் திருவிருந்தா குடும்பன், அழகன் காலாடி, சின்னாண்டி காலாடி, வண்டியினார் சீர்மை சிவசூரிய குடும்பன், அழக குடும்பன், தும்சபிச்சவங்கனூரில் சோனைக் குடும்பன்

தெய்வேந்திர காணியாளர்

வரி 246 - 251
    காணி காலாடி மர்ருமுண்டாகிய குடும்ப(னார்)கள், பன்னாடிகள், காலாடிகள், மூப்பன், பலகானென்கிற அய்ந்து வகுப்பும், பன்னீராயிரம கோத்திரமுடைத்தாகிய தெய்வேந்திர வமிஷத்தாரானவோர்களும் கொங்கு வய்காபுரி நாட்டில் பழனி மலை மேல் மகாபூசை கொண்டருளிய பால சுபிரமணிய சுவாமியார் திருவலப் புறமாக எழுந்தருளி வருகிற தெற்கு வீதியில் தென்மேல் மூலையில் தெய்வேந்திர சாதி அற மேடம் ஆலயமும் தெய்வேந்திர வினாயகனும் உண்டு செய்து பேறழம் தேபனாசித்தய்யற் சீசன் பழனிமலை உடையாருக்கு தருமசாதினமாகிய தாம்பூரசாதின பட்டயம் கட்டளை இட்டோம்.

தெய்வேந்திரர் பழனிகோயில்
கட்டளைகள் அன்னதானம்

வரி 251 - 253
    அந்த மடத்தில் அறதேசி பரதேசிக்கு உப்பு,ஊறுகாய்,நீராகாரம்,திருவிளக்கு,திருக்கண் சாத்தும் மலையின் பேறில் திருமஞ்சனம் மலை ஏறும் மேல் பாறிசம் தண்ணீர், பந்தல் நந்தவனம் இது முதலான தருமங்களும் உண்டு செய்து குடுத்தோம்.

கோயிலுக்குத் தெய்வேந்திரர் கொடை

வரி 253 - 269
    பட்டய சுபார்த்தியம் குடிக்கு நிமாட்டாயனுக் காறுபடி பெனசிரை பதினாலுபடி குடும்பன் பன்னாடி பதினாலு வள்ளமுனோர் தேசத்தில் தலைகட்டுக்கு ஒரு பணமும் தண்டுவனுக்கு அரைப்பணமும் கலியாணத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு மூணு பணமும் பெண் வீட்டுக்கு ரெண்டு பணமும் அனாதி முதலு சாதியில் குத்தம் தீந்த பணமும் கட்டளை இட்டோம். திருவிழாவுக்கு பெரிய ஊருக்கு அஞ்சு பணமும் சித்தூருக்கு மூணு பணமும் வினாயக சதூர்த்தி, சரஷ்பதி பூசை, கந்த சஷ்டி, சங்கிறாந்தி, சிவன் ராத்திரி இந்த விசேஷங்களுக்கு ஊருக் கொரு பணம் குடுத்து வருவோர்களாகவும் இந்த தருமத்தை பரிபாலனம் செய்யப்பட மடத்தய்யர் பட்டயங் கொண்டு கிராமங்களில் நாடுகளில் வந்தால் வருக்கு படி முதலானதும் குடுத்து பட்டயத்துக்கு அபிஷேகம் செய்து கோடி வஷ்த்திரம் சாத்தி நெவேத்தியம் குடுத்து பட்டய வாசகம் கேட்டு

கோயில் உரிமை
காலம் - பரிபாலனம்

வரி 269 - 274
    பட்டயத்திலுள்ளபடி கல்லும் காவேரியும் புல்லும் பூமியும் உள்ளவரைக்கு வரித்தனை குடுத்து நடத்தி வருவோர்களாகவும் வரித்தனை குடாத பேர்களை அஞ்சு சாதியின் பேறில் ஆணையிட்டு தெய்வேந்திரன் ஆணைக்கு உள்படுத்தி தீயுந்துறை, தண்ணித்துறை, வண்ணா நாசுவன் தடங்கல்ச் செய்து மங்கலமொதுக்கி வெங்கலமேடுத்துக் கொள்வோராகவும், அந்த அக்கை ஊரு மந்தையில் மிடகுக் கொள்ளாவிட்டால் தருமா மடமாலையத்தில் சேர்த்தி கொள்வாராகவும் இந்த படிக்கி பழனியாண்டவருக்கு பொதுவாக இந்த தருமத்தை பரிபாலனம் செய்து வருவோர்களாகவும்

வாழி

வரி 274 - 276
        "மூலயனுக்கான சிவன் விந்தும் வாழி
        மும்மல அருள்ப் பார்வை விசுவர்கமா வாழி
        மாலனருள் தெச்சணமா டக்குளமும் வாழி
        வளர்பால கனையீன்ற வள்ளல்க் கொடியும் வாழி
        பாலகனாய் வந்தவள்ளல் மகனும் வாழி
        பன்னீரா யிரம்கோத்திரம் பவிசும் வாழி
        தானே ஆறுமுகம் துணை"

பட்டய நகல்

வரி 276 - 278
    இந்த பட்டயம் இதற்க்கு முன் இருந்த பட்டயம் கை விடுதலாயிப் போனதற்கு பதிலா இப்போது ஆங்கிலா வருடம் புரட்டாசி மாதம் உண்டைக்கிய பட்டயம். (குருசாமி சித்தர், மள்ளர் மலர், மே 2002 , ப.16 -23 )