ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு நீதிபதி கட்ஜுவை விசாரிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி..


‘‘சக நீதிபதி பற்றி கருத்து கூறிய, நீதிபதி கட்ஜுவிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்’’ என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் புதன் கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திடீரென எழுந்து பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர், ‘காலையில்தானே கடிதம் கொடுத்தீர்கள். பிறகு பேசலாம்’ என்றார். அதைத் தொடர்ந்து, வெளிநடப்பு செய்த கிருஷ்ண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரை பற்றி, இதே நீதிமன்றத்தில் பணியாற்றி பின்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த கட்ஜு, பதவி வகித்த 7 ஆண்டு பிறகு, அந்த நீதிபதியை பற்றி கூறியுள்ள கருத்து பற்றி அவையிலேயே எழுப்ப விரும்பினேன். அதற்கு அனுமதி மறுத்த காரணத்தால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தேன்.
பதவியில் இருந்தபோது எதுவும் கருத்து தெரிவிக்காமல், ஓய்வு பெற்ற பிறகு சக நீதிபதி ஒருவர் பற்றி இதுபோன்ற கருத்து களை தெரிவிக்க ஆரம்பித்தால், நீதி துறையின் மாண்பே கெட்டு விடும். நீதிபதி கூறியுள்ள கருத்து நிச்சயமாக அவராக கூறியதாக இருக்காது. இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக