ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 4 பிப்ரவரி, 2012

பசுபதிபாண்டியன் கொலை : மேலும் சிலர் சிக்குவர்

திண்டுக்கல் :தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலையில், சரணடைந்த சண்முகசுந்தரத்தை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். கொலை செய்ய தூண்டியதாக தூத்துக்குடி மூலக்கரையை சேர்ந்த சுபாஷ்பண்ணையார் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். ராஜபாளையம் சண்முகசுந்தரம், நேற்று முன்தினம், சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் சரணடைந்தார். இவரை, காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் மேலும் பல தகவல்கள் தெரியவரும், என, போலீசார் எதிர்பார்க்கின்றனர். பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் 14 பேர் உள்ள நிலையில், இதுவரை, ஆறு நபர்களின் பெயர் மட்டுமே தெரிந்துள்ளது. மீதமுள்ள எட்டு பேரில் சுபாஷ் பண்ணையாரின் நெருங்கிய வட்டத்தில் உள்ள கோழிஅருள் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக