ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

வாக்குவாதமாக மாறியது கிருஷ்ணசாமி பேச்சு


சென்னை:""டாஸ்மாக், "பார்'களை ஒடுக்கப்பட்டவர்கள் நடத்த, இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,'' என, கிருஷ்ணசாமி வலியுறுத்தியதால், சட்டசபையில் வாக்குவாதம் நடந்தது.சட்டசபையில் நடந்த விவாதம்:கலையரசு - பா.ம.க: அனைத்து குற்றங்களுக்கும் குடி தான் காரணம். டாஸ்மாக் கடைகளை ஒழிக்க வேண்டும்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மதுவிலக்கு அமல் கொள்கையில் மாறுபட்ட கருத்து கிடையாது. இதன் தீமைகளை முதல்வர் நன்கு அறிந்துள்ளார். இந்தியாவில், குஜராத் தவிர அனைத்து மாநிலங்களிலும், மதுவிலக்கு அமலில் இல்லை. தீவு போல, தமிழகத்தில் மட்டும் அமல்படுத்துவது, நடைமுறையில் சாத்தியமில்லை.

கள்ளச்சாராய மற்றும் சமூக விரோதிகளை ஊக்குவிக்கவே, இதை வலியுறுத்துகின்றனர். இதன் பின்னணியில் கள்ளச்சாராய வியாபாரிகள் உள்ளனரோ என்ற சந்தேகம் உள்ளது. மதுக்கடைகளை மூடினால், அரசு கஜானாவுக்கு வர வேண்டிய பணம், சமூக விரோதிகளுக்கு சென்றுவிடும்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: பா.ம.க., நிறுவனர் வீடு இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில் தான் புதுச்சேரி உள்ளது. அங்கு பிராந்தி கடை, கள்ளுக்கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடையடைப்பு போராட்டம் நடத்தும் தைரியம் உள்ளதா?
கலையரசு: எங்கள் தைரியத்தை வெளிப்படுத்த தயாராகவே உள்ளோம்.

கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. எங்கள் மாவட்டத்தில், ஒரு டாஸ்மாக் பார் கூட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் வசம் கிடையாது.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: ஆதிதிராவிட மக்கள் பாதிக்கப்பட, "பார்' கோருகிறாரா அல்லது உ தவி செய்ய கோருகிறாரா? "பார்'கள், எவ்வித ஜாதி அல்லது மத அடிப்படையில் கொடுப்பதில்லை. அது ஒரு தொழில். டாஸ்மாக் என்பது வியாபார நிறுவனம். விதிப்படி தான், "பார்'கள் ஒதுக்கப்படும்.

கிருஷ்ணசாமி: கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் கூறுகிறேன். குடிப்பவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

நத்தம் விஸ்வநாதன்: போகிற போக்கை பார்த்தால், குடிக்கும் ஜாதியினர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்காமல் இருந்தால் சரி. இது நடைமுறையில் சாத்தியமில்லை. அவர்களும் ஏலத்தில் கலந்து கொண்டு, "பார்' எடுக்கலாம்.

கிருஷ்ணசாமி: போட்டி, ஏலம் நடப்பதில்லை. ஒதுக்கீடு தான் செய்கிறீர்கள். இடஒதுக்கீடு வழங்குவது போல, இதையும் செய்ய பரிசீலிக்க வேண்டும். ஊராட்சி தலைவர், ஒன்றியத் தலைவருக்கு அலுவலகமும், அரசு ஊழியர்களும் உதவியாக உள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு உதவியாளர்கள் இல்லை. எம்.எல்.ஏ., அலுவலகத்தை கூட நாங்கள் போய் தான் திறக்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: எம்.பி.,க்களுக்கும் அதே நிலை தான். ஊராட்சித் தலைவருக்கு 1,500 ரூபாய் தான் கிடைக்கும். ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு பல சலுகைகள் உள்ளன.

கிருஷ்ணசாமி: எப்படி அலுவலர் இன்றி செயல்படுவது. கலெக்டர் அலுவலகத்தில் ஒரு அறை ஒதுக்கி, அதில் ஒரு அதிகாரியை ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்க வேண்டும்.
நத்தம் விஸ்வநாதன்: எம்.எல்.ஏ.,க்களின் ஒட்டுமொத்த சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் என்றாலும், அதில் உதவியாளர் வைத்துக் கொள்வதற்கான தொகையும் தான் அடக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக