ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் மோதல் திட்டமிட்ட சதி நெல்லையில் ஜான் பாண்டியன் கண்டனம்

திருநெல்வேலி:சங்கரன்கோவிலில் இடைத்தேர்தல் நேரத்தில் சிலர் திட்டமிட்டு மோதலை அரங்கேற்றியுள்ளனர் என தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.சங்கரன்கோவிலில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் காயமடைந்த பெருமாள், காளிராஜ், நாகராஜ் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன் மூவரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.அவர் கூறும்போது, ""இடைத்தேர்தல் நேரத்தில் தேவேந்திர குல சமுதாயம், முஸ்லிம்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு சதி செய்துள்ளனர். போலீஸ்பாதுகாப்பை மீறி இச்சம்பவம் நடந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து சம்பவ இடத்தில் இருந்த போலீசாருக்கு தெரியும்.இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்திருந்தால் மோதலை தடுத்திருக்க முடியும். 


சங்கரன்கோவிலில் கலவரத்தை தூண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவேந்திரகுல மக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக உள்ளனர்.தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. பரமக்குடி துப்பாக்கிச்சூடு, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் போலீஸ் தடியடி என தாக்குதல் தொடர்கிறது. தென் மண்டல ஐ.ஜி., மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.போலீசார் தடைபின்னர் சங்கரன்கோவிலுக்கு செல்ல ஜான் பாண்டியன் திட்டமிட்டார். அவருக்கு போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து ஜான் பாண்டியன் கோயம்புத்தூர் புறப்பட்டுச்சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக