ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 14 ஜூன், 2013

பாண்டியர்.....வெண்குடைத் திருவிழா




அன்பிற்குரிய தமிழின உறவுகளே மற்றும் பிற தோழர்களே ,
கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பாண்டியர் வீழ்ச்சி 17 ஆம் நூற்றாண்டுவரை தொடர் போர்களாக நடந்து இறுதியில் முற்றாக வீழ்ந்தது.பாண்டியர் தலைநகர் மதுரை வீழ்த்தப் பட்டபின் பாண்டிய மண்டலத்தில் இருந்த குடும்பு உள்ளாட்சி அரசுகளுடன் விஜயநகர தெலுங்கு வடுகப் படை 200 ஆண்டுகளுக்கும் மேலாக போர் புரிய வேண்டியதிருந்தது. அவ்வாறு அனைத்து பாண்டியர் உள்ளாட்சி அமைப்புகளும் தனித் தனியே பலகால கட்டங்களில் தெலுங்கு வடுகர்களுடன் போர் புரிந்தன. அவ்வாறான தமிழர் உள்ளாட்சி அரசொன்று முதுகுடி என கல்வெட்டுகள் சுட்டும் இன்றைய ராசபாளையம் பகுதியில் தெலுங்கு வடுகர்களால் தோற்கடிக்கப்படமுடியாமல் இருந்தது. தமிழர் அரசாம் பாண்டிய அரசின் அவ்வாறான வெற்றியானது இன்று வரை இப்பகுதியில் வெண்குடைத் திருவிழாவாக ஆண்டுதோறும் பாண்டியர்களால் கொண்டாடப்படுகிறது. வேந்தர்கள் போரில் வெற்றி பெற்றால் தோற்ற வேந்தனின் வெண்குடையை தமதாக்கி கொள்வது தமிழர் போர் மரபு. வெண்குடை இழப்பதுவே தோல்விக்கான அடையாளம் ஆகும், அவ்வாறு தெளுங்கர்களால் பாண்டியர்களின் வெண்குடை இன்றளவும் பறிக்கப் பட முடியாமல் , அவ்வேற்றியானது பாண்டியர்களால் இன்றுவரை கொண்டாடப் படுவதுவே இவ்விழா ஆகும். வரலாற்று தேடல் உள்ள நண்பர்கள் இவிழவைக் கண்டு அதிகப் படியான செய்திகளை வரலாறுகளை உலகிற்கு சொல்ல இவ்விழா உதவும் என நம்புகிறேன். மேலும் வரலாறு செய்திகள் தெரிந்த நண்பர்கள் ஆரோக்கியமான முறையில் கருத்து பரிமாற்றம் செய்யும் பொருளாகவும் இவ்விழ இருக்கும் என நம்புகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக