ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

'பிரமலைக் கள்ளர்களின் வாழ்வும் வரலாறும்' புத்தகத்தில் இருந்து:



'பிரமலைக் கள்ளர்களின் வாழ்வும் வரலாறும்' புத்தகத்தில் இருந்து:

             "தனி அரசை நிறுவித் தன்னாட்சி புரிந்து வந்த பிறமலைக் கள்ளர்களின் நாட்டு எல்லைகளைப் பார்த்தோமேயானால், மேற்கில் மதுரை நகரமும் திருபரங்குன்ற மலைகளும், தெற்கில் நாகமலையும், கிழக்கில் மேற்குமலைத்தொடரும், வடக்கில் குண்டாறும் உள்ளன. இந்த எல்லைகளுக்குள்தான் பிறமலைக் கள்ளர்கள், ‘அம்பலம்’ என்ற பட்டத்தோடு (அம்பலம் & தலைவர்) நாட்டை ஆண்டனர்.மேலும
் கள்ளர்களின் நகர எல்லைகளாக இராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்கள் ஆகியன இருந்தாலும் இவர்கள் ஒருபோதும் அந்த ஆட்சியாளர்களுக்கு அடங்கியதில்லைமாறாக அவர்களது ஆட்சி அதிகாரத்தைச் சீர் குலைப்போராகவே இருந்தனர். தம்மை இரண்டாம் பிரஜைகள் ஆக்கும் அதிகார அமைப்புக்கு எதிரான தம்ஆளுமைச் செயல்பாடுகள் காரணமாக கள்ளர்கள் தமக்கென்று சட்டம் & ஒழுங்கு மற்றும் வருவாய் அமைப்புகளைக் கொண்டு தன்னாட்சியை அனுபவித்து வந்தனர் என்பது உறுதியாகிறது."

நமது கேள்விகள்:
1 . அந்த அந்த ஆட்சியாளர்களுக்கு அடி பணியாமல் தனி அரசை நிறுவி வந்தவர்கள் கள்ளர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அப்படியானால் அந்த ஆட்சியாளர்கள் யார்? அவருடைய மக்கள் யார் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக