ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'முனைவர் S M கமால் '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'முனைவர் S M கமால் ' 

முனைவர் S M கமால் தாம் எழுதிய முஸ்லீம்களும்,தமிழகமும் என்ற தனது நூலில் (பக்.120 ) மதுரையை சிறிது காலம் நாயக்கர் ஆட்சிக்குப் பின்பு ஆளுமைக்கு உட்படுத்திய கான்சாயபு 'மருதநாயகம்' ஆட்சி பற்றிக் கூறும்போது பின்வரும் செய்திகளைக் கூறுவார்.

       "மதுரையின் ஆளுநர் என்ற முறையில் மிகக் குறுகிய காலத்த
ில் அறிய பல சாதனைகளைச் செய்தார். மதுரை நகரையும் அதனையடுத்த வடக்கு,கிழக்குப் பகுதியிலும் தங்களது பாரம்பரிய தொழிலான திருட்டு,கொள்ளை போன்ற கொடுஞ்ச்செயல்களினால் மக்கள் சமுதாயத்தை அலைக்கழித்து,அவலத்திற்கு உள்ளாக்கி வந்த கள்ளர்களை ஈவு இறக்கம் இல்லாமல் அழித்தார். மேலூர்,வெள்ளாளப் பட்டி ஆகிய ஊர்களில் கோட்டைகளை அமைத்து மக்களை கள்ளர் பயத்தில் இருந்து காத்தார். மேலும், கள்ளர்கள் இயல்பான வாழ்க்கையில் ஈடுபட்டு உழைக்கும் வகையில் பல உதவிகளை அவர்களுக்குச் செய்தார். அவர்களது கொடுஞ்செயலுக்கு படுகளமாக விளங்கிய காடுகளை அழித்து,கழனிகளை அமைத்து விவசாயத்தைப் பெருக்கினார். அதற்கான கண்மாய்களையும், கால்களையும் செம்மைப் படுத்தினார்" என பதிவு செய்துள்ளார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக