பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகத்தை, தமிழக அரசு தடை செய்துள்ளது
இந்தியாவில், "எமர்ஜென்சி' அமலில் இருந்த காலத்தில், வலம்புரி ஜானின், "நியாயம் கேட்கிறோம்' என்ற புத்தகமே, தமிழகத்தில், கடைசியாக தடை செய்யப்பட்டது.//
புத்தகங்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்குமா? : புத்தக தடையால் சர்ச்சை
"பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகத்தை, தமிழக அரசு தடை செய்துள்ளது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது; தடையை நீக்க வேண்டும்' என, எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடை : செந்தில் மல்லர் என்பவர் எழுதிய, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, அப்புத்தகத்தை வெளியிட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இப் புத்தகத்திற்கு தடை செய்திருப்பது, தமிழகத்தில் உள்ள புத்தக பிரியர்களுக்கு, பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
இதுகுறித்து, எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் கூறியதாவது: புத்தக வாசிப்பு பழக்கமே, குறைந்து வரும் இன்றைய சூழலில், புத்தகங்களால் மோதல் வரும் என நினைப்பது, தவறானது. கடந்த சில ஆண்டுகளாக, தமிழகத்தில், மிகப் பெரிய ஜாதி மோதல்களை தூண்டும் விதமாக, ஜாதிக்கட்சித் தலைவர்கள் பேசிய போது, அமைதியாக இருந்த தமிழக அரசு, அறிவுதளத்தில் இயங்கக் கூடிய புத்தகங்களை தடை செய்திருப்பது, தவறானது.
சுப தின அழைப்பிதழ்கள், பிளக்ஸ் பேனர்கள், கட் - அவுட்கள் போன்றவை, ஜாதி மோதல்களை தூண்டும் விதமாக வைக்கப்படும் போது, தமிழக அரசு, அதை கண்டும் காணாமல் போகிறது; ஆனால், வரலாற்றை மறுபரிசீலனை செய்யும் நூலை, தடை செய்திருப்பது, துரதிஷ்டமானது; தடையை நீக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
10 லட்சம் பரிசு : நூலாசிரியர் செந்தில் மல்லர் கூறியதாவது: கடந்த, ஏழு ஆண்டுகளாக, தென் மாவட்டங்களில் உள்ள கல்வெட்டுகள், நில ஆவணங்கள், சமூக மரபுகள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றை முழுமையாக, ஆய்வு செய்து, 700க்கும் மேற்பட்ட மேற்கோள்களுடன், புத்தகத்தை எழுதினேன். ஏப்., 28ல், சாத்தூரில், பிரமாண்ட விழாவில், நூலை வெளியிட தீர்மானித்திருந்தோம். அதற்கு, மாவட்ட காவல் துறை தடை
விதித்தது. மதுரை ஐகோர்ட் கிளையை அணுகிய போது, மதுரையில் வெளியிட அனுமதி அளித்தது. அதற்குள், தமிழக அரசு, என் புத்தகத்தை தடை செய்துள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்துவது மாதிரியான வார்த்தைகள், என் புத்தகத்தில் இல்லை. அரசு, என் ஆய்வு முடிவுகளின் உண்மை தன்மை குறித்து, ஆய்வு செய்ய, தனிக்குழு நியமித்திருக்க வேண்டும். பின், தடை செய்திருக்க வேண்டும். ஆனால், பொத்தாம் பொதுவாக தடை செய்திருப்பது, தவறானது. என் ஆய்வு முடிவுகள், உண்மைக்குப் புறம்பானவை என, தமிழக அரசு நிரூபித்தால், 10 லட்சம் ரூபாய் பரிசு தரத் தயாராக உள்ளேன். இம்மாதம், 28ம் தேதி, புத்தகத்தை வெளியிட தீர்மானித்துள்ளேன். அதற்கு, கோர்ட்டின் உதவியை நாடுவேன். இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியாவில், "எமர்ஜென்சி' அமலில் இருந்த காலத்தில், வலம்புரி ஜானின், "நியாயம் கேட்கிறோம்' என்ற புத்தகமே, தமிழகத்தில், கடைசியாக தடை செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக