தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் உள்ள உட்பிரிவுகளை கலைத்து, ஒரே இனமாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என, சேலத்தில் நடந்த மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின், சேலம் மாவட்ட வாழ்வுரிமை மாநாடு, சேலத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் வக்கீல் கிருஷ்ணா தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வரதராஜன், மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில தலைவர் கலியபெருமாள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில், தி.மு.க., ஆட்சியில், தேவேந்திர குல மக்களையும், பட்டியலில் உள்ள, 75 உட்பிரிவுகளையும் சேர்த்து ஆதிதிராவிடர்கள், என மாற்றியமைத்துவிட்டனர். அந்த அரசாணையை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை மாற்றி, பட்டியல் இனத்தவர் நலத்துறை அல்லது அட்டவணை இனத்தவர் நலத்துறை, என அறிவிக்க வேண்டும்.
அரசுத்துறைகளில், ஜாதி ரீதியான இடமாற்றம், பதவி உயர்வு உள்ளிட்டவற்றை போக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மக்களுக்கு, பொருளாதார வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சேலம் மாநகர செயலாளர் கணேசன், துணை செயலாளர் சேகர் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக