"இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்களை ஆய்வாளர்கள் மத்தியில் மறுக்கும் அறிஞர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு."
இது வரை வெளிவந்து இருக்கும் எந்த வரலாற்று புத்தக ஆசிரியரும், இப்படி நேரடியாக விவாதத்துக்கு அறைகூவல் விடுத்தது இல்லை. அந்த புத்தகம் சமீபத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் 'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற 'குடிமரபியல் ஆய்வு நூல்' புத்தகம் ஆகும். தடைக்கு காரணமாக, "சாதி மோதல்களை தூண்டும், மற்ற சாதி ஆட்களை கொச்சை படுத்தி எழுதப்பட்டு உள்ளது, பொய் தகவல்கள்" என்று பொத்தாம் பொதுவாக காரங்கள் சொல்லப்பட்டு உள்ளன. இவை உண்மையான காரணங்களா, வேறு ஏதும் உள்நோக்கம் உண்டா என்பதை நாம் விரிவாக காணும் முன்பு, இது சார்ந்த வேறு சில விசயங்களை அலசி ஆய்ந்து விட்டு, தொடர்வோம்.
திராவிட எதிர்ப்பு நிலை
* 'இனி திராவிடத்தை எதிர்ப்பதே என் வாழ் நாள் நோக்கம்' என்று முழங்கியவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.(பொறுப்பான ராமதாஸ் அவர்களின், உணர்ச்சி வயப்படும் அரசியலில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.) அவரின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு உண்மையான காரணம் 'அவரின் சாதி வெறி' என்று நம்ப வைக்கபட்டாலும், அதன் உண்மையான காரணம் அவரின் திராவிட எதிர்ப்பு நிலையே. இது இன்றைய அரசியலை ஆய்ந்து நோக்கும் அனைவரும் அறிந்ததே. இது பலகாலம் திட்டமிடப்பட்டு இன்று காத்திருந்து வீழ்த்தப்பட்டு உள்ளார் திரு.ராமதாஸ் அவர்கள்.
"நாங்கள் தோற்றாலும், ராமதாஸ் அவர்களை அவர்களின் சொந்த தொகிதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற விடாமல் வீழ்த்தியதை தான் திமுக தனது வெற்றியாக நினைக்கிறது" என்று மு.க ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது அளித்த பேட்டியே அதற்க்கு சாட்சி.
* இதே திராவிட எதிர்ப்பு நிலையில், அதனை மைய்யப்படுத்தி, அதை வரலாற்று தரவுகளுடன் சுமார் 7 வருட ஆய்வுக்கு பின்பு புத்தகமாக எழுதியவர் தான் திரு.செந்தில் மள்ளர். 'நாடார் தான் மூவேந்தரின் வாரிசு' என்று அதிமுக அரசு அறிவித்தபோது, 'வரலாறு தெரியாத முதல்வர்' என்று பகிரங்கமாக மறுத்த ஒரே நபர் செந்தில் மள்ளரே ஆவார்.
(Read: http://mallarchives.blogspot.in/2012/12/1.html).
இந்த புத்தகத்துக்கு கீழ் கண்ட திராவிட எதிர்ப்பு அறிஞர்கள் அணிந்துரை வழங்கியுள்ளனர். மேலும், இவர்கள் யாரும் பள்ளர் கிடையாது.
* 'நாம் தமிழர்' சீமான்
* முனைவர் அருகோ
* அறிவர் குணா
* தன்மாணன்
* புதுக்கோட்டை பாவாணர்
* புலவர் காசி ஆனந்தன்
அரசு சொல்வது போல உப்பு சப்பில்லாத 'சாதி மோதல், பொது அமைதிக்கு குந்தகம்' போன்றவை தான் உண்மையான காரணம் இல்லை என்பது இப்போது புரிந்திருக்கும். மேலும், சதாசிவ பண்டாரத்தார் எழுதிய 'சோழர் வரலாறு' புத்தகத்தில் 'வன்னியரை' பற்றி குறிப்பிட்டு எழுதி உள்ளார். ஆனால் அது போன்ற எந்த வரலாற்று புத்தகமும் தடை செய்யப்படவில்லை என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த புத்தகத்தில் தமிழ் சாதிகளான முக்குலத்தோர், பிள்ளை போன்ற சாதிகளை பற்றி சர்ச்சைக்குரிய பதிவுகள் இருப்பது உண்மை. ஆனால் அவை யாவும் புத்தகத்தின் ஆசிரியர் கூறிய தகவல்கள் அல்ல என்பதும், அந்த அந்த சமூக ஆட்கள் எழுதி வைத்த தகவல்களை தகுந்த மேற்கோளுடன் எடுத்து விவரித்திருந்தார் என்பதும் புத்தகத்துக்கு அணிந்துரை அளித்த அனைவருக்கும் தெரியும். அப்படி குறிப்பிட்டது மட்டும் சரியா,தவறா என்ற ஆய்வுக்கு நாம் செல்லவில்லை. ஆனால் 'இன்ன இன்ன தகவல்கள் பொய், இன்ன இன்ன பக்கங்களை நீக்குக' என்று எந்த முன் அறிவிப்பும் கொடுக்காமல், ஒட்டு மொத்தமாக ஒரு 'குடிமரபியல் ஆய்வு நூலை' தடை செய்யும் போதே, அந்த புத்தகத்தில் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த புத்தகத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது?
"பள்ளரே பாண்டியர், அவர்களே தமிழ் பகைவர்களான நாயக்கர்களால் வீழ்த்தப்பட்டு உள்ளனர், அந்த நாயக்கர்களின் வழித் தோன்றல்கள் தான் இன்றும் திராவிட மாயைக்குள் தமிழர்களை சிக்க வைத்து, முள்ளி வாய்க்கால் வரை இந்த இனத்தை சீரழித்து உள்ளனர்." --- இது தான் அந்த புத்தகத்தின் ஒட்டு மொத்த சாராம்சம்.
உண்மையில் இந்த புத்தகம் யாருக்கு கலக்கத்தை தர வேண்டும்? நாயக்கர்களுக்கும், திராவிடருக்கும் தானே? ஆனால், இங்கே கலக்கம் அடைவது யார் தெரியுமா...? விஷயம் தெரியாத, ஒரு சில 'முக்குலத்தோர்' நண்பர்களும், அமைப்புகளும் தான். ஏன் இவர்களுக்கு இந்த மனநிலை? என்ன காரணம்? இதற்க்கு பதிலும் அந்த புத்தகத்திலேயே உள்ளது. அந்த முக்குலத்து நண்பர்லின் கூற்றுப்படி 'தாங்கள் தான் பாண்டியர் மற்றும் மூவேந்தர் வம்சம்' என்பதும், கீழ்நிலை சமூகமாக அவர்கள் கருதும் 'பள்ளர்கள்' அல்ல என்பது தான் அவர்கள் வைக்கும் வாதம். இதை மேலோட்டமாகவே நாம் விமர்சனம் செய்வோம்.
> 'பாண்டியன் குலநாசினி' என்றும், 'வைகை வளநாடன் கொட்டமடக்கி' என்றெல்லாம் பட்டம் தரித்த மறவர் சமூக மக்கள் தான் 'பாண்டியர்கள்' என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம். 'பாண்டியன்' வீழ்த்தப்பட்டது 'நாயக்கர்களால்' தான் என்பது வரலாறு. அப்படி என்றால், கடந்த 500 வருடங்களாக மறவர்கள், தன்னை வீழ்த்திய நாயக்கருடன் அல்லவா மோதலை கடை பிடித்து வந்திருக்க வேண்டும்? ஆனால், கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல், எதற்கு மறவர்கள் 'பள்ளருடன்' மோதலை கடைபிடிக்க வேண்டும்? 'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' புத்தகம் தடை செய்யப்பட்டதால், வேறெந்த தமிழ் சமூகத்துக்கும் இல்லாத மகிழ்ச்சி ஏன் இவர்களுக்கு வருகிறது?
> 'பள்ளு இலக்கியம்' என்பது நாயக்கர்களால் எழுத்தப்பட்ட, 'பள்ளர்' இனத்தை இழுவு படுத்தவே உருவாக்கப்பட்ட இலக்கியமாகும். 'மறவர்கள் தான் பாண்டியர்கள்' என்றால், சம்பந்தமே இல்லாமல் நாயக்கர்கள் எதற்கு 'பள்ளர்களை' இழிவு படுத்த வேண்டும்?
> நாயக்கருக்கும், பள்ளருக்கும் இடையே முக்குலத்தோர் ஏன் ஒரு தடுப்பாக நிற்கின்றனர்? இந்த கேள்விக்கான பதிலை தான் அப்பட்டமாக 'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' புத்தகத்தில் எழுதி உள்ளனர். வரலாற்றில் அன்று மட்டும் அல்ல, இன்றும் கூட திராவிட ஆட்சியாளர்களுக்கும், திராவிட கருத்தியலுக்கு முட்டு கொடுத்து, தமிழ் சாதியான பள்ளரை எதிர்ப்பதன் மூலம், காட்டி கொடுப்பு வேலைகளை ஜோராக செய்து வருகின்றனர்.அதற்க்கு கைமாறாக அன்று ஜமீன்களையும், இன்று அரசியலில் பிரதிநிதி துவமும், பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களுக்கு அரசு விழாவும், ஊடங்களில், திரைப்படங்களில் அவர்களுக்கென்று பிரத்தியேக பிம்பத்தையும் உருவாக்கி தந்துள்ளனர். ஒரு தமிழ் சாதியை வைத்து, இன்னொரு தமிழ் சாதியை வீழ்த்தும் திராவிட மாயைக்குள் இவர்கள் சிக்கி இருந்தாலும்,உண்மை தெரிந்தாலும் அதை விட்டு வெளியே வர மறுக்கின்றனர்.
முக்குலத்தொரே மூவேந்தர்களாக என்று வைத்து கொண்டாலும், இந்த 'ஆண்ட பரம்பரை' என்ற வெற்று பீத்தலை தாண்டி, தமிழர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்க இவர்களிடம் எந்த ஒரு அரசியலும் இருப்பதாக தெரியவில்லை. மேலும், அப்படி இயங்கும் சக்திகளுடன் (இவர்களில் ஒரு சிலர் தவிர), மற்றவர்கள் சேர்ந்து இயங்க மறுக்கின்றனர். இது தமிழர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவே.
எனவே முக்குலத்து சொந்தங்களே,
* நீங்கள் இங்கே அரசியல் அரங்கில் தனிமை படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டு ஒரு குடையின் கீழ் செயலாற்ற வாருங்கள்.
* தமிழ் சமூகத்தின் முல்லை நிலக்குடி மக்களான நீங்கள், இவ்வாறு சக தமிழருடன் மல்லு கட்டி கொண்டு நிர்ப்பது ஏற்புடையதா?
* ஒரு வேலை நீங்கள் வராவிட்டாலும், தமிழருக்கான அரசியல் நன்றாகவே நடக்கும். ஆனால் வரலாறு உங்களை என்ன என்று குறித்து வைக்கும் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.
-- தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் --
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக