ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 25 ஜூன், 2013


கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு : மாநிலங்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு உறுதி?


எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலில் திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி தனது ஆதரவை அளிக்க முன்வந்துள்ளது.
 இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய கிருஷ்ணசாமி பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது இது பற்றி அறிவித்தார்.

அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு போதுமான ஆதரவு உள்ளது. எனவே, எங்கள் கட்சியின் வாக்குகள் வீணாகக் கூடாது என்பதற்காக திமுகவுக்கு ஆதரவ்ளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

புதிய தமிழகம் கட்சிக்கு 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மனித நேய மக்கள் கட்சி ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது கனிமொழியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் 6வது இடத்தை கைப்பற்ற திமுக சார்பில் கனிமொழியும், தேமுதிக சார்பில் இளங்கோவனும் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுகவுக்கு மொத்தம் 23 எம்.எல்.ஏக்களும், தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். எனினும் தேமுதிகவில் 7 பேர் அதிருப்தியாளர்களாக உள்ளனர்.  இதனால் அந்தக் கட்சிக்கு 22 எம்.எல்.ஏக்களே உள்ளனர்.

இந்நிலையில் புதிய தமிழகம், மனித் நேய மக்கள் கட்சி என்பன திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் திமுகவின் பலம் தற்போது 25 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆறாவது இடத்தை கனிமொழி கைப்பற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக தேமுதிக, காங்கிரஸைச் சந்தித்து தமது வேட்பாளருக்கு ஆதரவு கோரியிருந்தது. திமுகவும், காங்கிரஸை சந்தித்து மீண்டும் ஆதரவு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக