ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

மதமாற்றமும் தேவேந்திரகுலமும் ஓர் பார்வை!!!

எந்த மதத்திலும் இல்லாத எண்ணற்ற வேற்றுமைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உயர்சாதி தாழ்ந்தசாதி என்ற சாதிய உட்கட்டமைப்புகளையும் கொண்ட மதமாக இந்து மதம் விளங்கினாலும் இந்து மதத்திற்கு உள்ள தனிசிறப்பை பார்பினிய கொள்கைகளை மாற்றுமததினறும் ஏற்று பின்ப்ற்றும் வண்ணம் எடுத்துரைத்த பெருமை எம் அதிகார உயர்சாதி இந்து மக்களையே சாரும் அதற்கு அடியேனின் அன்பு வணக்கம்... தாழ்த்தப்பட்டவர்கள் ஆனாலும் தனக்கு நிகரானவர் இல்லாவிட்டாலும் தன் மதத்தின் கொள்கைகளை பின்பற்ற செய்து தங்கள் வணங்கும் கோவிலுக்குள் கூட அனுமதிக்காத அதிகார வர்க்கத்தினறுக்கு அடியேனின் அடுத்த வணக்கம்...தடைகள் பல கடந்து தன்குல பெருமை காத்து இன்றுவரை தாழ்த்தபட்வர்கள் ஆனாலும் இந்து மததவனாய் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தொடர்ந்து கொண்டிருக்கும் என் போன்ற சொந்தங்களுக்கும்/மற்ற என் சொந்தங்களுக்கும் உங்களில் ஒருவனாய் எனது தனிப்பட்ட கருத்துக்கள் உங்களின் சிந்தனைக்காக… இதோ அரசே ஆரம்பித்து விட்டது சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த...அதனால் இனிமேல் சாதிகள் இல்லையடி பாப்பா என்று நாம் நம் பின் சந்ததியினருக்கு சொல்லிகொடுப்பதில் பயன் இல்லை என்பதை என்போல் சிந்தனைகொண்ட உங்களுக்கு சொல்லி புரியவைக்கத்தேவை இல்லை நம் காலில் முள் தைத்தால் நிச்சயம் முள்ளால் தானே எடுப்போம் அதேபோல் சாதீயம் எனற் கிருமியை சாதீயம் என்ற மருந்தால் மட்டுமே குனப்ப்டுத்த முடியும் என்பது என் நம்பிக்கை. தற்போது சாதி என்பது நம் முகவரி அது நம் அடைமொழி ஆகும் போது அங்கீகரிக்கப்ப்டுகிறது அங்கீகரிக்கப்படும்... உன் நண்பர்களில் ஒருவன் உன்னிடம் என்ன சாதி எனும் போது உன் நா குழழுகிறது அதையே நீ அவனிடம் கேட்கும் பொழுது புன்முறுவலுடன் சொல்லுவான் செட்டியார், முதலியார், யாதவ் என்று ஏன் இந்த நிலை அவன் சமூகத்தில் தினக்கூலிகள் இல்லையா? பொருளாதாரத்தில் ந‌ம்மைவிட பின்தங்கியவர்கள் தான் இல்லையா? ஏன் என்று சிந்திக்கும் போது ஒரு உன்மை புலப்படும் அவன் சமூகத்தில் பின்தங்கியவர்கள் குறைவு முன்னேற்றம் கண்டவர்கள் அதிகம் அதற்கு நேர்மாராக அல்லவா நம் சமூகம் உள்ளது பின் எப்படி உன் சாதியை நாகூசாமல் சொல்லமுடியும் கூசத்தானே செய்யும்... சிந்தியுங்கள் எப்படி நீ சார்ந்த சமூகத்தையும் முன்னேறறலாம் என்று... நீ உயர்திருக்கலாம் நீ சார்ந்த சமூகம் தாழ்நிலையில் அல்லவா தவழ்ந்து கொண்டிருக்கிறது பிறகு எங்கிருந்து உனக்கு மறியாதை கிட்டும்.. அதனால் உன் தனிப்பட்ட ஒருவனின் வளர்சியை வைத்துக்கொண்டு நான் வளர்சியடைந்துவிட்டேன் இருந்தும் இந்த சாதியில் இருப்பதால் தான் இந்த சமூகம் என்னை புறக்கணிக்கிறது என்று பிதற்றுவதில் என்ன நியாயம் இருக்கிறது...உன் சமூகத்தின் வளர்சி என்பது உன்னை பொருத்தது அல்ல உனனைபோன்ற என்னைபோன்றோரின் கூட்டு முயற்சி... இரு கை ஒலித்தால் ஓசை அறு கை ஒலிக்கும் போது அதிர்வு நிச்சயம் ஒரு நாள் அதிரும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை... தர்மம் நிச்சயம் வெல்லும் காலம் விரைவில் பதில் சொல்லும்... அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றேஒன்றுதான் நமக்குள் எண்ணற்ற வேற்றுமைகள் இருந்தாலும் அனைத்தையும் மறந்து ஒரு குடையின் கீழ் தேவேந்திரர்களாய் ஒருதாய் பிள்ளைகலாய் நமக்கு நாமே திட்டங்கள் வகுத்துக்கொண்டு நாம் வளர்ந்ததை போல் எப்படி நம் சமூகத்தின் தாழ்நிலையில் உள்ளவர்களை முன்னேற்றலாம் என்று அதற்கான வழிமுறைகலை செயல்படுத்த தொடங்கும் போது அங்கே நம் சமூகதில் தாழ்ந்தவர்களும் உன் போல் உயர்நிலையை அடையும் போது மட்டும் தான் நாம் எதிர்பார்க்கும் சமூக அந்தஸ்த்தை இந்த கேடுகெட்ட சமூகத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியும். மேலும் தாழ்த்தப்பட்டவன் என்று எகத்தாலம் பேசி அவனை அவனே உயர்ந்தவன், உயர்சாதி என்று சொல்லித்திரியும் சாதிவெறியர்களுக்கு செருப்பால் அடிப்பது மாதிரி பதில் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள் என் சொந்தங்களே... ஆம் தாழ்த்தப்பட்டவர்கல் தான் நாமும்!!! முன்னொருகாலத்தில் அவர்களினும் மேன்மக்களாய் இருந்து தாழ்த்தப்பட்டவர்கள் நாம் என்று எடுத்துறையுங்கள்!!! எம்முன்னோர்கள் இந்த நாட்டை ஆண்ட மன்னர்கள் என்று எடுத்துறையுங்கள்!!! புரியாத மக்கு மண்டைகளுக்கு வரலாற்றை புரட்டி காட்டுங்கல்!!! அதிலும் தீர்வு கிடைகாத பட்சத்தில் நேரடி வாக்குவாதத்தை தொடங்குங்கள் எப்படி என்கிறீர்களா??? நீ பீஸீ யா எம் பிசி யா எனறு ஆரம்பியுங்கள் சிறிதும் நாகூசாமல் எம் பி சி என்பான் அவர்களிடம் கேளுங்கள் எங்களுக்கு பணிவிடை செய்யும் அம்பட்டையனும், வண்ணானும் கூட எம் பிசி தான் அப்ப அவர்களும் நீங்களும் சரிநிகர் சமமானவர்களா என்று கூறி...பின் பாருங்கள் அவன் மூஞ்சியை நிச்சயம் சற்று தொய்வு ஏற்பட்டிருக்கும் அப்போது சொல்லுங்கள் உங்களை போல் தான் எஸ் ஸி யிலும் எண்ணற்ற சாதிகள் உண்டு அதில் நாங்கள் தேவேந்திரகள் என்று உன்னை நீ தனிமைபடுத்திக்காட்டி முதலில் உன்னை நீ உயர்வாக பேசு விரைவில் மற்றவன் உன்னை உயரத்தில் வைப்பான்... தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்களாய் தொடர்ந்து கொண்டிருக்கையில் நீ உயர்ந்தவன் நாங்கள் தாழ்ந்தவர்கள் என்று எம்மை உதாசீனப்படுத்தும் இந்துதுவம் பேசும் அதிகார வர்க்கத்தினருக்கு அடியேனின் இறுதி எச்சரிக்கை!!!... தாழ்த்தப்பட்டவர்கலாகிய எங்களையும் உன்னோடு இனைத்து கொண்டிருப்பதால் தான் உன்னால் இந்தியாவில் இன்றும் இந்துதுவம் பேசமுடிகிறது பெரும்பான்மையான மதம் எனற மாயையில்.... 45% உயர்சாதி இந்துக்களோடு 25% இந்த தாழ்த்தப்பட்டவனும் உன்னோடு சேரும் போதுதான் நீ பெரும்பான்மை மதமாக அங்கீகரிக்கப்படுகிறாய் அப்போதுதான் உன்னால் இந்துதுவம் பேசமுடிகிறது... மனதில் வைத்துக்கொள் நீ எங்களை சரிநிகர் சமமாக ஏற்காத பட்சத்தில் எங்களுக்கு மறியாதை தர தவரும் பட்சத்தில் எங்களை நாங்களே மற்ற சிறுபான்மை மதத்தோடு இனைத்துக்கொண்டாலோ அல்லது ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்டவனும் தனிமதமாக தங்களை அரசானை பிறப்பியுங்கள் என்று போராட துவங்கினாலோ எங்கே செல்லும் உன் இந்துதுவம்!!! மொத்ததில் எங்களை சார்ந்துள்ள நீ... உன் அதிகார மற்றும் பன பலத்தால் எங்களை தாழ்த்தி நீ மகிழ்ச்சி கடலில் குளித்துக்கொண்டிருக்கும் உனக்கு என்ன ஆனவம் இருக்கும்!!! மனிதகடவுள் எம் தெய்வம் அண்ணல் அம்பேத்கார் செய்த மாபெரும் தவறு என்று என் எண்ணத்தில் உதிப்பதெல்லாம் ஏன் அவர் தாழ்த்தப்பட்டவர்கலை தனிமதமாக அங்கீகரிக்கப்போராடாமல் ஒரு சிருபான்மை மதத்தினை தழுவினார் என்பது தான்...ஆம் அன்று எம் கடவுள் அவ்வாறு செய்திருந்தாரானால் காந்தியின் பிராமின கொள்கை பகல்கனவாய் போயிருக்கும் அப்போதே..இன்று உயர்சாதி என்று உன்னால் இந்துதுவம் நிச்சயம் பேசமுடியாமல் போயிருக்கும்... ஏன் என்று கேள்வி கேட்டதனால் எம் தலைவன் இம்மானுவேல் சேகரன் மரணிக்கப்பட்டான் ஒரு விதையாக... பார்த்தீர்களா இன்று எதற்கு என்று கேள்வி கேட்க எததனை மரக்கிளைகல் என்று ... அத்தனையும் விதையாகும் போது சமூகமாற்றம் என்பது எங்கே போய்விடும் சொந்தங்களே!!! விடியலை நோக்கிகாத்திராமல் இருளைக்கூட விளக்குகளால் ஒளிரச்செய்யலாம் என்பதை மனதில் கொண்டு நம் இந்த சுயமரியாதை போராட்டத்தில் பயனித்தோமானால் முடிவு என்பது நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் வெற்றி!!! வெற்றி!!! வெற்றி!! மட்டுமே மிஞ்சும். மதமும் அழிவும் வளர்சியென்பது ஒரு பக்கம் இருக்கட்டும் மதம் என்னும் மாயையில் சிக்கி ஒரு சாதியே அழிந்துகொண்டிருக்கிறது கேள்வி கேட்க எவனும் இன்றி இந்து மதத்தில் தான் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது என்று கிருஸ்துவனாகலாம் என்றால் அதற்கும் தடை போட்டனர் அதிகார இந்து வர்க்கத்தினர் மதமாற்ற தடை சட்டம் ஒன்றை...தடைகள் பல கடந்து மாறினால் கிருஸ்துவனாய் அங்கேயும் சாதி சான்றிதலில் பெயர் கிருஸ்டியான் பள்ளனாம் பட்டியல் இனத்தில் இருந்து நீக்கி பள்ளனை பிற்படுத்த்ப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பார்களாம் ஏற்றுக்கொள்ளுமா அதிகார இந்து வர்க்கம் எஸ்சி பிஸீ ஆனாலும் பள்ளன் பள்ளன்தான்டா என்று அங்கீகரிக்க மறுக்கிறது அங்கேயும் விழி பிதுங்குகின்றனர் என் சொந்தங்கள்... அது அவ்வாறு இருக்க இஸ்லாமில் போனால் நீ மதிக்கப்படுவாய் என்று சிலரின் பேச்சு கேட்டு அங்கே போனால் அங்கே என் சொந்தங்க்ளுக்கு அவர்கள் இடும் பெயர் இஸ்லாம் லெப்பை (தினக்கூலிகள்)அது மட்டுமா இந்த சமூகம் அவர்களுக்கு அளிக்கும் அடுத்த பெயர் பஞ்சத்துக்கு மாறுன பரதேசிகள் (கேட்டால் பணத்திற்காக மாறியவர்களாம்) அது உன்மையாவும் கூட இருக்கலாம் அவர்களின் வறுமை மாற தூன்டி இருக்கலாம்...ஏன் நம் சமூக மக்களுக்கு இந்த நிலை??? இதற்கு மாற்று வழிதான் என்ன? நம் மக்கள் மற்ற மதத்திற்கு மாறுவதற்கும் இஸ்லாமை தழுவுவதற்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு ஓர் பள்ளன் கிருஸ்துவன் ஆனால் அரசின் பதிவேட்டில் மட்டுமே அவன் பிற்படுத்தப்பட்டவன் ஆகிறான் சாதி என்றுவரும் போது பள்ளன் தேவேந்திரன் என்ற உனர்வோடு அவனது பின் சந்ததியினறும் இருப்பார்கள் இதில் மாற்று கருத்து இல்லை... ஆனால் இஸ்லாமிற்கு செல்லும் ஒரு தேவேந்திரன் இஸ்லாம் லெப்பை ஆகிறான் அவனது எதிர்கால சந்ததி தான் ஒரு தேவேந்திரன் என்ற உணர்வு துளியும் இன்றி முழுக்க இஸ்லாமியன் ஆகிறான் அங்கே தேவேந்திர குலம் மறைமுகமாக அழிக்கப்ப்டுகிறது என்பதை அறிந்தும் இன்றுவரை யாரும் தடுக்க முயற்சிக்கவில்லையே ஏன் என்பது தான் நான் உங்களிடம் கேட்கும் கேள்வி??? ஏதாவது அரசின் கோரிக்கைகள் நிரைவேரவேண்டுமானால் நம் தலைவர்களின் அறிக்கையில் முதலில் வருவது செய்து தரவில்லை என்றால் என் இன மக்கள் ஒரு லட்சம் பேரை இஸ்லாமிற்கு மாற்றிவிடுவேன் என்பது தான் ஏன் அவர்கள் அங்கே போனால் நம் சமூகம் அழிக்கப்படுகிறது என்பதை ஏன் சிந்திக்கவில்லை??? நீங்கள் சிந்தியுங்கள்... எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல இந்த பிரபு.ரா.வசந்த்ராம் ஆனால் நான் சார்ந்த சமூகம் உயர்தத்த்ப்ப்டும்போது சந்தோஸப்படும் என்னால் என் சமூகம் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க இயலவில்லை அதன் தாக்கம் தான் இந்த என் வரிகள்... அரசு எடுக்கப்போகும் சாதிவாரி கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்ட பள்ளன் பிற்ப்டுத்தப்பட்ட பள்ளனின் கூட்டுத்தொகை பரையனை விட குரைவாகத்தான் வரும் நிச்சயம் ஏன் என்றால் பரையனில் இஸ்லாமை தழுவியவர்கள் குறைவு நம் சமூகத்தில் மட்டும் தான் ஊர் மொத்தமுமாக குடும்பம் குடும்பமாக இஸ்லாமிற்கு மாறிய கொடுமை அரங்கேரி இருக்கிறது...நெஞ்சு பொருக்கவில்லை இந்த நிலைகெட்ட சமூகத்தை நினைத்து.. எண்ணின் தனிப்பட்ட கருத்து மதமாற்றம் என்பது இறுதி தீர்வு அல்ல என்பதுதான்...ஆம் மதமாற்றம் என்பது தீர்வாக அமையுமானால் அன்று நம் கடவுள் அண்ணல் அம்பேத்கார் மதம் மாறிய போதே இந்த ஏற்றத்தாழ்விற்கு தீர்வு கிடைத்திருக்க வேண்டுமே ஏன் கிடைக்கவில்லை பின் ஏன் இன்னும் அவர் விட்டுச்சென்ற போராட்டத்தை நாம் தொடர்ந்துகொண்டிருக்கிரோம்... பதில் இல்லையே சொந்தங்களே... நம்மின் இந்த ஏற்றத்தாழ்வு போராட்டத்திற்கும் கருப்பர்களின் நிற வெறிக்கெதிரான போராட்டத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு ஆம் அவர்கள் நம்மினும் கொடுமைகளை அனுபவித்தவர்கள் என்பதை நாம் அறிவோம் (ஏன் கருப்பன் என்ற காரணத்தால் வெள்ளையனின் காலால் மிதிவாங்கியவர் தானே இன்று இந்திய பிதா என்று போற்றப்படும் காந்தியும்) இன்று உலக அரங்கில் கருப்பர்களின் நிலையை கொஞ்சம் நினைத்துப்பாருங்கல் எந்த துறையில் அவர்கள் சாதிக்கவில்லை கருப்பர்களை அன்று ஏற்றுகொள்ள மறுத்த உலகம் இன்று அவர்களின் சாதனைகளை பார்த்து அரவனைத்துக்கொள்ள ஆசைப்படுகிறது...எப்படி வந்தது இந்த வெற்றி..அவர்களின் தன்நம்பிக்கையின் பிரதிபலிப்பு!!! அவர்களின் கூட்டுமுயற்சி!!!மற்றும்அவர்களுக்குகிடைத்த பொக்கிக்ஷத்தலமைத்துவம்!!! நம்மைபோல் அவர்களின் மனது அலைபாயவில்லை இங்கிருந்து அங்கு சென்றால் மாறிவிடுமா??? மாற்றம் வருமா??? என்று... ஏனென்றால் அவர்ளின் கருப்பு நிறத்தைமாற்றி அவர்களால் வெள்ளை அடித்துக்கொள்ள இயலவில்லை கருப்பர்களாகிய அவர்கள் கருப்பர்களாகத்தான் வெற்றிகொடி நாட்டினார்கள் அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான் ஓற்றுமையுடன் கூடிய ஒருமனதான நிலைப்பாடு அதுதான் அவர்களை வெற்றிகொள்ள வைத்தது. இதைததான் அன்றே அண்ணல் சொன்னார் கற்பி!!! ஒன்று சேர்!!! புரட்சி செய்!! என்று... பாமரர்கள் நிறைந்த இந்த தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு அன்று அண்ணல் அம்பேத்கார் இட்டுச்சென்ற உரம் தான் இன்று ஏன்? எதற்கு? என்று எம்மை கேள்வி கொள்ளச்செய்துள்ளது என்று நாம் இந்த சமூகத்தைபார்த்து கேள்வி கேட்கத்தொடங்கி விட்டோமோ அன்றே அமைக்கத்தொடங்கிவிட்டோம் வெற்றிக்கான அடித்தளத்தை.. இனி அன்னாரின் வழியிலே நம் அடுத்த நோக்கம் சிந்தனைசெய்!!! செயல்படு!!! ஆட்சிசெய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக