வியாழன், 26 ஆகஸ்ட், 2010
இம்மானுவேல் சேகரன் பெயரை சூட்ட வலியுறுத்தி டாக்டர்.க.கிருஷ்ணசாமி தலைமையில் மதுரையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
தியாகி இம்மானுவேல் சேகரனின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று கடந்த மாதம் திருச்சியில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மதுரை மேலமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது
முன்னதாக டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் பெயரை சூட்டக்கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. இமானுவேல் சேகரனை பொறுத்தவரை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு சமூக சீர்திருத்த போராளியாக விளங்கினார்.
இதனால் அவரது மறைவிற்கு பிறகு சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், பெரியார் ஆகியோர் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். அவருடைய புகழுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். எனவே இந்திய அரசும், தமிழக அரசும் இமானுவேல் சேகரனார் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக