செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010
உமாசங்கர் மீதான ஒடுக்குமுறைக்கு காரணம் சமூகத்தின் பலவீனமே!
உயிரான சமூக உறவுகளுக்கும், மக்கள் நேசிப்பாளர்களுக்கும்…
1995-ம் ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் மாதம் வரை மதுரையில் திரு. உமாசங்கர் அவர்கள் கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த போது, அப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த செல்வ கணபதிக்கு எதிராக சுடுகாட்டு கொட்டகை ஊழல் வழக்கை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது திரு. உமாசங்கரின் நேர்மையை பாராட்டியவர்களில் கருணாநிதியும் ஒருவர். இதனால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் 1995ம் ஆண்டு அக்டோபரில் திரு. உமாசங்கர் தெற்காசிய இயக்குனராக பணிமாற்றம் செய்யப்ட்டு பழிவாங்கப்பட்டார். இதே 1995ம் ஆண்டில் தான் கொடியன்குளம் அடகுமுறையை ஜெயலலிதா அரசு தேவேந்திரர்கள் மீது ஏவி விட்டது. கொடியன்குளம் கலவரத்தால் கொதித்தெழுந்த தென்மாவட்ட தேவேந்திரர்கள் அ.தி.மு.க மீது வெறுப்படைந்து 1996ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க வை ஆதரித்து வாக்களித்தனர்.
பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க திரு. உமாசங்கர் அவர்களை அக்டோபர், 1999ல் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமித்தது. திரு. உமா சங்கர் அவர்களுக்கு தகவல் தொழில் நுட்பத்தில் இருந்த அதீத திறமையால் நாடே வியக்கும் வண்ணம் முதன் முதலில் திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தை கணிணி மயப்படுத்தி அரசிற்கு பெருமை சேர்த்தார். பல்வேறு பதவிகளுக்குப் பின்னர் 2006ம் ஆண்டு மே மாதம் எல்காட் நிறுவனத்தின் நிரவாக இயக்குனராக பணியமர்ப்படுகிறார். அரசுக்கு சொந்தமான எல்காட் நிறுவனம், தனியார் நிறுவனமான நெட் என்பதுடன் கூட்டு நேர்ந்து எல்நெட் எனும் கூட்டு நிறுவனம் உருவாக்கப்படுகிறது. இதில் எல்காட் நிறுவனத்தின் பங்கு 26%, தனியார் நிறுவனமான நெட் நிறுவனத்தின் பங்கு 24% மீதம் பொதுமக்களுடையது. கூட்டு நிறுவனமான எல்நெட்டில் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டுமானால் அரசு நிறுவனமான எல்காட் நிறுவனத்தில் ஒப்புதல் வாங்கவேண்டும்.
ஆனால் திரு. உமாசங்கர் அவர்கள் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுவதற்கு முன்பு தனியாருக்குச் சொந்தமான நெட் நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராச செட்டியார் எல்காட் நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமலே எல்நெட் நிறுவனத்தின் சொத்தைக்காட்டி எல்நெட்டில் பங்குதாரராக இருக்கும் தமது மனைவி பெயரில் தியாகராச செட்டியார் வங்கியில் 81 கோடி கடன் வாங்கியிருப்பதை கண்டுபிடித்து அதை பிரச்சனையாக்கியதோடு மட்டுமல்லாமல் சி.பி. விசாரணை நடத்த வலியுறுத்தி தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதுகிறார். பின்னர் எல்நெட் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த தியாகராச செட்டியாரின் மனைவியை பங்குதாரரில் இருந்து விடுவிக்க சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி சுற்றரிக்கை அனுப்பப்படுகிறது. உடனே எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து உமாசங்கர் நீக்கப்பட்டு TIIC க்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார்.
இந்த நேரத்தில் தான் கலாநிதிமாறன் சகோதர்களுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் இடையில் விரிசல் ஏற்படுகிறது. மாறன் சகோதரர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தினகரன் நாழிதழ் அடுத்த முதல்வர் பதவிக்கு யாருக்கு ஆதரவு அதிகம் (ஸ்டாலின்-மு.க.அழகிரி) என வெளியிட்ட கருத்துகணிப்பில் மு.க.அழகிரிக்கு மிகக் குறைந்த சதவீதம் ஆதரவு என கருத்து வெளியிட்ட போது மதுரை தினகரன் அலுவலகம் அடித்து, நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதில் அப்பாவி தொழிலாளர்கள் மூன்று பேர் உயிர் இழந்தனர். அந்த நேரத்தில் முதல்வர் கருணாநிதி திரு. உமாசங்கர் அவர்களை தொலைபேசியில் அழைத்துப்பேசி பின்னர் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு மாறன் சகோதர்களுக்கு எதிராக அரசு கேபிள் டி.வியை வளர்த்தெடுக்க எண்ணுகிறார்.
பின்னர் அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை பலப்படுத்த திரு. உமாசங்கர் எடுத்த முயற்சியில் மாறன் சகோதரர்கள் பெரும் தடை ஏற்படுத்தி இடஞ்சல் செய்கிறார்கள். இதனால் மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சுமங்கலி கேபிள் விசனை தேசியமயமாக்க பரிந்துரை செய்யப்படுகிறது. பின்னர் The Preventive Detention Laws and for Action Under the Penal Laws- எனும் சட்டத்தின் கீழ் பெரும் முதலாளியான மாறன் சகோதர்களை கைது செய்ய துணிச்சலாக பரிந்துரையும் செய்கிறார்.
பின்னர் சிறு இடைவெளி காலத்திற்கு பின்பு கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் சகோதரர்களுக்கும் ஏற்பட்ட இணக்கமான உறவால் திரு. உமாசங்கர் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறு சேமிப்புத்துறை ஆணையராக பணிமாற்றம் செய்யப்படுகிறார். இவ்வேளையில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக கொண்டுவந்த அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கிடப்பிலே போடப்படுகிறது. இருப்பினும் மாறன் சகோதரர்களின் அடங்காத கோபம் தொடர்ந்து திரு. உமாசங்கர் அவர்களை பழிவாங்க துடித்து திரு உமாசங்கர் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது துணைவியார் சூர்யகலாவுக்கு Tessolve எனும் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கியிருப்பதாக குற்றம் சாட்டி தொல்லைப்படுத்தினார். பின்னர் வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்திருப்பதாகவும் குற்றம் சாட்டி சோதனை எனும் பெயரில் திரு. உமாசங்கர் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இறுதியில் திரு. உமாசங்கர் சாதி சான்றிதழில் முறையீடு செய்துள்ளார் என குற்றம் சாட்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், என்பது தான் தமிழர் விடுதலைப்புலிகளின் அறப்போராட்டத்திற்கான சாரம்.
கடந்த நாட்களில் மதுரையில் நடந்த SC/ST அரசு ஊழியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் உமாசங்கர் எனும் IAS அதிகாரிக்கே இந்த நிலை என்றால் நமக்கும் ஆபத்து நேரிட வாய்ப்பு உண்டு. ஆகவே நாம் போராட அணியமாக வேண்டும் எனச் சொல்லி உயர் அதிகாரிக்கே என மிகைப்படுத்தி, சமூக பலவீனம் தான் இதற்கெல்லாம் காரணம் எனும் யதார்த்த உண்மையை பின்தள்ளுகின்றனர். சமூகம் பலமாக இருந்தால் திரு. உமாசங்கர் அவர்களை பணி இடைநீக்கம் செய்வதற்கும், தேவேந்திரனை சீண்டிப்பார்ப்பதற்கும் நிஜமாகவே தி.மு.க அரசு அஞ்சியிருக்கும்.
நம்மில் உயர் அதிகாரி ஆன பின்போ, அல்லது அரசு பதவிகளுக்கு சென்ற பின்பும் கூட நாம் ஒவ்வொருவரும் தேவேந்திரகுல வேளாளர் சாதியின் ஒரு அங்கம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இன்று பெரும் சவாலாக விளங்கும் சாதியச் சமூகத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் தான் சார்ந்த சாதியின் பலம், பலவீனம் தான் தனிநபரின் பாதுகாப்பையும், ஆபத்தையும் கூட தீர்மானிக்கும்.
நாம் சார்ந்த தேவேந்திரர் சமூகம் இன்று பலவீனமாக இருப்பதுதான் உத்தபுரம் வேவேந்திரர் மீதான அடக்குமுறையிலிருந்து, திரு. உமாசங்கர் IAS மீதான ஒடுக்குமுறைக்கு காரணம். ஆகவே சமூகத்தை பலப்படுத்த வேண்டும் எனும் கடமை உணர்ந்து ஒட்டுமொத்த தேவேந்திர மக்களையும் முதலில் சமூகமாக மாற்றவேண்டும். அதற்கான வேலைத் திட்டத்தோடு பொதுவாழ்வில் களம் இறங்க வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் செய்கின்ற சமூக பணிகளெல்லாம் சமூகத்திற்கு நன்மையே எனக்கருதாமல் நாம் சமுக எதார்த்தத்தை புரிந்த கொண்டு செய்யவேண்டிய வேலையெதுவோ அதை மட்டும் தான் சமூக நம்மை எனச் சொல்லி அறப்போராட்டத்திற்கு அனைவரும் வாருங்கள். ஆதரவு தாருங்கள் என அறைக்கூவல் இட்டு அழைக்கின்றோம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக