ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்!

ஆறிடுமா இல்லை அணைந்திடுமா உங்கள் மேலிட்ட தீ எப்படி எரிந்து போயிருக்கும் உங்கள் உடல்கள் அடங்கக்கூடியவையா உங்கள் குரல்கள் மறந்துவிடுமா உங்கள் நினைவுகள்……. ஆண்டுகள் பல ஆனாலும் சாதியின் கொடுங்கரங்கள் வர்க்கத்தோடு பிண்ணிப்பிணைந்து படர்ந்து கொண்டிருக்கின்றன இல்லை விடமாட்டோம் அவை அழிய விடமாட்டோம் தீயின் நாக்குகள் உங்களின் மேல் சுட்டதை விட இன்னும் அதிகமாய் எங்களுள் கனன்று கொண்டிருக்கிறது வெண்மணி தியாகிகளே உங்கள் நினைவுகளை சுமந்து வர்க்கப்போரை வாளாய் ஏந்தி களத்தில் நிற்கிறோம் முதலாளித்துவத்தை, நிலப்பிரபுத்துவத்தை பார்ப்பனீயத்தை, மறுகாலனியை வீழ்த்தாது வீழாது எங்கள் தலை. பலியான வெண்மணித் தியாகிகள் 1. சுந்தரம் (45) 2. சரோஜா(12) 3. மாதாம்பாள்(25) 4. தங்கையன் (5) 5. பாப்பா (35) 6. சந்திரா (12) 7. ஆசைத் தம்பி (10) 8. வாசுகி (3) 9. சின்னப்பிள்ளை (28) 10. கருணாநிதி(12) 11. வாசுகி (5) 12. குஞ்சம்பாள் (35) 13. பூமயில் (16) 14. கருப்பாயி (35) 15. ராஞ்சியம்மாள் (16) 16. தாமோதரன் (1) 17. ஜெயம் (10) 18. கனகம்மாள் (25) 19. ராஜேந்திரன் (7) 20. சுப்பன் (70) 21. குப்பம்மாள் (35) 22. பாக்கியம் (35) 23. ஜோதி (10) 24. ரத்தினம் (35) 25. குருசாமி (15) 26. நடராசன் (5) 27. வீரம்மாள் (25) 28. பட்டு (46) 29. சண்முகம் (13) 30. முருகன் (40) 31. ஆச்சியம்மாள் (30) 32. நடராஜன் (10) 33. ஜெயம் (6) 34. செல்வி (3) 35. கருப்பாயி (50) 36. சேது (26) 37. நடராசன் (6) 38. அஞ்சலை (45) 39. ஆண்டாள் (20) 40. சீனிவாசன் (40) 41. காவிரி (50) 42. வேதவள்ளி (10) 43. குணசேகரன் (1) 44. ராணி (4) வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக