ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் -ஒரு நினைவு குறிப்பு

http://www.vinavu.com/2010/07/17/uma-shankar-ias/ நேற்று வினவின் இந்த போஸ்டை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன், தமிழ்மண நட்சத்திர வாரத்தில் கூட உமாசங்கரை பற்றி எழுதவேண்டும் என்று இருந்தேன் ஆனால் முடியாமல் போய்விட்டது. "உமாசங்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டார் என்று தமிழக அரசால் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு ஆளானார். அவர் மீது நடவடிக்கையும், விசாரணையும் ஏவிவிடப்பட்டது. தற்போது இதற்கு எதிராக உமாசங்கர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கிறார். அதில்தான் அரசு கேபிள் டி.விக்காக தான் பரிந்துரைத்த விடயங்களுக்காக பழி வாங்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்." இதுதான் உமா சங்கருக்கு பிரச்சினை. உமாசங்கர் அதிமுக ஆட்சியின் சுடுகாட்டு கொட்டகை ஊழலை அம்பலபடுத்தியவர், இதற்காகவே பந்தாடப்பட்டவர். பின் ஆட்சி மாறியதும் கலைஞர் தன் சொந்த ஊரான திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமித்து அழகு பார்த்தார், அதுவரை வேறு ஏதோ டம்மி போஸ்டிங்கில் இருந்தார். இவரை போல் எங்கள் ஊர் மக்கள் இன்று வரை ஒரு கலெக்டரை பார்த்தது இல்லை. தன்னோட செயல்பாடுகளால் திருவாரூர் மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். திருவாரூரில் ஒரு படம் 10 நாள் ஓடியது என்றால் அது மற்ற ஊர்களில் சூப்பர் டூப்பர் ஹிட் என்று அர்த்தம், அங்கிருக்கும் தைலமை, நடேஷ்,சோழா தியேட்டர்களில் அப்பொழுது அவர்கள் படம் ரிலீஸ் ஆகும் பொழுது வைத்ததுதான் விலை, அதில் ஒரு வசதி எல்லா டிக்கெட்டும் ஒரே விலைதான். எங்கு இடம் கிடைக்குதோ அங்கு சென்று உட்காந்துவிடலாம். விலை அதிகமாக விற்பதை நிறுத்த சொல்லி பார்த்தார் உமாசங்கர், தியேட்டர் அதிபர்கள் கேட்கவில்லை, ஒரு நாள் விஜயகாந்த் படம் ரிலீஸ் என்று நினைக்கிறேன்.. மாறுவேடத்தில் சென்றார் டிக்கெட் வாங்கிய கையோடு விலை அதிகம் விற்ற குற்றத்துக்காக தைலமை தியேட்டரை பூட்டி சீல் வைத்தார். திருவாரூரே அதிர்ந்தது புதுபடம் ரிலீஸின் பொழுது தியேட்டரை சீல் வைப்பதா என்றும் அனைத்து தியேட்டர் நிர்வாகிகளும் சேர்ந்து தியேட்டரை மூடிவிட்டு ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டினார்கள், உமாசங்கரை மாற்று என்று. அடுத்த சில தினங்களில் உமா சங்கரை மாத்த கூடாது என்று சங்கருக்கு ஆதரவாக போஸ்டர்கள். குடவாசல் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் நமச்சிவாயம், குடவாசலில் வசிப்பவர் அங்கேயே அவருடைய கிளினிக் வெச்சிருந்தார், அருகில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரிக்கு கையெழுத்து போட போவதோடு சரி, யாரையும் கவனிப்பது இல்லை புகார் சென்றது உமா சங்கருக்கு, ஒரு நாள் காலை அய்யா வயிறு வலி என்று கைலி துண்டோடு அரசு ஆஸ்பத்திரியில் நின்றார், டாக்டர் அங்கு இல்லை, டாக்டர் வீட்டுக்கு சென்று கூப்பிட்டார் டாக்டர் இங்கேயே வைத்தியம் பார்த்துக்க சொன்னார், அதே இடத்தில் டாக்டருக்கு சஸ்பெண்ட் உத்தரவு வழக்கிவிட்டு முதல்வன் அர்ஜூன் ஸ்டைலில் சென்றார் கைலி துண்டோடு வந்திருந்த உமாசங்கர். இப்படி மாறுவேடத்தில் பல இடங்களுக்கு சென்று திருவாரூர் மக்களுக்கு பல நன்மைகள் செய்தார், திருவாரூர் மக்களுக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று வைக்கோலை ரோட்டில் காயப்போடுவது, போகும் வரும் பஸ் அதில் ஏறி போர் அடித்த மாதிரி ஆகிடும் ஆகவே அப்படி போடுவார்கள், பல பஸ்,லாரிகளில் வைக்கோல் சிக்கி பாதி வழியில் நின்று விடுவதாலும், அதனால் விபத்துகள் ஏற்பட்டதாலும் ரோட்டில் இனி அப்படி ஏதும் காயப்போடக்கூடாது என்று அப்படி போட்டால் அபராதம் என்று ரூல்ஸ் போட்டார். பெரும்பான்மையானோர் கேட்டார்கள். அது உமாசங்கர் என்ற ஒரு நல்லவர் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக. உமாசங்கர் கலெக்ட்டராக இருந்த சமயம் திருவாரூர் பகுதியில் பல நல திட்டங்களை செய்தார் அவை அனைத்தும் முதல்வன் பட அர்ஜுன் செயல்பாடுகள் மாதிரியே இருக்கும்(படம் அப்பொழுது ரிலீஸ் ஆகவில்லை), கலெக்டருக்கு தனி அலுவலகம் வர ஏற்பாடு செய்ததும் அவர்தான் என்று நினைவு அதை முன் மாதிரியாக வைத்துதான் அனைத்து கலெக்ட்டர் அலுவலங்களும் மாறின. ஒவ்வொரு வாரமும் மக்கள் குறை கேட்கும் நாள், அடுத்த ஒருவாரத்துக்குள் அந்த குறை நிறைவேற்றப்படும். யாராலும் எளிதில் சந்திக்ககூடிய கலெக்டராக இருந்தார். 12வது வகுப்பிலும் கல்லூரியிலும் என்றோ செத்துபோன போர்ட்டான், பேசிக் கம்பியூட்டர் பாட திட்டங்களை மாற்றனும் என்றும் கோரிக்கை வைத்தார். ஏழை மாணவர்களுக்கு மேற்கல்வி படிக்க பல சலுகைகள் வாங்கி தந்தார். அன்றைய தேதியில் ஏதும் ஒரு குறை என்றால் உமாசங்கரிடம் மனு கொடுத்தால் போதும் அது நிறைவேறிவிடும் என்று மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார். திருவாரூரில் இருந்து மாற்றல் ஆக கூடாது என்று மக்கள் சார்பாக பல போராட்டங்கள் நடந்தது. உமாசங்கருக்கு அன்று அ.தி.மு.க ஊழலுக்கு பதில் இன்று தி.மு.கவின் ஊழல்,ஆட்சிதான் வேற ஆனால் நல்ல மனிதரும் ஊழலும் அப்படியேதான் இருக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அதில் இருந்து மீண்டுவரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக