ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

உமாசங்கரை பழிவாங்கிய அரசு

.
.


சுடுகாட்டில ஊழல்? - அமைச்சராக்கி அழகு பார்ப்போம்..
ஸ்பெக்ரம் ஊழல்? - ஊ..ஊ..சந்துமுனையில சமரசம்..

கணவனுக்கு தண்டனையா? - ’கல்’இனத்தை துடைத்து அழிப்போம்..
காவல் தெய்வங்களை - கண்மூடி காதலிப்போம்..

தமிழக மீனவர்களா? - சரி..சரி.. தந்தி அடி..
அறிவு துளிர்க்கிறதா? - டாஸ்மார்க்கை கையிலெடு..

ஆங்கிலத்தில் தடுமாற்றம் - அடடா..சட்டம் மாற்றம்..
கேள்விகள் பிறக்கிறதா? - கடற்கரையில் படுத்துவிடு..

முதுமையில் சிகிச்சை? - முடிந்தவரை அனுப்பிவிடு..
முக்கல், முனங்கள் வந்தால்..
முக்காடு போட்டுவிடு..

தனிமனிதச்சுதந்திரமா? - தக்காளி போட்டுத் தள்ளு..
ஊழலுக்கு எதிரியா? - வீடு கட்டி போட்டுத்தள்ளு..

மனதில கேள்விகளா? - மாதர்(?) குஷ்புவை.. மகிழ்வுடன் மேடையேற்று..
ஊழலுக்கு இவன் தடையா? - குந்த விட்டு குண்%$#டி அடி..

கரம்சந்த் காந்தி.. இந்திரா காந்தி..
ராஜீவ் காந்தி.. சோனியா காந்தி..
ராகுல் காந்தி.. பிரியங்கா காந்தி(!)..
மிருகத்தை பாதுகாக்கும் ,அய்யோ.. நம்ம மேனகா காந்தி..

அய்யா காந்திகளும்..அம்மா காந்திகளும்..
உடன்பிறந்த மற்றும் பிறவா சகோதரிகளும்..
கருப்பு எம்.ஜி.ஆர்.. காடுவெட்டி மாமேதை..
வெள்ளை வேட்டி கட்டி..வீறாப்பா போராடும்..
மனிதர்களை மிருகமாக்கி, மந்தைகளாய்..... ஆக்கும் வரை..
ஓயாது பாடுபடும் ஓங்காரச்செல்லங்களே..

கும்பல்கள் கேட்கட்டுமே.. கும்மாளம் அடிக்கட்டுமே..
கூச்சல்கள் பல கண்டோம்.. குடும்பம்தான் எங்கள் (தொலை)நோக்கு..

வாழ்க ஜனநாயகம்.. வளர்க வாழும் கடவுள்கள்..
வாழையடி வாழையாக.. வளைந்தைபடி தோள் கொடுப்போம்..


டிஸ்கி :
ஊழலைய அம்பலமாக்கிய உமா சங்கருக்கு, பல தடைகள் வந்தாலும்..
உண்மை ஒரு நாள் வெளிவரும்..
அதுவரை மனிதனாய்... தோள் கொடுக்க விரும்பும்.. மனிதர்களே..
ஒன்றுபடுங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக