ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

தமிழகம் பரமக்குடி துப்பாக்கிச்சூடு: அரசுக்கு விசாரணைக் குழு பரிந்துரை

மதுரை,அக். 23: பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் ஒப்படைக்குமாறு தமிழக அரசுக்கு பொது விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.அக்குழு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை: தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நியமிக்கப்படாத சூழ்நிலையில், பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறலின் தேசிய அளவிலான முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், பாரபட்சமற்ற முறையான விசாரணைக்காகவும், இவ்வழக்கை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் 16 வகையான பரிந்துரைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக