1957 பொதுத்தேர்தலில் முத்துராமலிங்கத்தேவர், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத்தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டசபைத்தொகுதியிலும் போட்டி இட்டார். இரண்டிலும் அவர் வென்று, சட்டசபை பதவியை ராஜினாமா செய்துவிட்டார். முந்தைய தேர்தல்களை விட அம்முறை அவரின் வாக்கு வித்தியாசம் பெருமளவில் குறைந்திருந்தது. அதற்குக் காரணம், தலித் மக்கள் அம்முறை தேவருக்கு வாக்களிக்காமல், காங்கிரசுக்கு வாக்களித்திருந்தனர். இதனால் கோபம் கொண்ட தேவரின் ஆதரவாளர்கள், தலித் கிராமங்களில் கொலை,கற்பழிப்பு, தீயிடல், குடிதண்ணீர்க்கிணறுகளில் மலத்தைக் கொட்டுதல் ஆகிய ஆக்கப்பணிகளைச் செய்தனர். சில இடங்களில் திருப்பித்தாக்குதலும் நடந்தது. இக்கலவரத்தை நிறுத்திடவே கலெக்டரால் சமாதானக் கூட்டம் கூட்டப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக