காந்தி சொன்ன காங்கிரசின் நிர்மாணத்திட்டப்படி கதர் சோப், கதர் துணி வியாபாரம் போன்ற புரட்சிகர நடவடிக்கைகளிலும் அவர் அரும்பணி ஆற்றின மாதிரி தெரியவில்லை. முருகனைப்பற்றியும், இந்து மதம் பற்றியும் ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்தார்.. அம்மட்டே...
பொருளாதார சுதந்திரத்தினை நாடி தூய தேச பக்தர்களான பகத்சிங் போன்றோரும், புன்னபுரா,வயலார், தெலங்கானா உழவர்களும் தீவிரமாய்ப் போராடியது சுதந்திரப்போர். அதே நேரத்தில் கலாச்சார அடக்கு முறைகளில் சிக்குண்ட மக்களினை மீட்டெடுக்க சுயமரியாதையை ஊட்டிய அம்பேத்கர்,பெரியார் போன்றோர் அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தியதும் சுதந்திரப்போருக்கு இணையான இயக்கச்செயல்களாகும். இவ்விரண்டும் இல்லாமல், புரோக்கர் வேலை பார்க்கும் காங்கிரசின் காட்டிக்கொடுக்கும் இயக்கத்திற்கும் அன்று இடம் இருந்தது. இந்தக் காட்டிக்கொடுக்கும் கூட்டத்தின் தொங்கு சதையாகத்தான் தேவர் இருந்தாரே ஒழிய உண்மை சுதந்திரப்போராளிகள் பக்கம் நின்றாரில்லை. காங்கிரசிலும், அவர் இருந்த காலகட்டத்தில் வெகுஜன மக்கள் இயக்கம் ஏதும் இல்லை. எம் எல் ஏ மந்திரி பதவி வகித்து சுகம் காணும் தலைமுறையின் காங்கிரசுதான் அப்போது இருந்தது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக