ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 22 அக்டோபர், 2011

மீண்டெழும் பாண்டியர் வரலாறு.......செந்தில் மள்ளர்


”மள்ளர் குலமே மன்னர் குலமே”
”தேவேந்திரர் குலமே மூவேந்தர் குலமே”


தமிழினத்தின் தலைக்குடியாக்கிய தேவேந்திரக்குல வேளாளர்கள் மருத நிலத்தின் வேந்தன் வழியினர்,வேளாண் நாகரீக வாழ்வில் சிறந்தோங்கிப் போர்க்களமும் நெற்க்களமும் கண்ட மள்ளர் குலத்தோர், ஏரையும் போரையும் இணைப்பிரியாதுநடத்திய இம்மள்ளர்கள் உலகத்தோருக்கு உணவளிக்கும் உயர்ந்த பண்பினைக் கொண்ட உழவர் பெருங்குடி மக்கள், இந்நாவலம் முழுவதிலும் கோலோச்சிய மூவேந்தர் மரபின் நல்லாட்ச்சியினர், நானிலத்தோருக்கும் நல்லதோர் வாழ்வியலைக் கற்றுக்கொடுத்த நன் மக்கள், மருத நிலத்தில் அரசையும் ஆட்சி முறையையும் தோற்றுவித்த மள்ளர்கள் உலகிற்க்கு அரசியலைக் கற்றுக்கொடுத்த முன்னோடிகள் ,
வரலாற்றுச் சிறப்பும் பண்பாட்டுப் பெருமையும் கொண்ட மருத நிலக் குடிகளின் இலக்கிய பெயரான மள்ளர் தம் குலப்பட்டங்களான குடும்பன், மூப்பன் காலாடி, பண்ணாடி,


வாய்க்காரன், வாதிரியான், -இவர்தம் குலப்பெயரான் தேவேந்திரக்குல வேளாளர்-இவர்தம் குடிப்பெயரான சேர, சோழ, பாண்டிய ஆகிய அடையாளங்களை வந்தேறிக் கூட்டத்திரனர்
( பார்ப்பனர் ,முதலியார், ரெட்டி, நாயுடு, நாயக்கர், ஒக்கலிக்கர், கவுடா, ,ராஜுக்கள், செட்டிகள், ,மார்வாடி, மலையாளிகள், இன்னப்பிற ) மூடி மறைத்துவிட்டு வலிமை பொருந்திய யானையை அங்குசத்தால் அடக்கி ஆள்வதைப்போல வலிமைப் பொருந்திய மள்ளர் குல மக்களை அரிசனன் , ஆதி திராவிடன், தாழ்த்தப்பட்டவன், தலித், எஸ்.சி என்று பலவாறு கூறி இழிவுப் படுத்தி ஒரு போர்க்குணமிக்க சமூகத்தை இந்திய-திராவிட வந்தேறிகள் உளவியல் அடிப்படையில் வீழ்த்தி அடிமை சிந்தனைக்குள் ஆட்ப்படுத்தி உள்ளனர்.

கடந்த சில நூற்றாண்டுகளாக மள்ளர் குல மக்களை ஊமைகளாக்கி வந்தேறிகள் நாட்டாமை செய்கிறார்கள் நம் மண்ணிலேயே.

மண்ணின் ஆதிக்குடி மக்களாகிய மள்ளர்களை அடிமை சிந்தனையிலிருந்து விடுவித்து ஆளுமை சிந்தனையை ஊட்டி ஆண்ட குடி மீண்டும் தமிழ் மண்ணை ஆள வேண்டும், என்னும் லட்சிய நோக்கில் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க மொழிப்பேரறிஞர் ஞா. தேவநேயப்பாவானர் , வரலாற்றுப் பேரறிஞர் இரா. தேவ ஆசிர்வாதம், பேராசிரியர்.குருசாமி சித்தர், பேராசிரியர் க. நெடுஞ்செழியன், ஆகிய மள்ளர் குல அறிஞர் பெருமக்கள் காட்டிய வழியில் திரு கு,செந்தில் மள்ளர் அவர்கள் மீண்டெழும் பாண்டியர் வரலாறு எனும் ஆய்வு நூலினை படைத்தளிக்க உள்ளார்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக