ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

தொடர் போராட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி





புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு கடந்த 2006 ம் ஆண்டில் மட்டும் நடந்தது என்று கணக்கில் கொள்ளக்கூடாது. கடந்த 20 வருடமாகவே தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் செயல்பாடு முழுக்க முழுக்க சந்தேகத்திற்கு உரியவகையில் உள்ளது.

எனவே தமிழ்நாடு தேர்வு ஆணையத்தில் கடந்த காலங்களில் பதவி வகித்த அதிகாரிகளையும் லஞ்சஒழிப்பு துறை முறையாக விசாரிக்கவேண்டும்.

தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்கள், தலைவர்களின் செயல்பாடுகளும் முடக்கி வைக்கப்படவேண்டும். அவர்களின் பணி முடக்கத்திற்கு எதாவது சட்ட விதி முறைகள் தடங்கலாக இருக்கும் பட்சத்தில் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து, அல்லது உச்ச நீதி மன்றம் மற்றும் ஜனாதிபதியை அணுகி 14 பேரையும் இடைக்கால பணிநீக்கம் செய்து, அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

தமிழக தேர்வு ஆணையத்தின் நடவடிக்கைகள் தடைபடாமல் இருக்கும் வகையில் உயர்நீதி மன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு குழு அமைத்து அனைத்து தேர்வு பணிகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும்.

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது நடைபெற்ற அத்துமீறல்களுக்கு நியாயம் கேட்கும் வகையில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக