ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

முத்துராமலிங்க (தேவர்) யார்?


1952-57க்கு இடைப்பட்ட காலத்தில் முத்துராமலிங்கம், முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது பர்மா நாட்டிற்கு சென்றிருந்தார். அஞ்சாறு மாசமாய் ஆள் பர்மாவிலேயே இருந்து முருகன் புகழைப் பேசியபடியே இருந்து விட்டார். இங்கோ பெருமழையும் புயலும் வந்து ராமநாதபுரம் மாவட்டமே வெள்ளத்தில் மிதந்தது. நிவாரணப்பணிகள் எதனையும் செய்திடவோ, மேற்பார்வையிடவோ தேவர் அங்கில்லை. அமைச்சர் குழுவினர் முதல்வர் காமராஜ் தலைமையில் ஓடியாடி வேலைகளைக் கவனித்தனர். அச்சமயத்தில்தான் ஓர் ஊருக்கு சென்று மக்களை சந்திக்க காமராஜர் வெள்ளத்தில் நீந்திச்சென்ற சம்பவமும் நடந்தது. எல்லாம் முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியபிறகு ஒரு நாள் சாகவாசமாய் பர்மப்பயணம் முடித்த பின்னர், தேவர் ஊர் திரும்பினார். அவருக்கு வரவேற்பும் கொடுத்தார்கள் அவரது அடிப்பொடிகள். ஊர் மக்களிடம் கேட்டார் " எல்லாப்பயலுகளும் வந்தானுங்களா? உதவி செய்யச்சொல்லி, நான் பர்மாவுல நேதாஜிகிட்டே (!! 1950களில்!!) சொன்னேன். அவரு டில்லிக்கு டிரங்கால் போட்டு நேருகிட்டே சொல்லிட்டாரு. அங்கிருந்து காமராஜ்கிட்டே உத்தரவு வந்து, நான் சொன்ன் வேலைகளைச் செஞ்சிருப்பாங்களே!"ன்னு ஒரே போடா போட்டாரு பாருங்க! அதுதான் முத்துராமலிங்க தேவரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக