ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 19 அக்டோபர், 2011

தமிழகத்தின் தென்மாவட்ட சாதிக்கலவரங்கள்:ஏன்? எதற்கு? எப்படி?



ஓட்டுக்களை பெறுவதற்காக சாதிய தலைவர்களை இணைத்துக் கொள்வதும், சாதிதலைவர்களுக்கு விழாக்கள் எடுப்பதையும் தொடங்கி வைத்ததில் தி.மு.கவுக்கு முதலிடம் எப்போதும் உண்டு. அதிலும் குறிப்பாக, சாதிய கலவரங்களுக்கு பெயர் போன மதுரையில் தி.மு.க தலைவர் கருணாநிதி எடுத்த நடவடிக்கை இன்று வரை சாதிகலவரத்திற்கான ஆணிவேராகவே நின்று கொண்டிருக்கிறது. மதுரையின் முக்கிய பகுதியான கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு சிலை வைக்க ஒரு நடவடிக்கையை சொல்லலாம். அந்த சிலையின் அடியில் சிலை திறப்பாளர் என்ற இடத்தில் கலைஞர்.மு.கருணாநிதி என்ற பெயர் இன்றும் நின்று கொண்டிருக்கிறது.
அக்டோபர் 30 ல் நடக்கும் பசும்பொன் முத்துராமலிங்கம் ஜெயந்தி விழா அன்று இந்த சிலை இருக்கும் இடத்தில் நடக்கும் வன்முறைகளுக்கும், நகரின் முக்கிய மருத்துவமனைகள் நிரம்பியிருக்கும் இந்த இடத்தில் போக்குவரத்தை முன்னெச்சரிக்கையான நிறுத்தும் அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் வன்முறைகள் நடைபெறுவது வழக்கமாகவே ஆகிவிட்டது. நெஞ்சுக்கு நீதி எழுதிய தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, இது போன்ற இடத்தில் சிலை அமைத்தால் அது கலவரங்களுக்கு வித்திடாது என்பது தெரியாதா? தெரியும். ஆனால் சுயலாபத்திற்காக இங்கு அமைக்கப்பட்ட சிலை இன்றும் கலவரத்திற்கான தூண்டுகோலின் அடிப்படை காரணமாக இருக்கிறது.
கடந்த ஆண்டு இந்த சிலை மீது ஒருவர் மலத்தை தூக்கி எறிந்து விட அது பெரும் பிரச்சினையை கிளப்பியது. குற்றவாளியை உடனே கைது செய்ய சொல்லி ஆங்காங்கே பெரும் போராட்டங்கள் நடந்தன. பொலீசுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது இந்த நிகழ்வுகள். பிரச்சினையை சமாளிக்க, மனநோயாளி ஒருவரை பிடித்து வைத்துக் கொண்டு " சிலையை அவமதித்த குற்றவாளி கைது" என்று கணக்கு காட்டினார்கள். மதுரையில் நடக்கும் கொள்ளை, வழிப்பறி குற்றங்களை தடுக்க வேண்டிய பணியை செய்ய வேண்டிய பொலீசார் பலர் இந்த சிலையை பாதுகாப்பதற்காகவே ஆண்டு முழுவதும் பணியாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. அதாவது மக்களின் லட்சக்கணக்கான வரிப்பணம் ஒரு சிலையை பாதுகாக்கும் பணிக்காக செலவிடப்படுகிறது. இது தான் தமிழ்நாட்டின் முக்கிய கட்சியான பகுத்தறிவு பகலவன் கருணாநிதி செய்த கைங்கரியம். இந்த சிலையை வைத்து பிரச்சினைகள் கிளம்பி விட்டால் சாகும் நிலையில் இருக்கும் நோயாளியை கொண்டு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ்கள் கூட இந்த வழியில் செல்ல முடியாத நிலை இன்றும் இருக்கிறது. இது தெரிந்து கடந்த தி.மு.க ஆட்சியில் மற்றொரு சாதிதலைவரின் சிலையையும் மதுரையில் திறந்து வைத்தனர். இது மதுரைக்கு நடந்த மற்றொரு கொடுமை.
மதுரை தெப்பக்குளத்தில், சிவகங்கை மாவட்டத்தில் தளபதிகளாக இருந்து பின்னர் மன்னர்களாக ஆக்கப்பட்ட மருதுசகோதரர்களுக்கு சிலை அமைக்கப்பட்டது. இதையும் தி.மு.க தலைவர் கருணாநிதி தான் திறந்து வைத்து தனது பகுத்தறிவு அரசியலுக்கு மற்றொரு உதாரணத்தை ஏற்படுத்தி விட்டு போனார். இந்த சிலை திறப்புக்கு பிறது மருதுசகோதரர்கள் ஜெயந்தி விழா என்ற கணக்கில் பொதுமக்கள் மதுரையின் கிழக்குபுற ஊர்களுக்கு போக முடியாத அளவுக்கு ஆண்டில் ஒரு நாளில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவது வழக்கமாகவே ஆகிவிட்டது.
இந்த சிலையை தி.மு.க தலைவர் கருணாநிதி திறந்து வைக்க ஒரு பின்னணியும் உண்டு. தி.மு.க வில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த தா.கிருஷ்ணன் கொலை வழக்கு பற்றி அனைவருக்கும் தெரியும். கருணாநிதியின் மூத்தமகனும், மதுரையின் பட்டத்து இளவரசர் போல் இருந்த அழகிரியின் தூண்டுதலால் தான் கொல்லப்பட்டதாக கூறப்படும் தா.கிருஷ்ணன் அகமுடையார் இனத்தை சேர்ந்தவர். இந்த இனத்து மக்களின் கோபத்தை தணிக்க தான் மருது சகோதரர்கள் சிலையை மதுரையில் தி.மு.க தலைவர் திறந்து வைக்கிறார் என்று மக்களிடம் பேச்சு எழுந்தது. ஆனால் அதைப்பற்றி கருணாநிதிக்கு என்ன கவலை? ஒரு பக்கம் கொலைப்பழியின் தீவிரத்தை குறைக்க வேண்டும். மற்றொரு புறத்தில் ஓட்டு வாங்க வேண்டும். இது தான் லட்சியம்.
இந்த சிலையை வாழ்த்தி கருணாநிதி பேசியது என்ன தெரியுமா? ' மருதுமன்னர்கள் மிகப்பலம் பொருந்தியவர்கள். அவர்கள் தங்கள் பெருவிரலால் ஒரு தடிமனான நாணயத்தை இரண்டாக மடித்து விடக்கூடியவர்கள்' - "இதை இவரிடம் யாராவது கேட்டார்களா? அல்லது இவர் மருதுபாண்டியர்கள் நாணயத்தை வளைக்கும் போது போய் பார்த்தாரா? - இப்படித்தான் அப்போது தி.மு.கவின் நியாயமான உடன்பிறப்புகள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டார்கள்.
ஜெயலலிதாவும் ஒரு காலத்தில் முக்குலத்தோர் இனத்திற்கு ஆதரவானவர் என்ற பேச்சு இருந்தது. இதை நிச்சயப்படுத்தும் வகையில் அவர் தனது உடன்பிறவா தோழியாக முக்குலத்தோர் இனத்தவர் என்று கூறப்படும் சசிகலாவை தனது குடும்பத்து உறுப்பினராகவே வைத்துக் கொண்டிருக்கிறார். சசிகலாவின் அக்காள் மகனையும் தனது வளர்ப்பு மகனாக கருதி திருமணமும் செய்து வைத்தார். இன்றளவும் அ.தி.மு.கவின் அரசியல் நடவடிக்கைகளில் சசிகலாவின் சாதி ஆதிக்க நடவடிக்கைகள் இருப்பதை மறுக்க முடியாது. மக்கள் ஆட்சிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் சில அதிகாரிகள் சசிகலா அல்லது இந்த இனத்தை சேர்ந்த அமைச்சர்களின் செல்வாக்கை பயன்படுத்தி நடவடிக்கைகளுக்கு உள்ளாகாமல் தப்பிப்பதாக இப்போதும் ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.
இதே இடத்தில் முக்குலத்தோருக்கு தன்னை நண்பனாக காட்டிக் கொண்ட கருணாநிதி, தலித் மக்களை எப்படி அணுகுவார் என்பது பரவலாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று. " எனது வீட்டு மருமகள் ஒரு தலித் தான்" என்று சில நேரங்களில் கலைஞர் கருணாநிதி பேசியிருப்பதை ஊடகங்களில் காணமுடிந்திருக்கிறது. அப்படி பேசப்பட்ட ஒரு இடம் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பான ஏதாவது ஒரு விழாவாக இருந்திருக்கும். இதே பாணியை மதுரை மேலூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் நிறைந்த பகுதிகளுக்கு சென்ற போது அழகிரியும் தனது மனைவியை அந்த மக்களிடம் காண்பித்து " என் மனைவியும் உங்க வீட்டு பிள்ளை" தான் என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் வந்த போது இந்த பேச்செல்லாம் எடுபடவில்லை என்பது தெரிந்து போனது.
. இப்படி குட்டி அமைப்பாக தொடங்கி இன்றைக்கு அரசியல்கட்சியாக தங்களை மாற்றிக் கொண்டு விட்ட சாதியக்கட்சிகள் நிறைந்த ஒரே நாடு தமிழ்நாடு தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக