நாள்: 22.10.2011
நேரம்: காலை 9.30மணி முதல் மாலை 6.00 மணிவரை
இடம்: ராஜா திருமண மண்டபம், ஒட்டப்பாலம் பேருந்து நிறுத்தம், பரமக்குடி
நேரம்: காலை 9.30மணி முதல் மாலை 6.00 மணிவரை
இடம்: ராஜா திருமண மண்டபம், ஒட்டப்பாலம் பேருந்து நிறுத்தம், பரமக்குடி
நாள்: 23.10.2011
நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை
நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை
பொது விசாரணையின் வரம்பு...
சாட்சியங்களைப் பதிவு செய்வது ஆவணங்களை திரட்டுவது விசாரணை செய்வது
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கான காரணங்களாக கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்த கருத்துகளின் நம்பகத்தன்மை.
மறைந்த இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுக்கு முன்னதாக இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள்; செப்டம்பர் 9ஆம் தேதி தலித் மாணவர் பழனிக்குமார் படுகொடுலை செய்யப்பட்ட சம்பவம், திரு. ஜான்பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் சிந்தாமணி, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ( ஐந்து முனை ரோடு), சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஆகிய இடங்களில் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழக்கவும், காயமடையவும் காரணமான சம்பவங்கள்.
படை பலத்தையும், துப்பாக்கிச் சூட்டையும் நிகழ்த்துவதற்கு முன்பு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பின்பற்றப்பட வேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கூறிய சம்பவங்களில் சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகளால் முறையாக கடைபிடிக்கப் பட்டதா என்பதை உறுதி செய்வது.
துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ நிவாரணம் வழங்கப்பட்டதா, கிராமப்பகுதிகளில் மக்களுக்கு கைது உட்பட்ட ஏதேனும் அச்சுறுத்தல் இருந்ததா என்பதையும் உறுதி செய்வது.
இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்ள அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்வது, மேற்கூறிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிப் பரிந்துரைப்பது.
அரசு இயந்திரத்தின் அங்கங்கள் செய்யும் உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக இயற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993-இன் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை முறையாக செயல்பட்டு வரும் நிலையில், விசாரணை கமிஷன் சட்டம் 1952-இன் கீழ் தமிழ்நாடு அரசு நியமித்திருக்கும் விசாரணை கமிஷனின் அவசியத்தைப் பரிசீலிப்பது.
இடைக்கால அறிக்கை வெளியீடு
நாள்: 23.10.11 ஞாயிறு
நேரம்: மாலை 3 மணி
இடம்: சேவியர் அரங்கம் 6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம் மதுரை-625002
தலைமை
நீதிபதி சுரேஷ் (முன்னாள் நீதியரசர், மும்பை உயர்நீதிமன்றம்)
உறுப்பினர்கள்
நீதிபதி சல்டானா முன்னாள் நீதியரசர், கர்நாடகா உயர்நீதிமன்றம்
திரு. பி.எஸ். கிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்.(ஓய்வு) முன்னாள் மத்திய அரசுச் செயலர்
முனைவர். வே. வசந்தி தேவி, முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், முன்னாள் தலைவர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்
திரு. கே. சுப்பிரமணியம், ஐ.பி.எஸ். (ஓய்வு) முன்னாள் காவல் துறை இயக்குனர், திரிபுரா
பேரா. பாலராம், முன்னாள் தலைவர், மாநில மனித உரிமைகள் ஆணையம், கேரளா
திரு. வி. கருப்பன், ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முன்னாள் தமிழ்நாடு அரசு செயலர்
திரு. ஆர்.பி. ஸ்ரீகுமார், ஐ.பி.எஸ். (ஓய்வு), முன்னாள் காவல் துறை இயக்குநர், குஜராத்
முனைவர். ஆர். ஜெ. ராஜ்குமார், சர்வதேச மனித உரிமைப் பயிற்சி ஆலோசகர், சென்னை
முனைவர். ரூத் மனோரமா, தேசிய ஒருங்கிணைப்பாளர், தேசிய தலித் பெண்கள் கூட்டமைப்பு
பேரா. நந்தினி சுந்தர், சமூகவியல் பேராசிரியர், தில்லி பல்கலைக்கழகம்
திருமிகு. சுதா ராமலிங்கம், மூத்த வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்
முனைவர். வி. கிருஷ்ணா ஆனந்த், வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம், பத்திரிக்கையாளர்
டாக்டர். சேவியர் செல்வ சுரேஷ், தடையவியல் துறை பேராசிரியர்
திரு. பொன்னீலன், தமிழ் எழுத்தாளர்
பேரா. கல்விமணி, மூத்த மனித உரிமைச் செயல்பாட்டாளர்
டாக்டர். மதிகரன், தடையவியல் துறை பேராசிரியர்
திரு. தியாகு, மூத்த மனித உரிமைச் செயல்பாட்டாளர்
- பரமக்குடி துப்பாக்கிச்சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு
ஒருங்கிணைப்பாளர்: பூ. சந்திரபோஸ், 2/448, வசந்தபுரம், பரமக்குடி - 623703
6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை-625002, தொலைபேசி: 0452-2539520, 2531874
ஒருங்கிணைப்பாளர்: பூ. சந்திரபோஸ், 2/448, வசந்தபுரம், பரமக்குடி - 623703
6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை-625002, தொலைபேசி: 0452-2539520, 2531874
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக