ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 19 அக்டோபர், 2011

துரோகத்தின் நூற்றாண்டும், தியாகத்தின் பொன்விழாவும்!


 


 
 
 

செப்டம்பர் 11: இந்த நாள் பலருக்கு பயங்கரவாதிகளால் அமெரிக்க இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்ட நாளாக நினைவிருக்கும்.

இன்னும் சிலருக்கு அமெரிக்கப் பயங்கரவாதத்தால் சிலி அதிபர் அலண்டே படுகொலை செய்யப்பட்டது நினைவு வரும்.

ஆனால் நம் நாட்டில், அதுவும் தமிழகத்தில் நடந்த ஒரு படுகொலையும், அதனைத் தொடர்ந்த கலவரமும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்குமா என்று சொல்லமுடியவில்லை.

தனக்கு நிகராக எதிரில் அமர்ந்து, தன்னால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுவோரைத் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதற்காக ஒருவர் கொல்லப் படக் கூடுமா?
கூடும் என்கிறது தமிழக வரலாறு...

1957 பொதுத் தேர்தாலையும், இடைத்தேர்தலையும் ஒட்டி, முதுகுளத்தூர் பகுதிகளில் எழுந்த கொந்தளிப்புகளை அடக்க மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டிய அமைதிக்கூட்டத்தில் தனக்கு நிகராக எதிரில் அமர்ந்து, தன்னால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுவோரைத் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதற்காக கொல்லப்பட்டவர்தான்...
தியாகி இம்மானுவேல் சேகரன்
ஊர் ஊராகச் சென்று தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு தன் 34-ஆவது வயதிலேயே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காகவே தியாக மரணத்தைச் சந்தித்த பெருமை இவருக்கு உண்டு.
'நீதானடா தேவருடன் சவால்விட்டுப் பேசியவன்' எனக்கத்திக் கொண்டே இம்மானுவேல்சேகரன் மீது தன் கொலை வெறியைத் தீர்த்துக்கொண்ட அந்தக் கூட்டம் யாரால் தூண்டப்பட்டது? அதன் தொடர்ந்து நடந்த கலவரங்களுக்கு காரணம் யார்?
தன்னைப் பின்பற்றிய மக்களை முழுக்க முழுக்க தனது சுயலாபத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு, அவர்களின் முன்னேற்றத்துக்கு எதிராகவே மாற்றியது யார்?
இன்னமும் தென் மாவட்டங்களில் தொடரும் ஜாதிக் கலவரங்களுக்கு அடையாளமாக நிற்பது யார்?
'சாணான் கட்டிய பள்ளியில் படிக்கப் போகாதீங்கடா' என்று காமராஜர் கட்டிய தமிழக அரசுப்பள்ளிகளில் படிப்பதை நிறுத்தச் சொல்லி, தன் இனத்துக்கே, தன்னை நம்பிய மக்களுக்கே துரோகம் செய்தது யார்?
வரலாற்றின் பக்கங்களில் தேடிப் பாருங்கள்..
இன்று புனித உருவம் கட்டப்பட்டு, தேசீயத் தலைவர் என்று புகழப்படும் ஒரு குறுகிய மனம் படைத்தவரை நோக்கி வரலாறு அழைத்துச் செல்லும்.
அவர் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரான பசும்பொன் திரு. உ.முத்துராமலிங்கம் ஆவார்.
விடுதலைப் போராட்ட வீரர், தீரர், போஸின் படைக்கு ஆள் அனுப்பியவர், ஆங்கில அரசால் வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டவர், தேசியமும் தெய்வீகமும் இரு கண்களென்றவர், மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் செல்ல வைத்தியநாத அய்யருக்கு பாதுகாப்பாக ஆள் அனுப்பியவர்...... இப்படியெல்லாம் எனக்கு பாடநூல்கள் வாயிலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்
 உ.மு.
சாந்தமான முகத்தோடும், நெற்றி நிரம்பிய பட்டையோடும், ஓவியர்களால் வரையப்பட்ட தலையின் பின்புறத்தில் சுற்றும் ஒளிவட்டங்களோடும் சில முறை... சிங்கத்தின் மேல் கை வைத்தபடி, வெறிக்கும் கண்களோடு வரையப்பட்ட ஓவியம் சிலமுறை என நான் பார்த்த தேவர் இருக்க... (அவரது பெயர் எனக்கு சிறு வயதிலிருந்தே அறிமுகம். ஒருங்கிணைந்த முகவை மாவட்டத்திலிருந்து, சிவகங்கையைத் தலைமையிடமாகக்
 கொண்டு எங்கள் மாவட்டம் எம்.ஜி.ஆர். அரசால் பிரிக்கப்பட்டபோது இடப்பட்ட பெயர் பசும்பொன் முத்துராமலிங்கனார் மாவட்டம். பின்னாளில் கலைஞரால் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் திருமகனார் மாவட்டம் என நீட்டி முழக்கப்பட்டது. எனது மாவட்டப் பெயர் என்ற வகையில் நான் அடிக்கடி புழங்கிய பெயர்.)
அவர் ஜாதி வெறியர் என்பதும், ஜாதி வெறியர்களின் பதாகை என்பதும் என்னுடைய புரிதலாக இருந்தது.
ஆனால் திரு.முத்துராமலிங்கம்(தேவர்) அவர்களின் உண்மை சொரூபத்தை எனக்குக் காட்டியது 'தினகரன்' நாளிதழின் நிறுவனரும், பன்னூல் ஆசிரியருமான திரு.தினகரன் அவர்கள் எழுதிய 'முதுகுளத்தூர் கலவரம்' என்னும் நூல். சில மாதங்களுக்கு முன்பு நான் படித்த அந்தப் புத்தகம்தான் தேவரின் முகத்திரையைக் கிழித்து, அவரது சுயநலப் போக்கிற்கு எவ்வாறு அந்த இனமே ஆளாக்கப்பட்டது என்பதைத்
 தெளிவுறுத்தியது.

"முதுகுளத்தூர் கலவரத்தின் போது எத்தனை உயிர்கள் இருபுறமும் பலியாகி இருக்கின்றன? குடிசைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன? தேவரைக் கைது செய்து சிறையிலடைக்கும் வரை தொடர்ந்த கலவரம், முத்துராமலிங்கத் தேவர் கைதைத் தொடர்ந்து அடங்கிப் போனதேன்?" என்று கேள்வி எழுப்புகிறது விடுதலை நாளேடு.
கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒரு தலைவர், கண்ணீர்த்துளி(தி.மு.க)த் தலைவர் ஒருவர், ஒரு காங்கிரஸ் கண்ணீர்த்துளி தலைவர் (அநேகமாக ம.போ.சி)என மூவர் தலைமையில் சமாதானக் குழு மதுரைக்குச் சென்று தேவரின் கைதைக் குறைகூறுவதை 'எலியும், பூனையும், நாயும் ஒரே தட்டில் சாப்பிடுவது போன்ற சர்க்கஸ். சாதி வெறியர்களுக்கு ஆதரவாக ஊர்வலமாம், கடையடைப்பாம், நிதி திரட்டாம், நீதி மன்ற
 வழக்காம்' என்று எள்ளி நகையாடுகிறது 'விடுதலை' நாளிதழ், விசாரணையின் தீர்ப்பு என்ற தலைப்பில்.(12.10.1957)
ஓட்டுக்காக என்று எல்லோரும் பயந்தபோது, கொஞ்சமும் கவலைப்படாமல் தந்தை பெரியார் தான் அன்றைய முதல்வர் காமராஜருக்கு ஆதரவாக இருந்தார். தைரியமாக களத்தில் இறங்கி, கலவரத்தை அடக்கிக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டையும் தேவர் கைதையும் முழுமையாக ஆதரித்தார். கீழத்தூவல் கலவரத்தின் போது போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்யாவிட்டால்
 இருபுறமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் அழிந்திருக்கும். ஆதிதிராவிடர்களின் குடிசைகள் எரிந்திருக்கும் என கவலை கொள்கிறார் பெரியார்.
"திரு. தேவர் அவர்களுக்கு கட்சியுமில்லை, கொள்கையுமில்லை. சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார் என்பது மட்டும் ஒரு கட்சிக்கு கொள்கைஆகிவிடுமா?" என்று கேள்வி எழுப்பும் பெரியார் ஒருவர்தான் முதுகுளத்தூர் கலவரத்தின் போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக நூலாசிரியர் தினகரன் விளக்குகிறார்.
ஆடு, மாடு திருட்டு வழக்கிலிருந்து, ஆளை மறித்துப் பணம் பிடுங்கிய கேஸ் வரைக்கும் எது எதற்கெல்லாம் அவர் பஞ்சாயத்துக்கு வந்தார்.. நிலம் பிடுங்கிய வழக்கு முதல், விசாரிக்க வந்த அரசு அலுவலர் கொலல வ்ரைக்கும் ஏற்கனவே என்னென்ன வழ்க்குகள், தீர்ப்புகள், நீதிபதிகள் திரு.முத்துராமலிங்கத்தின் நடத்தைக்கு வழங்கிய சான்றுகளும் விரவிக் கிடக்கின்றன.
ஒரு முறை கீழ்க் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் கோர்ட்டுக்குப் போனபோது... "ம்ம்ஹூம் பத்தாது..பத்தாது. இன்னும் கொஞ்சம் சேர்த்து ஜாமீன் வாங்கு " என்று தண்டனையை உயர்த்திய செய்திகளெல்லாம் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.
இப்படி ஒரு நபருக்குத்தான் நூற்றாண்டு விழாவாம், இன்னொரு பக்கத்தில் 100 அடி உயர சிலையாம், திருவிளக்காம், முடிகாணிக்கையாம்.
எமக்கு இருக்கும் வருத்தமெல்லாம் தன் இனத்துக்காக உயிரைத் தியாகம் செய்த இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் பொன் விழாவைவிட, தன் இனத்தின் முன்னேற்றத்தைத் தடுத்த ஒரு துரோகத்தின் நூற்றாண்டுவிழாவை அம்மக்களும் அரசுமே எடுக்கிறதே என்பதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக