ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

அ.தி.மு.க தி.மு.க.வை தவிர்த்து கூட்டு தலைமையில் புதிய அணி; டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி


தற்போதைய செய்தி
புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தை பிரதிபலிப்பதாக இல்லை. அதிகாரத்தை கைப்பற்றும் வகையிலும், பொருளாதாரத்தை சுரண்டும் வகையிலும் அமைந்தது. இது எந்த வகையிலும் ஜனநாயகத்தை வளர்க்க உதவாது.
இதையும் மீறி, உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட்டு, 11 ஒன்றிய கவுன்சிலர்கள், 4 நகராட்சி கவுன்சிலர்கள், 11 பேரூராட்சி கவுன்சிலர்கள், 60-க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர் பதவியிடங்களை பிடித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அ.தி.மு.க. அறிவித்தது.
அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த மற்ற கட்சிகள் எல்லாம் இணைந்து போட்டியிட்டிருந்தால் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும். தமிழகத்தில், அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத, கூட்டு தலைமையில் புதிய அணி அமைய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக