ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 27 அக்டோபர், 2011

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி !

தம்பி´ படத்தை சீமான் இயக்கிய போது அதில் ஒரு காட்சி. கதாநாயகன் வீட்டின்
சுவற்றில் தேவர் படம். புரட்சி பேசும் சீமான் தேவர் படத்தை வைத்திருக்கிறாரே
என்றொரு விவாதம் அப்போது எழுந்தது. பார்ப்பவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது
என்றொரு கேள்வி எழக்கூடும். ஆனால், பெரியாரின் பேரன் என சொல்லிக் கொள்ளும்
சீமான் தேவரை படத்தில் காட்டியதுதான் முக்கியத்துவமாகிறது. இவை குறித்து கீற்று
இணையதளத்தின் பேட்டியின் போது சீமானிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

"முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை
ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால்
உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து
இடம்பெறுகிறது..?"

[image:
http://2.bp.blogspot.com/_r2AE3uABVyI/SgUQcO4-PdI/AAAAAAAAAL8/EWjE1Jr...]

அதற்கு சீமான் சொல்கிறார்:

"கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள்
எதுவும் தெரியாது. ´தம்பி´ படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான்
என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும்
கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கை ரீதியா
வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக் கம்பத்தில்
பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட ´பார்வார்ட் பிளாக்´ கொடிதான்
என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப்
பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க
அறியாமல் நடந்த பிழைதான்."

இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சீமான் கியூபாவில் இருந்த
சேகுவாராவையும், இலண்டனில் இருந்த கார்ல் மார்க்சையும் அவர்களின்
தத்துவங்களையும் கரைத்து குடித்த ´தம்பி´க்கு தன் மாவட்டத்தில் தன் கிராமத்தில்
இருக்கும் தேவர்களின் ஆதிக்க வெறியையும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
பற்றிய உண்மைகள் எதுவும் தெரியாமல் போனதைக் குறித்து சீமான் கூடிய போது...

ஓகோ! சீமான் ´தொலைநோக்கு பார்வை´ உடையவர் போலும்! என்று சமாதானம் கொண்டோம்.

சரி, அண்ணன்களெல்லாம் தேவர் பெருமையை பற்றி சொல்லி உண்மையை புரிய வைத்து
விட்டார்கள். ´தம்பி´க்கு மீண்டும் வந்தது ஆவேசம். தமிழ் நாடு முழுவதும் ஓடி
ஓடி ஆவேசப்பட்டார். நான் ´பெரியாரின் பேரன்´, ´நான் பெரியாரையும் பிரபாகரனையும்
மட்டுமே தலைவர்களாக ஏற்றுக் கொண்டவன்´ என ஏகவசனம் பேச ஆரம்பித்தார்.

பெரியாரை தேசியப் போராட்டத் தியாகி என்றார்.

அண்ணன்மார்கள் ´தம்பி சொல்வதை தெளிந்து சொல்!´ என்று விளக்கம் கொடுத்தார்களா?
என்று தெரியவில்லை. பெரியார் தவறாக அடையாளப்படுத்தப்படுகிறார் என பதறிப்போய்
நாம் விளக்கம் கொடுத்தோம்....

´தம்பி´ தலித்தியம் பேசி குழப்பிய போது அண்ணன்கள் உண்மையை எடுத்து
சொன்னார்கள்....

´திராவிடம்´ என்பது வெத்துவாதம் என்ற போது மீண்டும் அண்ணன்மார்கள் பதறிப்போய்
விளக்கம் கொடுத்தார்கள். ´தம்பி´ இப்போதைக்கு பெரியாரின் திராவிடம் பற்றி வாயை
திறப்பதில்லை.

கவனியுங்கள் இப்போதைக்கு மட்டுமே!

சமீபத்தில் மும்பையில் 04.10.2009-இல் ´விழித்தெழு இளைஞர் இயக்கம்´ முப்பெரும்
விழா ஏற்பாடு செய்திருந்தது. பெரியார், அம்பேத்கர், காமராசர் என்ற முப்பெரும்
தலைவர்களை வாழ்த்தியும், தீண்டாமைக்கு எதிராகவும் வீர வசனம் பேசினார் தம்பி.

நமக்குத் தெரிந்தது தானே ´தம்பியின் தலித்தியப் பார்வை´ எப்படிப்பட்டது என்று.

´புதிய தலைமுறை´ பத்திரிக்கையில் சீமானோடு கலந்துரையாடல் செய்த கல்லூரி
மாணவர்களின் பேட்டி ஒன்று வெளியாகி இருந்தது.

"தமிழ்த் தேசியம் பேசும் நீங்கள் [சீமான்] ஏன் தலித்தியம் பேசுவதில்லை? அந்த
மக்கள் உங்க கண்களுக்கு தெரியலையா? என்றார்கள் கல்லூரி மாணவர்கள்

சீமான் சொல்கிறார்:

"நீங்கள் ஏன் சேரியிலேயே கொண்டு போய் பிரச்சனையை நிறுத்துகிறீங்க? நாங்க
ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் பேசுகிறோம். சாதியை மறந்து தமிழன் என்று ஒரு
சாதியாய் இணைவது பற்றி பேசினால் நீங்க திரும்பத் திரும்ப கொண்டு போய் சேரியில்
நிறுத்துறீங்க. சாதியை மறந்து வாங்க! பிறகு பாருங்க!"

சாதியை மறந்து வாங்க என்றவர், மும்பை முப்பெரும் விழாவில் சாதி குறித்து
பேசுகிறார்.. பேசுகிறார்... பேசிக் கொண்டே இருக்கிறார்...!

சரி பேசியவர் பிறகு என்னவானார்?

சாதியை மறந்து வாங்க என்றவர் ´தேவர் ஜெயந்தி´யில் அரசியல் ஓட்டுப்
பொறுக்கிகளுக்கு போட்டியாக கறுப்புச் சட்டையும் நெற்றியில் பட்டையுமாக
தேவருக்கு மாலை போட்டு இளித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கு அண்ணன்மார்கள் என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்கள்? தம்பி எப்படி
சமாளிக்கப் போகிறார்? நாம் எப்படி மீண்டும் கேணயன்களாக்கப்படப் போகிறோமோ! அது
ஓட்டுக்பொறுக்கி சீமானின் சாமர்த்தியமான வார்த்தைகளில் கிடக்கிறது.

தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, காமராசர் போன்ற தலைவர்களின் பிறந்த தினமும்,
நினைவு தினமும் தமிழ்சொற்களால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்க, தேவர் பிறந்த
தினமும், நினைவு தினமும் ´ஜெயந்தி´ என்ற சமஸ்கிருத வார்த்தையால் சொல்லப்படுவதன்
அரசியல் என்ன?

´ஜெயந்தி´ என்பது சமஸ்கிருத மொழியில் பிறந்தநாள் எனப் பொருள்படும். சாதாரண
மனிதர்களின் பிறந்தநாட்களை போல் வழக்கு இருக்கக் கூடாது என்பதற்காக கடவுள்
பிறந்த நாள்களும், மகான்களின் பிறந்த நாள்களும், ´ஜெயந்தி´ என்ற சமஸ்கிருத
வார்ததையால் சொல்லும் போது மேன்மை நிலையில் இருப்பதால் கிருஷ்ண ஜெயந்தி, காந்தி
ஜெயந்தி என கடவுள்களும், மகாத்மாக்களும் நினைவு கூறப்பட்டன. அதன்போக்கிலே தேவர்
கடவுளும், மகானுமாக தேவர் சமூகத்தால் வாழும் போதே கடவுளாக்கப்பட்டார் முத்து
இராமலிங்கத் தேவர்.

இன்றைய அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி தேவரை தூக்கி பிடித்து ஆடுகிறார்களே
என்னவென்று சொல்லி. அவர்களுக்கு தேவரின் உண்மை நிலை தெரியாதா என்ன? இருப்பினும்
இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகியாகவும், தேவர் இன மக்களின்
கடவுள்களாகவும் கருதப்படும் பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவரின் இந்திய தேசிய
சுதந்திரப் போராட்டத்தின் பங்களிப்புதான் என்ன?

அகிம்சை வழியில் போராடிய காந்தியின் சுதந்திரப்போராட்டத்தை விட ஆயுதம் தாங்கி
போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போசின் சுதந்திரப் போராட்டத்தில் ஈர்ப்பு கொண்டு
நேதாஜி தலைமையில் ஆங்கிலேயர்களை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு
தமிழகத்திலிருந்து தன் இனத்தைச் சேர்ந்த தேவர்களை பெரும் படையாக திரட்டி
அனுப்பிய செயலை தவீர்த்து வேறென்ன செய்தார் சுதந்திரப் போராட்டத்திற்கு?

அதுதான் போகட்டும்?

ஆங்கிலேயர் இந்தியாவில் தனது கட்டளைக்கும், உயர்நிர்வாகம் என்ற பெயரால் அடக்கி
ஆள்வதற்கும் அடியபணியாத இனக்குழுக்கள், நாடோடிகள், பாடித்திரியும் இனங்கள்
போன்ற மக்களை அடக்குவதற்கு
1871-ஆம் ஆண்டு "குற்றப் பரம்பரைச் சட்டம்“ [Crimainal Tribes Act] என்ற
அடக்குமுறைச் சட்டமொன்றைப் பிறப்பித்தது. 160-இனக் குழுக்கள் இந்தச் சட்டத்தின்
கீழ் பிறப்பிலேயே குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர். முதலில் வடக்கிலும், 1876-ஆம்
ஆண்டு வங்காளத்திலும் அமுல்படுத்தப்பட்டது.
1911-ஆம் ஆண்டு தமிழ்ப்பிரதேசத்தில் முதன்முதலாக "கீழக்குயில்குடி" என்ற ஊரில்
நடைமுறைப்படுத்தப்பட்ட போது ´குற்றப் பரம்பரைச் சட்டம்´ நீக்கப்பட வேண்டும்
என்றும், அம்மக்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும்
கோரிக்கைகளையும் முன்வைத்து தேவர் போராடினார். அதில் வெற்றியும் பெற்றார்.
ஆனால் நல்ல நோக்கத்திற்காக வென்றெடுத்த ´சமஉரிமைகள்´ சுயநலம் சார்ந்ததாக
மாறிவிட்டது.

ஐனநாயக நோக்கத்தோடு செயல்பட வேண்டிய தேவர் தன் சாதிக்கு முக்கியத்துவம்
கொடுத்தார். நேதாஜியின் கட்சியான ´பார்வர்டு பிளாக்´ மேற்கு வங்கம் மற்றும்
கேரளாவில் இடதுசாரி கட்சிக்களாக இருக்க தேவர் தமிழகத்தில் ஜாதி கட்சியாக
நடத்திக் கொண்டிருந்தார். ஹரிஜனங்கள் ஓட்டுப் போடக்கூடாது, மேல் சட்டை
போடக்கூடாது, கோவிலுக்குள் நுழைக்கூடாது என்று அதிகாரம் பேசும் யோக்கியதையை
மட்டும் வளர்த்துக் கொண்டு சாதி வெறி உணர்வோடு இருந்த தேவர் தாழ்த்தப்பட்ட
மக்கள் மீது கடுமையான வன்முறைகளை கையாண்டார்.

அவர் வாழ்ந்த காலங்களில் அவர் மீது எத்தனையெத்தனை கொலை வழக்கு இருந்தன என்பதை
கவனிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு முதுகுளத்தூர் கலவரம். பெரியார் கேட்கிறார்:

"முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன
செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலு
பேர் மீது வழக்குப்போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடும் செத்தவனும்
வந்து விடுவானா? தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து நான்
சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார்."

[03.11.1957-அன்று தஞ்சை தனி மாநாட்டில் தலைமை வகித்து பெரியார் அவர்கள் பேசிய
முன்னுரையில் இருந்து சில வாக்கியங்கள். திரு.எம்.பக்தவச்சலம் அறிக்கை குறித்து
பெரியார் பாராட்டி பேசியதை சுட்டிக்காட்டுவதற்காக இங்கே குறிப்பிடுகிறோம்.]

1957-அக்டோபர் 26-ந் தேதி தமிழ்நாட்டு சட்டசபையில் உள்துறை அமைச்சர்
திரு.எம்.பக்தவச்சலம் அறிக்கை சட்டசபையில் வாசிக்கப்படுகிறது. அதில்
முதுகுளத்தூர் கலவரம் பற்றிய செய்தியும், பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவர்
மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் பாருங்கள்.

தேவரின் பிறந்தநாளும், நினைவுநாளும் மகாத்மாவுக்கு நிகரான ஒரு பிம்பத்தை
தோற்றுவித்த அரசியலாக மாறியது எப்படி? அல்லது மாற்றப்பட்டது எப்படி?

பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவதாக வீராப்பு பேசும் கருணாநீதி ´தேவர்
ஜெயந்தி´ அன்று குடும்பத்தோடு மாலை போட ஓடுகிறார். ஜெயலலிதா தேவர் சமுகத்தை
சேர்ந்த சசிகலாவை இழுத்துக் கொண்டு ஒடுகிறார். வை.கோ தன் பங்குக்கு ஜால்ரா
அடிக்கிறார்.

இவர்களுக்கு தெரியாதா தேவரின் யோக்கியதை? தேவரின் மறுபக்கம் இருண்ட பக்கமல்ல.
தேவரின் ஒவ்வொரு வன்முறையும் அப்பட்டமான வெளிச்சத்தில் இருக்கின்றன.
இருப்பினும் தேவர் குறித்து தமிழ்சமூகம் கருத்துச் சொல்ல அஞ்சுகிறது.

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஓட்டுக்கள் தேவர் சமுகத்திடம் இருப்பதால்
குழைந்து கூத்தாடி தேவர் சமுகத்தினரின் காலை நக்கும் அரசியல் செய்கிறார்கள்.

1995,1996-இல் தென்மாவட்டப் பகுதியில் பேருந்து நிலையத்திற்கு தாழ்த்தப்பட்ட
சமுகத்தைச் சேர்ந்த ´தலித் தளபதி சுந்தரலிங்க´த்தின் பெயரை வைத்ததற்காக
பேருந்துக்களில் ஏறமாட்டோம் என்றும், பள்ளரின் பெயரை நீக்கு என்றும்
கலவரங்களில் ஈடுபட்ட போது முக்குலத்து சாதி வெறியர்களுக்கு பயந்து தமிழக அரசு
தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரையே தூக்கிவிட்டு முக்குலத்தாருக்கு ஆதரவாக
செயல்பட்டதும், அதே தமிழக அரசு மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்து
இராமலிங்க தேவரின் பெயரை வைத்து விசுவாசத்தை காட்டிக் கொண்டதும், தேவர்
நூற்றாண்டு விழாவின் போது பசும்பொன் தேவரின் தபால்தலையை வெளியிட்டு தமிழக அரசு
தன் ஒருபக்க சாதி ஆதரவை காட்டிக் கொண்டதும், எல்லாவற்றிற்கும் மேலாக தலித்திய
தலைவன் திருமா தேவர் ஜெயந்தி நூற்றாண்டை முன்னிட்டு 3-நாட்கள் விடுமுறை விட
வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொண்டதும்,

2008-இல் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தில்தலித்
மாணவர்கள் பாதிக்கப்பட்ட போதும் எந்த விசாரணையும் தீவிரப்படுத்தாமல் கலவரத்தில்
ஈடுபட்ட ஆதிக்க சாதியான தேவர் சமுகத்தின் பக்கம் தமிழக அரசு ஆதரவாக இருந்ததும்,

கடைசியாக காமெடியன் விவேக், நடிகை புவனேஸ்வரி பிரச்சனையில் ஊடகத்துறையைச்
சார்ந்த குடும்பத்தினரைக் குறித்து கேவலமாக பேசியதால் மீது அவதூறு வழக்கு
தொடுத்த ஊடகத்துறையினருக்கு பயந்துபோய் தனது சாதி [தேவர்] சங்கத்தில் இணைந்து
கொண்டு பாதுகாப்பு கோரியதையும், இன்னமும் நீதிமன்றத்தில் விவேக் அவதூறாக
பேசியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்ததும் ஆதிக்க
சாதியின் அட்டூழியங்கள் எந்தளவுக்கு ஒடுக்குமுறைகளுக்கு முன்னெடுக்கிறது
என்பதையும், அதற்கு அரசாங்கம் அனுசரித்து போவதையும் நாம் அவதானித்துக்
கொண்டுதானே இருக்கின்றோம்.

வெறும் ஓட்டுக்களுக்காக ´குலத்துக்கொரு நீதி´ கற்பித்த முக்குலத்தான் தேவரை
தூக்கிப்பிடித்து ஆடுகிறார்கள்; அவர்கள் அரசியல்வாதிகள் போய்த் தொலையட்டும்.

´பெரியாரின் பேரன்´ என்று தன்னையே வர்ணித்துக் கொள்ளும் சீமானுக்கு என்ன கேடு
வந்தது?

சீமான் நியாயமான உணர்வாளனாக பெரியாரின் பேரனாக இருந்திருந்தால் என்ன
செய்திருக்க வேண்டும்?

தேவர் சிலையை உடைத்துப் போட்டுவிட்டு வந்திருக்க வேண்டும்...!

செய்தாரா?

தேவர் சிலைக்கு மட்டுமா சீமான் மாலை போட்டார்? போராளி இமானுவேல் சேகரன் நினைவு
இடத்திலும் சீமான் மலர் வளையம் வைத்தார் என்றொரு கேள்வி எழக்கூடும்.

"தமிழ்ச்செல்வன் வீரமரணத்திற்கு இரங்கல் கவிதை- அவரைக் கொலை செய்த
ராஜபக்சேவுக்கும் பொன்னாடை என இரட்டை வேடம் போடும் கருணாநிதிக்கும்,
சீமானுக்கும் என்ன வேறுபாடு?"

"இமானுவேல் கேசரனுக்கும் மாலை; அவரைக் கொலை செய்த தேவருக்கும் மாலை"

அந்தோ பாவம்!

தம்பி சீமானை ஓட்டு அரசியல் எப்படியெல்லாம் ஆட்டம் போட வைக்கிறது?

வாசகர்களே! திரும்பவும் கீற்று கட்டுரைக்கு வருவோம்!

"கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள்
எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான்
என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும்
கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கை ரீதியா
வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக் கம்பத்தில்
பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும்
தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன்.
முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த
பிழைதான்" என்கிறார் சீமான்.

சரி, ´தம்பி´ படத்தில் தேவர் படத்தை தெரியாமல் தொங்கவிட்டு விட்டார். தேவர்
ஜெயந்தியில் பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி,
முத்துராமலிங்கத்தோட ´பார்வார்ட் பிளாக்´ கொடிதான் என்பதும் பெரியாரை
கேவலப்படுத்தியவர் சாதிவெறி பிடித்த தேவர் என்பதும் தெரிந்து தானே மாலை
போட்டார்.

பெரியார் மரணமடைந்தபோது - அதற்கு தமிழ்நாட்டில் இரங்கல் தெரிவிக்காத அமைப்புகள்
இரண்டு. ஒன்று சங்கரமடம், மற்றொன்று ´அகில இந்திய பார்வர்டு பிளாக்´. பார்ப்பன
அமைப்பு இரங்கள் தெரிவிக்காததன் காரணம் நமக்கு தெரிந்ததுதான். ´பார்வர்டு
பிளாக்´ அமைப்பைச் சேர்ந்த கள்ளர், தேவர், மறவர் சமூகத்தினர் ஏன் இரங்கல்
தெரிவிக்கவில்லை என்பதற்கு காரணம் 1957-இல் முதுகளத்தூரில் நடந்த கலவரத்தில்
நூற்றுக்கணக்கான சேரிகள் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள்
எரிக்கப்பட்டனர். சாதிப் போர் நடந்தது என்னும் அளவுக்கு மோசமான விளைவுகளை
ஏற்படுத்திய சம்பவம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடந்த கொடுமைகளைக் கண்டு காந்தியார் அறிக்கை
விட்டதோடு சரி. பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எந்த உதவியும்
செய்யவில்லை. பெரியாரோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்தார்.
"நூற்றுக்கணக்கான தலித் மக்கள் எரித்து கொல்லப்பட்டதற்கும், 19-தாழ்த்தப்பட்ட
மக்களை தேவர் இனத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்கும்
காரணமாக பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவரை கைது செய்ய வேண்டும்" என அப்போதைய
ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பெரியார் அழுத்தம் கொடுத்தார்.
அப்போதைய முதல்வராக இருந்த காமராசர் தேவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.

இச்சம்பவம் தமிழக்ததில் பெரிய கலவரத்தை உருவாக்கிய போதும் பெரியாரின் உதவியோடு
துணிந்து நின்று போராடினார் கமாராசர். அதனால் தான் காமராசர் இறந்த அன்று, ´கெடா
வெட்டி தீபாவளி கொண்டாடுங்கள்´ என்று தேவர் சமுகம் அறிவித்தது. பெரியார் இறந்த
போது அஞ்சலி செலுத்தாமல் அவமரியாதை செய்யும் பாவணையாக பார்வார்ட் பிளாக் கொடியை
பறக்கவிட்டது.

இத்தனையும் மிகத் தெளிவாக சொல்கிறார் சீமான்.

இதே சீமான் பெ.தி.க தோழர்களிடம் அடிக்கடி சொல்வார்:

"பெரியார் சொல்லை காமராசர் செயல்படுத்தியதைப் போல, நான் காமராசர் போல்
பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவேன்" என்று.

தம்பி ´புரட்சி செய்´, ´ரௌத்ரம் பழகு´, ´நையப்புடை´ என்று சொல்லிக்
கொண்டிருப்பாரே பெரியாரின் தொண்டர்களுக்கு...

தம்பி மாலையும் கையுமாக காரியத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறார்.
இருக்கட்டும்...

ஆனால், இனி எந்தக் கூட்டத்திலாவது ´பெரியாரின் பேரன்´ என்று தம்பி சீமான்
கூறுவாரேயானால், எங்கள் தோழர்கள் நையப்புடைக்கத் தயங்கமாட்டார்கள்.

"எந்த கூட்டத்திலாவது பெரியாரின் பேரனாகிய நான் என வீரவசனம் பேச ஆரம்பித்தால்
நாம் மீண்டும் மீண்டும் எழுத்துக்களால் நையப்புடைப்போம்..."

இவ்வாக்கியங்களை நினைவில் நிறுத்திக் கொண்டு சீமான் ´வீர வசனம்´ பேசட்டும்!

துரோகிகளே,

´பெரியாரை பெரியாராக இருக்க விடுங்கள்´ என்றுதான் கோருகிறோம். இன்னும் எத்தனை
காலத்திற்கு அரசியல் செய்ய உங்களுக்கு பெரியார் வேண்டும்?

சொல்லுங்கள் துரோகிகளே!
சொல்லுங்கள் புரட்டு கதை பேசும் புரட்டர்களே!!!

1 கருத்து:

  1. சாகும் தருவாயில் தன் வளர்ப்பு மகளை திருமணம் செய்த பெரியார் எந்தவிதத்தில் நல்லவர் என்று சொல்லுங்கள்?

    பதிலளிநீக்கு