ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்: பஸ்வான்

.
Paramakudi incident has cast a shadow on police, says Paswan - Tamilnadu News Headlines in Tamil




பரமக்குடி, செப். 21-
பரமக்குடி கலவரத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
பரமக்குடியில் கடந்த 11-ந் தேதி துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தை லோக் ஜன சக்தி நிறுவன தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது சமுதாய மக்கள் ஆண்டுதோறும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி பள்ளப்பச்சேரி கிராமத்தை சேர்ந்த மாணவன் கொலை செய்யப்பட்டான். ஆனால் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து அந்த சமுதாய மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஒரேநாளில் 6 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர். குறிப்பாக மார்பு பகுதியில் குறி வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதியை நேரில் சந்தித்து மனு அளித்துள் ளோம். காலம் தாழ்த்தாமல் 6 மாதத்திற்குள் இந்த விசாரணை முடியும் வகையில் தனிநீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும். வருகிற 28-ந்தேதி நாக்பூரில் தலித் மற்றும் சிறுபான்மையினர் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் பரமக்குடி சம்பவம் குறித்து விவாதிக்கப்படும். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. சமூக நீதிக்காக போராடிய மாநிலம் இது. பெரியார் போன்ற தலைவர்கள் வாழ்ந்த மாநிலமும் கூட. இந்த மாநி லத்தில் இத்தகைய சம்பவம் நடைபெற்றது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக