ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 28 ஜனவரி, 2012

கோவில்பட்டி நெல்லைக்கு 16 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அரசு பஸ் மீண்டும் இயக்கம்




email
கோவில்பட்டி நெல்லைக்கு 
16 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அரசு பஸ் மீண்டும் இயக்கம்
கடந்த 16 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அரசு பஸ்சை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். கோவில்பட்டியில் இருந்து கயத்தாறு, பன்னீர்குளம், மருதன்வாழ்வு, சீவலப்பேரி வழியாக நெல்லைக்கும், நெல்லையில் இருந்து புளியம்பட்டி, மருதன்வாழ்வு, கடம்பூர், காமநாயக்கன்பட்டி, துறையூர் வழியாக கோவில்பட்டிக்கும் இயங்கி வந்த அரசு பஸ் கடந்த 16 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்தது.
அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பஸ்நேற்று முதல் இயக்கப்பட்டது. கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நடந்த இதன் தொடக்க விழாவுக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி கொடி அசைத்து பஸ்களை இயக்கி வைத்தனர்.
விழாவில் அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்ட மேலாளர் கண்ணபிரான், கோவில்பட்டி கிளை மேலாளர் சங்கரநாராயணன், தூத்துக்குடி கிளை மேலாளர் கண்ணன், கோவில்பட்டி நகரசபை தலைவி ஜான்சிராணி, பஞ்சாயத்து யூனியன் தலைவி பேச்சியம்மாள், நகர அ.தி.மு.க. செயலாளர் விஜய பாண்டியன்,
ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சங்கர பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் ராமச்சந்திரன், புதிய தமிழகம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கனகராஜ், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் பெரியதுரை, பலர் கலந்துகொண்டனர்.

1 கருத்து:

  1. இந்த வழித்தடத்தில் ஏன் பேருந்து நிறுத்தப்பட்டது, அதன் பின்னால் ஏதேனும் செய்தி உள்ளதா?

    பதிலளிநீக்கு